Black Seed Oil: கரு கரு முடிக்கு கருஞ்சீரக எண்ணெய்! எப்படி தயார் செய்யணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Black Seed Oil: கரு கரு முடிக்கு கருஞ்சீரக எண்ணெய்! எப்படி தயார் செய்யணும் தெரியுமா?


ஆனால் இதில் பல்வேறு இரசாயனங்கள் கலந்திருக்கலாம். இதற்கு ஒரு சிறந்த தீர்வாக வீட்டிலேயே உள்ள சில பராமரிப்புப் பொருள்களைப் பயன்படுத்தலாம். இவற்றின் மூலம் முடி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். அந்த வகையில் முடி பராமரிப்பில் கருஞ்சீரக விதைகள் பெரிதும் உதவுகிறது. இந்த கருஞ்சீரக விதைகளைப் பல்வேறு வழிகளில் தலைமுடிக்குப் பயன்படுத்தலாம். இதில் கருஞ்சீரக விதைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் எண்ணெயை முடிக்கு பயன்படுத்தும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Protein Rich Foods: கூந்தல் டிரிபிள் மடங்காக வேகமா வளர இந்த புரோட்டீன் உணவுகளைச் சாப்பிடுங்க

கருஞ்சீரக எண்ணெய்

நைஜெல்லா சாடிவா தாவரத்தின் விதைகளிலிருந்து கருஞ்சீரக விதை பெறப்படுகிறது. இந்த பொதுவான கருஞ்சீரக விதைகள் ஆனது, கருப்பு விதைகள் அல்லது கலோஞ்சி விதைகள் எனவும் அழைக்கப்படுகிறது. இது உடல் எடையிழப்புக்கு மிகச்சிறந்த தேர்வான ஒன்றாகும். இந்த கருஞ்சீரக விதைகளைக் கொண்டு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. இது கருஞ்சீரக எண்ணெய் என்றழைக்கப்படுகிறது. இந்த எண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துவது கருப்பான நிறத்திலான கூந்தலைத் தருவதுடன், பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.

தலைமுடி வளர்ச்சிக்கு கருஞ்சீரக எண்ணெய்

கருஞ்சீரக எண்ணெய் தலைமுடி வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல், பல்வேறு வகையான தலைமுடி பிரச்சனைகளுக்குச் சிறந்த தீர்வாக அமைகிறது.

கருஞ்சீரக எண்ணெய் தயாரிக்கும் முறை

  • கருஞ்சீரகத்தைக் கொண்டு எண்ணெய் தயார் செய்ய, முதலில் அரை கப் அளவிலான கருஞ்சீரக விதைகளைப் பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின் இதை கிருமி நீக்கம் செய்யப்பட்ட பாட்டிலில் எடுத்துக் கொள்ளலாம்.
  • அதன் பிறகு 1 கப் அளவிலான பாதாம், ஆர்கன் அல்லது தேங்காய் எண்ணெயைச் சேர்க்க வேண்டும்.
  • இதில் பாட்டிலில் எண்ணெய் கருமை நிறமாக மாறும் வரை கலக்க வேண்டும்.
  • பிறகு இதை சூடான இடத்தில் இரண்டு வாரங்கள் வரை விட்டு விடலாம்.
  • அதன் பின், விதைகளை வடிகட்டி, மீண்டும் எண்ணெயை பாட்டிலில் ஊற்றி விட வேண்டும்.
  • இது தவிர, கருஞ்சீரக எண்ணெயை மற்ற எண்ணெய்களுடன் கலக்காமல் நேரடியாக உச்சந்தலையில் தடவலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Garlic Oil for Hair: புல்லட் வேகத்தில் முடி வளர பூண்டு எண்ணெயை இப்படி வீட்டிலேயே தயார் செய்யுங்க!

கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்துவதன் நன்மைகள்

கூந்தலுக்கான இயற்கை வைத்தியங்கள் பல இருப்பினும், கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்துவது முடி உதிர்தல் மற்றும் உச்சந்தலையில் பல்வேறு நிலைமைகளுக்கு உதவுவதாக கூறப்படுகிறது. இதில் முடிக்கு கருஞ்சீரக விதை தரும் நன்மைகளைக் காணலாம்.

முடி வளர்ச்சியை மேம்படுத்த

கருஞ்சீரக எண்ணெய் முடி வளர்ச்சி சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது. புரோஸ்டாக்லாண்டின் D2 போன்ற முடி உதிர்தலுடன் தொடர்புடைய ஹார்மோன் போன்ற கலவைகள் மற்றும் புரதங்களின் உற்பத்தியைத் தடுக்க கருஞ்சீரக எண்ணெய் உதவுகிறது. இதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பராமரிக்கலாம்.

வீக்கத்தைக் குறைக்க

நுண்ணறை அழற்சி என்பது அலோபீசியா அரேட்டா போன்ற தன்னுடல் தாக்க முடி உதிர்தல் நிலைகளின் முக்கிய அறிகுறியாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் கருஞ்சீரக எண்ணெய் பயன்பாடு வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் அலோபீசியா அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.

ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க

ஆக்ஸிஜனேற்ற அழுத்தமும் தன்னுடல் தாக்க முடி உதிர்தல் நிலையான அலோபீசியா அரேட்டாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது செல்லுலார் பாதிப்பை ஏற்படுத்தி, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. கருஞ்சீரக எண்ணெய் மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஆக்ஸிஜனேற்றிகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது.

தடிப்புத்தோல் அழற்சி குறைய

உச்சந்தலையில் தடிப்புத் தோல் அழற்சி என்பது ஒரு தன்னுடல் தாக்க நிலையைக் குறிக்கிறது. இதில் உச்சந்தலையில் மற்றும் கழுத்தில் அதிகப்படியான தோல் செல்கள் வளர காரணமாகிறது. இது சருமத்தில் சிவப்பு திட்டுகள், செதில்களாக வெளிப்படுகிறது.

இவ்வாறு பல்வேறு நன்மைகளைத் தரும் கருஞ்சீரக எண்ணெயைத் தலைமுடிக்குப் பயன்படுத்தலாம். இதன் மூலம் முடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகரித்து முடி வளர்ச்சியை ஊக்குவிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Black Cumin Seeds For Hair: கரு கரு அடர்த்தியான முடிக்கு கருஞ்சீரகத்தை இப்படி யூஸ் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Biotin for Men: ஆண்களின் முடி வளர்ச்சிக்கு பயோட்டின் உதவுமா? பதில் இங்கே!

Disclaimer