Soaked Mangoes: மாம்பழங்களை சாப்பிடும் முன் ஏன் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடணும் தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Soaked Mangoes: மாம்பழங்களை சாப்பிடும் முன் ஏன் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடணும் தெரியுமா?

உடல் ஆரோக்கியத்தைத் தவிர, முடி மற்றும் சரும ஆரோக்கியத்திலும் மாம்பழம் சிறந்த நன்மை தருகிறது. மாம்பழங்களை சாப்பிடும் முன்னதாக அதை தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைப்பதை கவனித்திருக்கிறீர்களா? ஆம். மாம்பழங்களை உண்ணும் முன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இது இரசாயனங்கள் மற்றும் அழுக்குகளை அகற்றுவது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தைப் பாதிக்கும் அறிவியல் காரணங்களையும் கொண்டுள்ளது. அதைப் பற்றி இதில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் அளவுக்கு அதிகமா பாதாம் சாப்பிடுவதில் இத்தனை விளைவுகள் இருக்கா?

மாம்பழங்களை சாப்பிடும் முன் ஏன் ஊறவைக்க வேண்டும்?

பைடிக் அமிலத்தைத் தவிர்ப்பது

மாம்பழம் பைடிக் அமிலம் என்ற இயற்கை மூலக்கூறைக் கொண்டுள்ளது. இது ஊட்டச்சத்துக்கு எதிரானதாகக் கருதப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது மற்றும் தீங்கு விளைவிக்கும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். பைடிக் அமிலம் துத்தநாகம், கால்சியம், இரும்பு போன்ற தாதுக்களை உறிஞ்சுவதைத் தடுக்கிறது. இதனால் தாதுப் பற்றாக்குறை ஏற்படலாம். இதற்கு சில மணி நேரம் மாம்பழங்களை ஊறவைக்க வேண்டும். இவ்வாறு செய்வது பழத்தில் உள்ள அதிகப்படியான பைடிக் அமிலத்தை அகற்ற உதவுகிறது.

வெப்பத்தைத் தணிக்க

உடல் சூட்டை அதிகரிக்கும் பழங்களில் ஒன்று மாம்பழம் ஆகும். இதனால் தெர்மோஜெனீசிஸ் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால், மாம்பழத்தை அதிகளவு உட்கொள்வது வெப்பத்தை அதிகரித்து, செரிமான சமநிலையின்மை பிரச்சனையை ஏற்படுத்தலாம். மாம்பழங்களை ஊறவைப்பது, தெர்மோஜெனிக் பண்புகளை குறைக்க உதவுகிறது. இதன் மூலம் வயிற்றுப்போக்கு மற்றும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

நோய்களைத் தவிர்க்க

மாம்பழத்தை ஊறவியத்து சாப்பிடுவது தலைவலி, மலச்சிக்கல் மற்றும் பிற குடல் தொடர்பான பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. மாம்பழங்களஒ ஊறவைப்பதற்கான முக்கிய காரணம் மாம்பழங்களைப் பாதுகாக்க பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகளை அகற்றுவதாகும். இவை நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால், சுவாசக்குழாய் எரிச்சல், கண் மற்றும் சருமத்தில் எரிச்சல், ஒவ்வாமை உணர்திறன் போன்றவற்றை ஏற்படுத்தும். மேலும் இது புற்றுநோய் உயிரணுக்களின் வளர்ச்சியையும் அதிகரிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Eyesight Improve Foods: நல்ல தெளிவான, ஆரோக்கியமான கண்களைப் பெற உதவும் டாப் உணவுகள் என்னென்ன தெரியுமா?

எடை இழப்பை ஊக்குவிக்க

மாம்பழத்தில் பைட்டோ கெமிக்கல்கள் அதிகம் உள்ளது. இந்த பைட்டோ கெமிக்கல்ஸ் மற்றும் பயோஆக்டிவ் சேர்மங்கள், உடலில் கொழுப்பு செல்கள் மற்றும் கொழுப்பு தொடர்பான மரபணுக்களை அடக்கலாம் எனக் கூறப்படுகிறது. இவற்றை ஊறவைப்பதன் மூலம் அதன் செறிவு குறைகிறது. இவை இயற்கையான கொழுப்பை நீக்கி செயல்பட வைக்கிறது. எடைக்கட்டுப்பாட்டைத் தவிர, வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு எதிராக பாதுகாப்பையும் பைட்டோ கெமிக்கல்கள் வழங்குகிறது.

மாம்பழத்தை எவ்வளவு நேரம் ஊறவைக்க வேண்டும்?

உடனடியாக மாம்பழத்தை சாப்பிட விரும்புபவர்கள் குறைந்தபட்சம் 15 நிமிடம் முதல் 30 நிமிடங்கள் வரை ஊறவைக்கலாம். இல்லையெனில் மாம்பழங்களை 1 முதல் 2 மணி நேரம் ஊறவைப்பது நல்லது. நீண்ட நேரம் ஊறவைப்பதில் எந்த தீய விளைவுகளும் ஏற்படாது. இவ்வாறு கணிசமான நேரத்தில் ஊறவைப்பதன் மூலம் மேலே கூறப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஏன் வால்நட்டை ஊறவைத்து சாப்பிடணும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

Cold Water: வெயிலில் இருந்து வந்தவுடன் பிரிட்ஜ் வாட்டர் குடிப்பது எவ்வளவு ஆபத்து தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்