உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
உடல் எடை மட்டுமல்ல, எந்த நோயும் வராம இருக்க கருஞ்சீரகம் ஓமம் வெந்தயத்தை இப்படி எடுத்துக்கோங்க


அந்த வகையில், உடல் எடை குறைய கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கலந்த கலவை சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. இந்த மூன்று உணவுப்பொருள்களும் தனித்தனியே முறைய பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவை உடல் எடை குறைப்பு முதல் நீரிழிவு, இதய நோய் மற்றும் மாதவிடாய் பிரச்சனை உள்ளிட்ட பெரும்பாலான பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இதில் கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு பொடி தயார் செய்யும் முறை மற்றும் அதன் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Soaked Mangoes: மாம்பழங்களை சாப்பிடும் முன் ஏன் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடணும் தெரியுமா?

கருஞ்சீரகம்-ஓமம்-வெந்தயம் பொடி தயார் செய்வது எப்படி?

எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக கருஞ்சீரகம், வெந்தயம், ஓமம் கொண்டு தயார் செய்யப்படும் பொடி அமைகிறது.

தேவையான பொருள்கள்

  • வெந்தயம் - 250 கிராம்
  • ஓமம் - 100 கிராம்
  • கருஞ்சீரகம் - 100 கிராம்
  • பெருங்காயம் - 2 தேக்கரண்டி
  • உலர் இஞ்சி பவுடர் - 3 தேக்கரண்டி

கருஞ்சீரக பொடி தயார் செய்யும் முறை

  • முதலில் கடாய் ஒன்றை எடுத்து, அதில் வெந்தய விதைகளை ஒரு நிமிடம் வறுத்து, வறுத்த வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பின் இதை தனியாக ஆற விட வேண்டும்.
  • அதன் பிறகு கருஞ்சீரகம் மற்றும் ஓமத்தை தனித்தனியே முறையே இதே போல வறுத்துக் கொள்ள வேண்டும்.
  • இந்த மூன்று வறுத்த பொருள்களையும் கலந்து உலர் இஞ்சி பவுடர் மற்றும் பெருங்காயம் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இதை நன்றாக அரைத்து பொடியாக்க வேண்டும். இதை காற்று புகாத கொள்கலனில், குளிர்ந்த இடத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Turmeric And Ginger: இஞ்சி மற்றும் மஞ்சளை ஒன்றாக எடுத்துக் கொள்வது நல்லதா? கெட்டதா?

கருஞ்சீரகம், ஓமம், வெந்தய பொடியின் நன்மைகள்

நச்சுக்களை வெளியேற்ற

கருஞ்சீரகம், ஓமம், வெந்தயம் கொண்டு தயார் செய்யப்படும் இந்த பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினந்தோறும் சாப்பிட்டு வருவது, உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.

செரிமான பிரச்சனைக்கு

வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் பொடியை உட்கொள்வது செரிமான ஆற்றலை மேம்படுத்துகிறது. இது அஜீரணம், அசிடிட்டி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க உதவுகிறது.

உடல் எடையைக் குறைக்க

இந்தப் பொடியை தினமும் வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வர உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம். குறிப்பாக இது தொப்பைக் கொழுப்பைக் குறைக்க சிறந்த தேர்வாகும். இது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி உடல் எடையை வேகமாகக் குறைக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Energizing Foods: பட்டயக் கிளப்பும் வெயிலிலும் உற்சாகமா இருக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க

எலும்புகள் வலுவாக

இந்த மூன்று பொருள்களும் எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இது மூட்டு வலி பிரச்சனையிலிருந்து நிவாரணம் தருகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு

வெந்தயம், ஓமம் மற்றும் கருஞ்சீரகப் பொடியை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடிப்பது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதனை உட்கொள்வது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

கருஞ்சீரகம், ஓமம், வெந்தயப் பொடி உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இவற்றை உட்கொள்வதன் மூலம் பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் அளவுக்கு அதிகமா பாதாம் சாப்பிடுவதில் இத்தனை விளைவுகள் இருக்கா?

Image Source: Freepik

Read Next

Empty Stomach Food: காலையில் வெறும் வயிற்றில் எதை சாப்பிடலாம்? ஆரோக்கியமா இருக்க இதை சாப்பிடுங்கள்!

Disclaimer