Black Seed For Diabetes: சர்க்கரை அளவு டக்குனு குறைய உதவும் கருஞ்சீரகம். இப்படி எடுத்துக்கோங்க போதும்

  • SHARE
  • FOLLOW
Black Seed For Diabetes: சர்க்கரை அளவு டக்குனு குறைய உதவும் கருஞ்சீரகம். இப்படி எடுத்துக்கோங்க போதும்


How To Take Karunjeeragam For Diabetes: இன்று பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்று நீரிழிவு நோயாகும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழி, சரியான உணவை எடுத்துக் கொள்வதேயாகும். நீரிழிவு நோயில் பல வகைகள் உள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான நபர்கள் பாதிக்கப்படுவது டைப் 2 நீரிழிவு நோயாகும். இதில் உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவது அல்லது சரியாக பயன்படுத்த முடியாத சூழல் உருவாகிறது.

இதன் காரணமாக, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. இந்த டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் சிறந்த வழியாக கருஞ்சீரக விதை எண்ணெய் கருதப்படுகிறது. இது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த எண்ணெயைப் பயன்படுத்துவது உடலில் இன்சுலின் உற்பத்தியை மேம்படுத்தி இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes management: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் இதை செய்தால் போதும்!!

கருஞ்சீரக எண்ணெய் தரும் நன்மைகள்

கருஞ்சீரக விதைகள் ஆயுர்வேதத்தில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இது பல்வேறு நோய்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்த விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெய் மிகவும் நன்மை வாய்ந்ததாகும். இந்த எண்ணெயில் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள், அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளது. இந்த வகையான பல்வேறு பண்புகளுடன் நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை தருகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் தரும் நன்மைகள்

நீரிழிவு நோயாளிகளுக்கு கருஞ்சீரக எண்ணெய் எப்படி உதவுகிறது என்பது பற்றி தெரியுமா? சர்க்கரை நோயினால் உடலில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சனைகளையும், கருஞ்சீரக எண்ணெய் கொண்டு குணப்படுத்தலாம். இதில் நீரிழிவு நோயாளிகளுக்கு கருஞ்சீரகம் தரும் நன்மைகள் குறித்து காணலாம்.

  • நீரிழிவு நோயாளிகள் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்வது இரத்த சர்க்கரையைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.
  • இது உடலில் இன்சுலின் உற்பத்தியை சரியாக செயல்பட வைக்கிறது.
  • கணைய அழற்சியைக் குறைக்க கருஞ்சீரக எண்ணெய் உதவுகிறது.
  • நரம்பியல், கண்புரை, நெஃப்ரோபதி, பெருந்தமனி வெடிப்பு மற்றும் இதய கோளாறு போன்ற பல பிரச்சனைகளை நோயாளியில் உடலிலிருந்து நீக்கும் திறனைக் கருஞ்சீரக எண்ணெய் கொண்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Brown Sugar For Diabetes: சர்க்கரை நோயாளிகள் நாட்டுச் சர்க்கரை சாப்பிடுவது நல்லதா?

கொலஸ்ட்ராலைக் குறைக்கும் கருஞ்சீரக எண்ணெய்

சர்க்கரை நோய்க்கு மட்டுமல்லாமல், இதய ஆரோக்கியத்திற்கும் கருஞ்சீரக எண்ணெய் உதவுகிறது. இதற்குக் காரணம் கருஞ்சீரக எண்ணெய் உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைப்பதே ஆகும். இந்த எண்ணெயை 4 வாரங்களுக்கு தினமும் இருமுறை வீதம் பயன்படுத்துவதன் மூலம் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

இது உடலில் உள்ள எல்டிஎல் என்ற கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் டிரைகிளிசரைடுகள் என்ற இரத்தக் கொழுப்பைக் குறைக்கிறது. இதன் மூலம் நீரிழிவு நோய் மற்றும் இதய ஆரோக்கியம் இரண்டிற்கும் கருஞ்சீரகம் உதவுகிறது.

கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்தும் முறை

கருஞ்சீரக எண்ணெய் எடுத்துக் கொள்ளும் முறை குறித்து Webmd-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி, நீரிழிவு நோயாளிகள் 1 கிராம் கருஞ்சீரக விதை பவுடரை ஒரு நாளைக்கு இரு முறை எடுத்துக் கொள்ளலாம். கருஞ்சீரக எண்ணெய் பயன்படுத்த விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு இருமுறை 450mg அளவு எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் நரம்பு மற்றும் பாதம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பின், கருஞ்சீரக எண்ணெயைச் சருமத்தில் தடவி மசாஜ் செய்யலாம். இந்த எண்ணெய் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுவதுடன், பாதுகாப்பானதாகவும் கருதப்படுகிறது. எனினும், நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்திற்கு வேறு சில மருந்துகளை எடுத்துக் கொள்பவர்கள், இந்த எண்ணெய் பயன்படுத்துவது பயனற்றதாக்கலாம். எனவே இதைப் பயன்படுத்தும் முன்பு மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Puffed Rice For Diabetes: சுகர் இருந்தா பொரி சாப்பிடக் கூடாது. ஏன் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Diabetes management: இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க தினமும் இதை செய்தால் போதும்!!

Disclaimer