Aloe vera chia seeds benefits: கற்றாழையுடன் சியா விதை சேர்த்த தண்ணீர் குடிப்பதால் என்னாகும் தெரியுமா?

How to make aloe vera chia seeds water: சியா விதைகள், கற்றாழை இரண்டுமே பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாகும். சியா விதையுடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து உட்கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் சியா விதையுடன் கற்றாழை சேர்த்த சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Aloe vera chia seeds benefits: கற்றாழையுடன் சியா விதை சேர்த்த தண்ணீர் குடிப்பதால் என்னாகும் தெரியுமா?


Aloe vera with chia seeds benefits: அன்றாட வாழ்வில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், பானங்கள், நட்ஸ், விதைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் குறிப்பாக, நாம் தினமும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளக் கூடிய பானங்களில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய சில பானங்கள் அன்றைய நாள் முழுவதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை அளிக்கவும், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவக்கூடியதாகும். எனவே புத்துணர்ச்சியூட்டும் பானத்துடன் நாளைத் தொடங்குவது நேர்மறையான மனநிலையை ஊக்குவிக்கிறது.

அவ்வாறு உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் பானங்கள் ஏராளம் உள்ளது. சியா விதை பானம், கற்றாழை சாறு உள்ளிட்ட ஏராளமான பானங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. ஆனால் கற்றாழை, சியா விதைகள் இரண்டையும் ஒன்றாக இணைப்பது உடலுக்கு நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் இந்த ஊட்டச்சத்துக்கள் மிக்க பானம் உடலுக்கு பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. காலை உணவுக்கு முன் இந்த பானத்தை எடுத்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் சியா விதைகளை மஞ்சளுடன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

கற்றாழை சியா விதை பானம் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

எடை மேலாண்மைக்கு

உடல் எடையை நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு கற்றாழை சியா விதை நீர் உணவில் ஒரு சிறந்த கூடுதலாக அமைகிறது. கூடுதலாக, சியா விதைகளில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மெதுவாக்குகிறது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. இவை வயிற்றில் நிரம்பிய உணர்வைத் தந்து பசியைக் குறைக்கிறது. இதனுடன் கற்றாழை சாறு செரிமானத்தை மேம்படுத்தி நிறைவாக உணர வைப்பதன் மூலம் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

இந்த பானத்தை வெறும் வயிற்றில் அருந்துவது பசியை ஒழுங்குபடுத்தவும், குறைக்கவும் உதவுகிறது. இது ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றத்தை ஆதரிக்கிறது. கற்றாழையில் உள்ள பாலிசாக்கரைடுகள் குடல் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. இந்த பானத்தை உணவில் சேர்ப்பது நாள் முழுவதும் பசியைக் கட்டுப்படுத்த வழிவகுக்கிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

கற்றாழை, சியா விதைகள் இரண்டுமே இதய ஆரோக்கியத்தில் முக்கிய நன்மை பயக்கும். சியா விதைகள் கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இவை இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஆய்வு ஒன்றில், சியா விதைகளை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாகக் கூறப்படுகிறது. கற்றாழை சியா விதைகளின் தண்ணீரை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுவதுடன், புத்துணர்ச்சியூட்டும் சுவையை அனுபவிக்க உதவுகிறது.

நீரேற்றத்தை மேம்படுத்த

உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நீரேற்றம் மிகவும் முக்கியமானதாகும். சியா விதை கற்றாழை பானம் அருந்துவது உடலுக்கு நீரேற்றத்தைத் தருகிறது. சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற அமைப்பை உருவாக்கி நீரேற்றத்தின் சிறந்த மூலமாக அமைகிறது. கூடுதலாக, சியா விதைகள் தண்ணீரில் உள்ள அதன் எடையை விட 12 மடங்கு அதிகமாக உறிஞ்சுகிறது. மேலும் கற்றாழை நீரேற்றமிக்க பானமாகும். எனவே இந்த பானம் அருந்துவது நீரேற்றத்தைத் தருவதுடன் நச்சு நீக்கத்திற்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot chia seeds water: பீட்ரூட் சியா விதை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?

செரிமான மேம்பாட்டிற்கு

சியா விதைகள் அதிகளவு நார்ச்சத்துக்களைக் கொண்டதாகும். இது வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிப்பதன் மூலம் ஆரோக்கியமான செரிமானத்தை ஊக்குவிக்கிறது. கற்றாழை சியா விதை பானம் ஒரு இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. இது உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்ற உதவுகிறது. சியா விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்திற்கு உதவுவதன் மூலம் மலச்சிக்கல் அல்லது ஒழுங்கற்ற தன்மையால் போராடுபவர்களுக்கு நன்மை பயக்கும். கூடுதலாக, கற்றாழை இரைப்பைக் குழாயை குழாயை அமைதிப்படுத்துவதன் மூலம் செரிமானத்தை மேம்படுத்துகிறது.

சரும பொலிவுக்கு

கற்றாழை சியா விதைகளின் நீரை அருந்துவது சருமத்தின் தோற்றத்தை கணிசமாக மேம்படுத்துகிறது. கற்றாழை மற்றும் சியா விதைகளின் கலவையில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையையும் நீரேற்றத்தையும் பராமரிக்க உதவுகிறது. கற்றாழை சருமத்தின் கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் முகப்பரு, கறைகள் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கிறது. இந்த வழக்கமான நுகர்வு சருமத்திற்கு ஒரு பிரகாசமான நிறத்தைத் தருகிறது. மேலும் இது முதுமை அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Aloe Vera Juice: தினமும் காலையில் கற்றாழை ஜூஸ் குடித்தால் கிடைக்கும் 10 ஆரோக்கிய நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

இவங்க எல்லாம் நைட்டு சாதம் சாப்பிடக்கூடாது.!

Disclaimer