Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Chia seeds with Honey: தேன் கலந்த சியா விதை தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

Chia seeds with honey benefits: சியா விதைகளை ஊறவைத்த நீரில் தேன் கலந்து குடிப்பது இரட்டிப்பு நன்மைகளைத் தருகிறது. இவை இரண்டுமே பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதில் ஊறவைத்த சியாவிதைகளுடன் தேன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம். அதே சமயம், தேன் கலந்த சியா விதை தண்ணீர் தயாரிப்பு முறை குறித்தும் காணலாம்.

Benefits of drinking chia seeds water with honey: உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், நட்ஸ், விதைகள், பானங்கள், மூலிகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அந்த வகையில், விதைகளில் சிறந்த மற்றும் சிறிய விதைகளாக அமையும் சியா விதைகளை ஊறவைத்து சாப்பிடுவது உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது. அதே போல, தேன் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த இயற்கைப் பொருளாகும். இவை இரண்டும் தனித்தனியே பல நன்மைகளை அளிக்கிறது. ஆனால், இவை இரண்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்வதால் என்னென்ன நன்மைகளைப் பெறலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆம். தினமும் தேன் கலந்த சியா விதை தண்ணீரைக் குடிப்பது பலவிதமான ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இந்த தேன் மற்றும் சியா விதைகள் இரண்டுமே நிரூபிக்கப்பட்ட நன்மைகளைக் கொண்ட ஒரு சூப்பர் ஃபுட் ஆகக் கருதப்படுகிறது. இந்த பொருள்கள் இரண்டையும் சேர்த்து தயார் செய்யப்படும் பானம் பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்க உதவுவதாக அமைகிறது. இதில் சியா விதைகள் மற்றும் தேன் கலந்த நீரைப் பருகுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகளையும், அதைத் தயார் செய்யும் முறையையும் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பதால் உடல் எடை குறையுமா.?

தேன் கலந்த சியா விதை நீரின் ஆரோக்கிய நன்மைகள்

எடை இழப்பை ஆதரிக்க

எடையைக் கட்டுப்படுத்த விரும்புபவர்கள் தேன் மற்றும் சியா விதைகள் கலந்த தண்ணீரை அருந்துவது கூடுதல் கிலோவைக் குறைக்க சிறந்த தேர்வாக அமைகிறது. இதற்கு, சியா விதைகளில் உள்ள நார்ச்சத்துக்களும், தேனின் இயற்கையான இனிப்பும் காரணமாகும். இவை அதிக நேரம் உண்பதைக் குறைக்கிறது. இவை முழுமையான விருப்பத்தைத் திருப்திபடுத்துகிறது. எடையைக் குறைக்க விரும்புபவர்கள் இந்த உணவுத்திட்டத்தைக் கையாளலாம்.

செரிமான ஆரோக்கியத்திற்கு

சியா விதைகள் மற்றும் தேன் சேர்ந்த தண்ணீரைக் குடிப்பதன் மற்றொரு நன்மையாக செரிமான ஆரோக்கியத்திற்கு நேர்மறையான விளைவைத் தருகிறது. சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் தண்ணீரை உறிஞ்சி, உணவு இயக்கத்திற்கு உதவும் ஜெல் போன்ற பொருளை உருவாக்கி செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது. இவை மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான தன்மையை மேம்படுத்தவும் மற்றும் செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கான சிறந்த தேர்வாக அமைகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள்

சியா விதைகள், தேன் இரண்டுமே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்ததாகும். இவை ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவுகிறது. இந்த பானத்தை தினசரி வழக்கத்தில் சேர்ப்பதன் மூலம், ஆக்ஸிஜனேற்ற உட்கொள்ளலை கணிசமாக அதிகரிக்கிறது. இவை உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது.

உடலை டிடாக்ஸ் செய்வதற்கு

தேன் அதன் இயற்கையான நச்சுத்தன்மைக்கு பெயர் பெற்றதாகும். இவை உடலிலிருந்து நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இவை கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமான ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் பொருட்களை அகற்றுவதை ஊக்குவிக்கிறது. இவை செரிமானத்தை சீராக்கவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும் இயற்கையான பானமாக அமைகிறது. இவை கழிவுகளை வெளியேற்றி, உடலை சுத்தப்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மறந்தும் இந்த உணவுகளை சியா விதைகளுடன் சாப்பிட்ராதீங்க!

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த

சியா விதைகள் மற்றும் தேன் இரண்டிலுமே ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக உடலைப் பாதுகாக்க உதவுகிறது. தினசரி வழக்கத்தில் இந்த பானத்தை சேர்ப்பது, ஆக்ஸிஜனேற்ற உட்கொள்ளலை கணிசமாக அதிகரிக்கவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

எலும்பு ஆரோக்கியத்திற்கு

குளிர்காலம் வந்துவிட்டாலே, எலும்பு ஆரோக்கிய பிரச்சனைகளும் அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க சியா விதைகள் நிறைந்த பானம் உதவுகிறது. சியா விதைகள் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்றவற்றின் சிறந்த மூலமாகும். இவை வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க உதவுகிறது. சியா விதைகள் மற்றும் தேன் தண்ணீரை தினமும் உட்கொள்வதன் மூலம் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைப்பதுடன், எலும்பு அடர்த்தியை மேம்படுத்தலாம். மேலும், இவை ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

தேன் கலந்த சியா விதை தண்ணீரைத் தயாரிக்கும் முறை (How to make chia seed water with honey)

  • இந்த ஆரோக்கியமான பானத்தைத் தயார் செய்ய, முதலில் ஒரு தேக்கரண்டி சியா விதைகளை, ஒரு டீஸ்பூன் தேனுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது உங்களுக்கு பிடித்த பானத்தில் கலக்க வேண்டும்.
  • இதை சுமார் 10 முதல் 15 நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். இவ்வாறு ஊறவைப்பது, சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி, ஜெல் போன்ற அமைப்பைப் பெறுகிறது.
  • இந்த ஜெல்லானது உடல் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.

தினந்தோறும் இந்த பானத்தை அருந்துவதன் மூலம் நீண்ட கால ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஊற வைத்த சியா விதைகளை தினமும் சாப்பிடலாமா.? அப்படி என்ன இருக்கு இதுல.?

Image Source: Freepik

Read Next

Pistachios During Winter: குளிர் காலத்தில் தினமும் 5 பிஸ்தா சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு இவ்வளவு நல்லதா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content