முடி கருகருனு, அடர்த்தியா வளர ஆனியன் கருஞ்சீரக எண்ணெய்! இப்படி வீட்டிலேயே சிம்பிளாக தயார் செய்யலாம்

How to make onion black seed oil at home: முடி கருப்பாகவும், அடர்த்தியாகவும் வளர சில ஆரோக்கியமான எண்ணெய்களை உபயோகிப்பது அவசியமாகும். அவ்வாறே, வெங்காய எண்ணெய் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் இரண்டும் தனித்தனியே முறையே முடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் வெங்காயம் மற்றும் கருஞ்சீரக எண்ணெய் இரண்டையும் சேர்த்து பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
முடி கருகருனு, அடர்த்தியா வளர ஆனியன் கருஞ்சீரக எண்ணெய்! இப்படி வீட்டிலேயே சிம்பிளாக தயார் செய்யலாம்


How to make onion black seed oil: இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக இளைஞர்களிடையே காணப்படும் மன அழுத்தம் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இதில் முடி உதிர்தலும் அடங்கும். ஒவ்வொரு நாளும் சில முடிகள் உதிர்வது இயற்கையானதாக இருப்பினும், குறிப்பிடத்தக்க முடி உதிர்தலை புறக்கணிக்கக் கூடாது. இந்த பிரச்சனைகளிலிருந்து விடுபட சிலர் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் முடி பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர். ஆனால், சில சமயங்களில் இதில் சேர்க்கப்படும் இரசாயனங்கள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

எனினும், சரியான பராமரிப்பு மற்றும் எளிதான தீர்வுகள் மூலம் இந்தப் பிரச்சனையைத் தவிர்க்க முடியும். அவ்வாறே மென்மையான மற்றும் மீள்தன்மை கொண்ட அடர்த்தியான, ஆரோக்கியமான கூந்தலைப் பெறுவதற்கு ஒரு அற்புத சிகிச்சை முறையாக வெங்காய கருப்பு விதை எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இது பொதுவாக வெங்காய கலோஞ்சி எண்ணெய் என்றும் அழைக்கப்படுகிறது. இது முடி உதிர்தல் மற்றும் இன்னும் பல முடி சார்ந்த பிரச்சனைகள் அனைத்திற்கும் முற்றிலும் இயற்கையான தீர்வாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தரையைத் தொடும் அளவுக்கு முடி வேணுமா? இதோ வீட்டிலேயே செய்யப்பட்ட இந்த ஹெர்பல் ஆயிலை யூஸ் பண்ணுங்க

முடிக்கு வெங்காய எண்ணெய் தரும் நன்மைகள்

வெங்காயத்தில் உள்ள சல்பர் ஊட்டச்சத்துக்கள் முடி உதிர்வதையும் மெலிவதையும் தடுக்கும் என்று கூறப்படுகிறது. இவை முடி உதிர்வதையும் மெலிவதையும் குறைப்பதன் மூலம் அடர்த்தியான முடி வளர்ச்சிக்கு உறுதி அளிக்கிறது. இதில் உள்ள சல்பரின் உதவியுடன், வெங்காய எண்ணெய் மெதுவாக முடி நுண்ணறைகளுக்கு ஊட்டமளிக்கிறது.

மேலும் இது ஊட்டச்சத்து நிறைந்த முடி நுண்ணறைகளிலிருந்து ஆரோக்கியமான முடி மீண்டும் வளர்வதை ஊக்குவிக்கிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் முடி முன்கூட்டியே நரைப்பதை நிறுத்தவும் உதவுகிறது. இது தவிர, வெங்காய எண்ணெயின் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உச்சந்தலையில் தொற்றுகளைத் தடுக்க உதவுகிறது. இவை ஆரோக்கியமான முடியின் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க உதவுகிறது.

முடிக்கு கருஞ்சீரக எண்ணெய் தரும் நன்மைகள்

கருஞ்சீரக விதைகள் என்பது தெற்கு ஆசியாவில் பொதுவாகக் காணப்படும் பூக்கும் புதர் இனமான நிஜெல்லா சாடிவாவிலிருந்து பெறப்பட்ட மருத்துவ விதைகள் ஆகும். இது முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் சக்திவாய்ந்த இரசாயனங்கள் நிறைந்த சிறிய, கருப்பு விதைகளை உற்பத்தி செய்கிறது.

இந்த கருஞ்சீரக விதைகளில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை லினோலிக் அமிலம், புரதம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவற்றின் சிறந்த மூலமாகும். இவை அனைத்துமே ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு அவசியமானவையாகும்.

வெங்காய கருஞ்சீரக எண்ணெய் தயார் செய்யும் முறை

கருஞ்சீரக விதை எண்ணெயைத் தலைமுடிக்கு பயன்படுத்துவது அடர்த்தியான கூந்தலுக்கு பெரிதும் உதவுகிறது. இதை வெங்காய எண்ணெயுடன் சேர்த்து பயன்படுத்தும் போது கூடுதல் நன்மைகளை அளிக்கிறது. இந்த கலவையை எளிதான முறையில் தயார் செய்யலாம். இந்த இரண்டு எண்ணெய்களையும் சேர்த்து தடவுவது, முடி உதிர்தலைக் குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

இந்த எண்ணெய் கலவையைத் தயார் செய்ய, 1 டீஸ்பூன் கருப்பு விதை அல்லது கலோஞ்சி எண்ணெய் மற்றும் 1 டீஸ்பூன் வெங்காய எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை இரண்டையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலக்க வேண்டும். இதில் சூடான எண்ணெய் சிகிச்சையை விரும்புபவர்கள், இரட்டை கொதிகலன் முறையைப் பயன்படுத்தி இதை சிறிது சூடாக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: முடி பொசுபொசுனு அடர்த்தியா வளரணுமா? எலுமிச்சை தோலை இப்படி யூஸ் பண்ணி பாருங்க

வெங்காய எண்ணெயுடன் கருஞ்சீரக எண்ணெய் சேர்ப்பதன் நன்மைகள்

கருஞ்சீரக எண்ணெய் மற்றும் வெங்காய எண்ணெய் கலந்த கலவையானது முடி உதிர்தலைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது நீளமான, வலுவான முடியை ஊக்குவிக்கிறது.

இந்த இரண்டு எண்ணெய்களை இணைப்பதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய புரதங்களை வழங்குகிறது.

இந்த எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவது முடிக்கு ஆரோக்கியம் மற்றும் தோற்றத்தை மேம்படுத்துவதுடன், முடி உதிர்தலைக் குறைத்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • வெங்காய கருப்பு விதை எண்ணெயை சில துளிகளை எடுத்து, அதை உள்ளங்கைகளில் தேய்க்கலாம்.
  • பிறகு, தலைமுடி உதிர்ந்த அல்லது மெல்லிய திட்டுக்கள் உள்ள பகுதிகளில் குறிப்பாக கவனம் செலுத்தி, மெதுவாக எண்ணெயை உச்சந்தலையில் தடவ வேண்டும்.
  • இவ்வாறு தடவி எண்ணெய் குறைந்தது அரை மணி நேரம் இருக்குமாறு வைக்க வேண்டும். இது ஆழமாக உறிஞ்ச உதவுகிறது.
  • பின்னர், தலைமுடியை மென்மையான ஷாம்பூவால் கழுவி எண்ணெயை அகற்றலாம்.

(விரும்பினால், கூடுதல் ஈரப்பதத்திற்காக வெங்காய கருப்பு விதை எண்ணெய் மற்றும் தேனை சேர்த்து ஹேர் பேக்காகப் பயன்படுத்தலாம்)

  • சிறந்த விளைவுகளுக்கு, இதை வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை பயன்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Head massage: சும்மா தளதளனு முடி நீளமா வளரணுமா? உங்க முடியை இப்படி மசாஜ் செய்யுங்க

Image Source: Freepik

Read Next

கரு கரு கருப்பாயி.. காடு மாதிரி கட்டுக்கடங்காமல் முடி வளர இதை பயன்படுத்துங்க...!

Disclaimer