Benefits of drinking overnight soaked chia seeds: உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், விதைகள், நட்ஸ் மற்றும் பானங்கள் போன்றவை உதவுகின்றன. இந்த வரிசையில் விதைகள் நாம் அனைவரும் குறைவாகவே எடுத்துக் கொள்ளும் உணவுப் பொருளாக இருப்பினும், இது உடலுக்கு நன்மை தரும் உணவுப்பொருளாக அமைகிறது. இதில் சியா விதைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இந்த விதைகளில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள் மற்றும் பண்புகள் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும் இது பல்வேறு கடுமையான பிரச்சனைகளிலிருந்து விடுபட பயனுள்ளதாக அமைகிறது.
அன்றாட உணவில் சியா விதைகளைப் பல்வேறு வழிகளில் சாப்பிடலாம். தயிரில் சியா விதைகளைச் சேர்ப்பது தனித்துவமான நன்மைகளைத் தருகிறது. மேலும் இதை ஸ்மூத்திகளில் சேர்க்கலாம். சியா விதைகளில் கால்சியம், மக்னீசியம், புரதம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், நார்ச்சத்துக்கள், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. குறிப்பாக, எளிய வழிகளில் ஒன்றாக சியா விதைகளைத் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடலாம். தண்ணீரில் சியா விதைகளை ஊறவைத்து சாப்பிடுவது இரட்டிப்பு நன்மைகளைத் தருகிறது. இதில் சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: பார்லி வாட்டரில் இந்த ஒரு விதையை சேர்த்து குடிச்சி பாருங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்
இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சியா விதைகளை சாப்பிடுவது உடலின் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு மிகவும் நன்மை பயக்கும். இரவு முழுவதும் இதை தண்ணீரில் ஊறவைத்து காலையில் உட்கொள்வதன் மூலம் உடலுக்குப் பல அற்புதமான நன்மைகளைப் பெறலாம். இது குறித்து ஆரோக்கிய சுகாதார மையத்தின் மருத்துவ உணவியல் நிபுணர் டாக்டர் வி.டி. திரிபாதி அவர்கள் கூறிய படி, “சியா விதைகளில் உள்ள புரதம், நார்ச்சத்துக்கள், கால்சியம், ஆக்ஸிஜனேற்றிகள், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்றவை எலும்புகளை வலுவாக்கவும், சருமம், முடி தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் மற்றும் மனதை கூர்மைப்படுத்தவும் மிகவும் நன்மை பயக்கும்.” என்று கூறியுள்ளார்.
உடல் எடையைக் குறைப்பதற்கு
உடல் பருமனால் போராடுபவர்களுக்கு, சியா விதைகளை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். இரவில் தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகளை, தினமும் காலையில் சாப்பிடுவது உடல் எடையைக் குறைப்பதில் பெரிதும் நன்மையைத் தருகிறது. மேலும் இதில் குறைந்த அளவிலான கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளது. இது வயிற்றை நிரப்பி உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது.
செரிமான அமைப்புக்கு
செரிமான அமைப்பை வலுப்படுத்துவதற்கு சியா விதைகளை சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் சியா விதைகளில் போதுமான அளவு நார்ச்சத்துக்கள் உள்ளது. இது மலச்சிக்கல், வயிற்று வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளுக்கு பெரும் நிவாரணத்தைத் தருகிறது. எனவே செரிமான அமைப்பை வலுவாக வைத்திருக்க, சியா விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
இதய ஆரோக்கியத்திற்கு
சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் இதயம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நோய்களிலிருந்து மிகுந்த நிவாரணத்தைப் பெறலாம். எனவே சியா விதைகளை உட்கொள்வதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம். இதற்கு இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களே காரணமாகும். இவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன.
இந்த பதிவும் உதவலாம்: நிறைய சாப்பிட்டு செரிமான பிரச்சனையா? டக்குனு சரியாக பெருங்காய தண்ணீரில் இந்த இரண்டு பொருள்களைச் சேர்த்து குடிங்க
எலும்பு ஆரோக்கியத்திற்கு
எலும்புகளை வலுப்படுத்துவதற்கு சியா விதைகளை உட்கொள்வது மிகவும் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது. இரவில் தண்ணீரில் ஊறவைத்த சியா விதைகளை சாப்பிடுவது எலும்புகளை வலுவாக்க உதவுகிறது. மேலும் இது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற கடுமையான எலும்பு தொடர்பான பிரச்சினைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. சியா விதைகளில் எலும்பு ஆரோக்கியத்திற்குத் தேவையான போதுமான அளவு கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
சியா விதைகளை தண்ணீரில் ஊறவைத்து சாப்பிடுவதன் மூலம் மிகவும் நன்மை பயக்கும். ஆனால், இதை சீரான அளவில் மட்டுமே எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஏனெனில் சியா விதைகள் இது போன்ற நன்மைகளைத் தந்தாலும், இதில் உள்ள நார்ச்சத்துக்களின் காரணமாக, இதை அதிகமாக சாப்பிடுவதும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: ஊற வைத்த சியா விதைகளை தினமும் சாப்பிடலாமா.? அப்படி என்ன இருக்கு இதுல.?
Image Source: Freepik