Chia seeds with turmeric health benefits: உடல் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகள், பழங்கள், காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகள் போன்றவை உதவுகிறது. அந்த வகையில் நாம் சமையலறையில் பயன்படுத்தும் உணவுப்பொருளான மஞ்சள் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகையாகும். இதில் குர்குமின் என்ற கலவை நிறைந்து காணப்படுகிறது. இது தவிர, மஞ்சள் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்ததாகும்.
அதே போல, ஆரோக்கியமான விதைகளில் ஒன்றான சியா விதைகள் அதன் ஊட்டச்சத்து அடர்த்திக்காக நன்கு அறியப்படுகிறது. இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் வளமான மூலமாகும். இவ்வாறு இவை இரண்டும் தனித்தனி முறையே ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. ஆனால், இவை இரண்டையும் ஒன்றாக இணைத்து உட்கொள்வது உடலுக்குப் பல நன்மைகளைத் தருகிறது. இது நல்வாழ்வை ஆதரிக்கும் முழுமையான தீர்வை உருவாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Chia seeds with Honey: தேன் கலந்த சியா விதை தண்ணீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
வெறும் வயிற்றில் சியா விதைகள் கலந்த மஞ்சள் நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
ஊறவைத்த சியா விதைகளை மஞ்சள் நீருடன் கலந்து காலை உணவாக எடுத்துக் கொள்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இதில் வெறும் வயிற்றில் சியா விதைகள் கலந்த மஞ்சள் நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து காணலாம்.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்த
மஞ்சள், சியா விதைகள் போன்ற இரண்டும் அதன் சிறந்த ஊட்டச்சத்து கலவை காரணமாக பெரும்பாலும் சூப்பர்ஃபுட் என்று பெயரிடப்படுகிறது. சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், புரதம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் மெக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளது. மேலும், மஞ்சளில் குர்குமின், சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு கலவை மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலுக்கு ஊட்டமளிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்தையும் கணிசமாக மேம்படுத்துகிறது.
எடையிழப்பை ஆதரிக்க
எடையை நிர்வகிக்க விரும்புபவர்கள், அன்றாட உணவில் மஞ்சள் கலந்த சியா விதைகளை ஊறவைத்த தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். சியா விதைகளை ஊறவைக்கும் போது, அது தண்ணீரை உறிஞ்சி வயிற்றில் விரிவடைந்து, நிறைவான உணர்வை உருவாக்குகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தவும் கலோரி உட்கொள்ளலைக் குறைக்கவும் உதவுகிறது. கூடுதலாக, மஞ்சள் கொழுப்பு சேமிப்பை ஒழுங்குபடுத்தவும், வளர்சிதை மாற்றத்திற்கும் உதவக்கூடியதாகும். இந்த பானத்தை காலை உணவாக சேர்த்துக் கொள்வது எடை மேலாண்மைக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.
அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்த
சியா விதைகளை மஞ்சளுடன் சேர்த்து உட்கொள்வதன் சிறந்த நன்மைகளில் ஒன்றாக அதன் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் அமைகிறது. உடலில் வீக்கம் ஏற்படுவதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த நாள்பட்ட வீக்கம் காரணமாக கீல்வாதம் மற்றும் இதய நோய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதைத் தவிர்க்கவே மஞ்சளில் உள்ள குர்குமின் உதவுகிறது. கூடுதலாக, சியா விதைகளில் உள்ள ஒமேகா -3 கொழுப்பு அமிலங்களும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளுக்கு பங்களிக்கிறது. எனவே, இதைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் அழற்சி நிலைமைகளைத் தடுக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric coffee benefits: மஞ்சள் கலந்த காபி குடிப்பதில் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?
செரிமான ஆரோக்கியத்திற்கு
இந்த பானத்தின் மற்றொரு முக்கிய நன்மையாக அதன் செரிமான ஆரோக்கியம் அமைகிறது. சியா விதைகளில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானம் மற்றும் வழக்கமான குடல் இயக்கங்களை பராமரிக்க இன்றியமையாததாகும். மேலும், சியா விதைகளை ஊறவைக்கும் போது, அது ஜெல் போன்ற பொருளாக விரிவடைந்து, செரிமான மண்டலத்தை மேம்படுத்துகிறது. மேலும், மஞ்சள் பித்த உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் கொழுப்பு முறிவுக்கு உதவுகிறது. இவை இரண்டையும் இணைப்பது குடலுக்கு ஒரு வலிமையான அமைப்பது உருவாக்குகிறது.
நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க
சியா விதைகள் மற்றும் மஞ்சள் கலவையானது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை கணிசமாக அதிகரிக்க உதவுகிறது. மஞ்சள் அதன் நோயெதிர்ப்பு சக்திக்கு நன்கு அறியப்பட்டதாகும். மேலும், சியா விதைகளில் மக்னீசியம், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலில் நோயெதிர்ப்புச் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இந்த பானத்தை அருந்துவது பொதுவான நோய்கள் மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக பாதுகாப்பை பலப்படுத்துகிறது.
இவ்வாறு வெறும் வயிற்றில் சியா விதைகள் கலந்த மஞ்சள் நீர் குடிப்பதால் இது போன்ற ஆரோக்கியமான நன்மைகளைப் பெறலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Turmeric With Chia Seeds: செரிமானம் முதல் சர்க்கரை வியாதி வரை. மஞ்சளுடன் சியா விதை தரும் சூப்பர் நன்மைகள்
Image Source: Freepik