இரவு தூங்கும் முன் பாலில் ஊறவைத்த உலர்திராட்சையைச் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Health benefits of drinking raisins soaked milk: இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக ஒரு டம்ளர் அளவிலான வெதுவெதுப்பான பால் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. குறிப்பாக, இதில் சிறிது உலர் திராட்சை சேர்ப்பது நன்மை பயக்கும். இதில் வெதுவெதுப்பான பாலில் உலர் திராட்சையை ஊறவைத்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
இரவு தூங்கும் முன் பாலில் ஊறவைத்த உலர்திராட்சையைச் சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?


Can we eat raisins with milk at night: அன்றாட உணவில் ஆரோக்கியமான உணவுகள், காய்கறிகள், பழங்கள், பானங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக, காலை மற்றும் இரவு நேரங்களில் எடுத்துக் கொள்ளக்கூடிய பானங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். இதில் சிலர் ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக பால் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்கின்றனர்.

ஏனெனில், இரவு தூங்கும் முன்பு பால் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது. அதே சமயம், வெறும் பால் குடிப்பதற்கு பதிலாக சில அத்தியாவசிய பொருள்களைச் சேர்ப்பது உடலுக்குக் கூடுதல் நன்மைகளைத் தருகிறது.

பாலுடன் உலர் திராட்சை சேர்ப்பது

நம்மில் சிலர் பாலை அப்படியே கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பினும், இன்னும் சிலர் பாலை ஒரு சிட்டிகை மஞ்சள், தேன், வெல்லம் அல்லது பேரீச்சம்பழத்தைச் சேர்க்கும் பழக்கத்தைக் கொண்டுள்ளனர். ஆனால், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பால் மற்றும் திராட்சையைச் சேர்த்து சாப்பிட்டிருக்கிறீர்களா?

ஆம். உண்மையில், இரவில் பாலுடன் திராட்சையை உட்கொள்வது உடலுக்குப் பல ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பாலுடன் உலர் திராட்சையை உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: மீந்து போன சப்பாத்தியை இரவு முழுக்க பாலில் ஊறவைத்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

உண்மையில், பால் மற்றும் திராட்சை இரண்டுமே பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவையாகும். பாலில் புரதம், வைட்டமின்கள் மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன. அதே சமயம், திராட்சையில் கால்சியம், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் மற்றும் தாமிரம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இந்த சூழ்நிலையில், இவை இரண்டையும் ஒன்றாக உட்கொள்வது பல மடங்கு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

பாலில் ஊறவைத்த உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

உடல் வலிமையை மேம்படுத்த

இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக பாலில் திராட்சையை சேர்த்து உட்கொள்வது உடலுக்கு உள்ளிருந்து சக்தியை அளிக்கிறது. உண்மையில், பால் மற்றும் திராட்சை இரண்டுமே நல்ல ஆற்றல் மூலங்களாகும். இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்வது உடலில் சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் இது உங்களை உற்சாகப்படுத்துகிறது. இதன் வழக்கமான நுகர்வு சகிப்புத்தன்மையை மேம்படுத்த உதவுகிறது.

செரிமானத்தை மேம்படுத்துவதற்கு

இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக பால் மற்றும் திராட்சையை உட்கொள்வது செரிமான அமைப்புக்கு மிகுந்த நன்மை பயக்கும். உண்மையில், திராட்சையில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இதைத் தொடர்ந்து உட்கொள்வது அஜீரணம், மலச்சிக்கல் மற்றும் வாய்வு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.

எலும்புகளை வலுவாக்க

இரவு தூங்கும் முன்பாக, பால் மற்றும் திராட்சையை உட்கொள்வது எலும்புகளை பலப்படுத்த உதவுகிறது. உண்மையில், இரண்டிலுமே கால்சியம் நிறைந்துள்ளது. இவை எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இரண்டையும் தொடர்ந்து உட்கொள்வது எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதுடன், எலும்பு தொடர்பான பிரச்சினைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Raisin Milk: இவர்கள் எல்லாம் மறந்து கூட திராட்சை கலந்த பாலை உட்கொள்ளக்கூடாது!!

தூக்க பிரச்சனைகள் நீங்க

இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன் பால் மற்றும் திராட்சையை உட்கொள்வது நல்ல இரவு தூக்கத்தைப் பெற உதவுகிறது. மேலும், இவை தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது. உண்மையில், பாலில் உள்ள டிரிப்டோபான், உடலில் மெலடோனின் ஹார்மோன் உற்பத்திக்கு உதவுகிறது. இந்த மெலடோனின் ஹார்மோன் தூக்கத்தை ஒழுங்குபடுத்துகிறது. பால் மற்றும் திராட்சையில் உள்ள இந்த ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

இரத்த சோகை பிரச்சனையை போக்க

இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, பால் மற்றும் திராட்சையை உட்கொள்வது இரத்த சோகை பிரச்சனையை குணப்படுத்த உதவுகிறது. உண்மையில், திராட்சையில் இரும்புச்சத்து உள்ளது. இவை உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதன் மூலம் உடலில் ஏற்படும் இரத்தக் குறைபாட்டை நீக்குவதுடன், இரத்த சோகையின் அறிகுறிகளும் நீக்கப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஒன்னு இல்ல... ரெண்டு இல்ல... அத்திப்பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் பல நன்மை இருக்கு!

Image Source: Freepik

Read Next

குடல் ஹெல்த்தியா இருக்க மழைக்காலத்தில் நீங்க சாப்பிடக்கூடாத உணவுகள்

Disclaimer