Jeera and turmeric water benefits: தினமும் காலை எழுந்தவுடன் டீ, காபி போன்ற பானங்களையே பெரும்பாலானோர் தேர்ந்தெடுப்பர். ஆனால், இது போன்ற பானங்கள் உடல் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் அருந்தக் கூடிய டீ, காபி போன்றவை உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். எனவே, காலையில் வெறும் வயிற்றில் நாம் எடுத்துக் கொள்ளக் கூடியது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருவதாக இருக்க வேண்டும்.
அவ்வாறு தினந்தோறும் நாம் சமையலில் பயன்படுத்தும் பொருள்களைக் கொண்டு வெறும் வயிற்றில் அருந்தக் கூடிய பானங்களைத் தயார் செய்யலாம். அதன் படி, பழமையான மசாலா பொருள்களில் ஒன்றான சீரகம் மற்றும் மஞ்சள் இரண்டுமே தனித்தனியே பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. பொதுவாக சீரகத் தண்ணீர் உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும் ஒன்றாகும். இதனுடன் ஒரு சிட்டிகை மஞ்சளை சேர்த்து தயாரிக்கும் பானம் கூடுதல் நன்மைகளை அளிக்கிறது. இதில் சீரகத் தண்ணீரில் மஞ்சள் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் காலையில் சியா விதைகளை மஞ்சளுடன் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
சீரக மஞ்சள் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
எடை இழப்பை ஆதரிக்க
இந்த ஆரோக்கியமான பானம் அருந்துவது உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது. இதில் உள்ள ஆரோக்கியமான பண்புகள் பசியைக் கட்டுப்படுத்தவும், அதிகளவிலான கொழுப்பைக் கரைக்கவும், உடலின் வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்தவும் மிகுந்த நன்மை பயக்கும். மேலும், இதன் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் முழுமையான உணர்வை அளிக்கிறது. கூடுதலாக இவை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், உணவை சிறந்த முறையில் உடைக்கவும் அனுமதிக்கிறது.
செரிமானத்தை மேம்படுத்த
சீரகம் மற்றும் மஞ்சள் சேர்த்து தயாரிக்கப்படும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள் மிக்க தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளது. இவை காலை நோய், வயிற்றுப்போக்கு, குமட்டல், மலச்சிக்கல் மற்றும் வாய்வு போன்றவற்றைத் தடுக்க உதவுகிறது. இவை செரிமான மண்டலத்தை நன்கு பராமரிக்கிறது. கூடுதலாக சீரகம் மற்றும் மஞ்சள் பானம் உடலில் கொழுப்பு, குளுக்கோஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை உடைக்கும் என்சைம்களின் வெளியீட்டைத் தூண்டுகிறது.
இரத்த சோகையைத் தடுக்க
ஜீரா மஞ்சள் தண்ணீரானது இரும்புச்சத்துக்கான வலுவான ஆதாரமாகும். இதன் மூலம் இரும்புச்சத்து குறைபாட்டினால் ஏற்படும் இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்களுக்கு இது சிறந்த தேர்வாகும். இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சீரக மஞ்சள் தண்ணீரை அருந்துவது உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பலவீனம், சோர்வு போன்றவற்றிற்கான அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது.
கொலஸ்ட்ராலைக் குறைக்க
கொலஸ்ட்ரால் என்ற மெழுகுப் பொருளானது இரத்த நாளங்களைத் தடுக்கலாம். இதன் காரணமாக இதயம் இரத்தத்தை பம்ப் செய்வது கடினமாகலாம். எனவே இந்த கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைப்பது மிகவும் அவசியமாகும். இதற்கு சிறந்த மற்றும் ஆரோக்கியமான பானமாக ஜீரா மஞ்சள் தண்ணீரை அருந்தலாம். இது தமனிகள் அடைபடுவதற்கான வாய்ப்பைக் குறைத்து, இதய செயல்பாட்டை எளிதாக்க உதவுகிறது. மேலும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான ஒரு எளிமையான வழியாக இரத்த நாளங்களை தளர்த்தி இரத்த அழுத்தத்தை பராமரிப்பதாகும். இதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Fennel Water: வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடிப்பது PCOD மற்றும் PCOS பிரச்சினைக்கு நல்லதா?
சருமம், முடி ஆரோக்கியத்திற்கு
சீரகம், மஞ்சள் தண்ணீரை உட்கொள்வதன் முக்கிய நன்மைகளில் ஒன்றாக சருமத்தை மேம்படுத்தும் திறன் அமைகிறது. இந்த பானம் உடலில் இருந்து நச்சுகளை அகற்றும் ஒரு சிறந்த இயற்கை நச்சு நீக்கியாக அமைகிறது. இவை சருமத்திற்கு அற்புதமான நன்மைகளை அளிக்கக் கூடியதாகும். கூடுதலாக, இந்த நீரில் உள்ள பொட்டாசியம், கால்சியம், மாங்கனீசு, செலினியம் போன்ற தாதுக்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியைத் தருகிறது.
மேலும், இந்த நீரைப் பருகுவதன் மூலம் முகப்பருவைக் குறைக்கலாம். இதில் நிறைந்துள்ள ஆக்ஸிஜனேற்ற குணங்கள் முதுமை அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது. கூடுதலாக இந்த நீர் முடியின் மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது. மேலும் முடி உதிர்தலைக் குறைத்து பளபளப்பான முடியைத் தருகிறது.
சீரக மஞ்சள் டிடாக்ஸ் தண்ணீர் தயாரிக்கும் முறை
- இந்த பானம் தயார் செய்ய முதலில் 1 கப் அளவிலான தண்ணீரில் அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு தீயைக் குறைத்து, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து மூடியைக் கொண்டு மூடி வைக்க வேண்டும். இதை மீண்டும் 1 நிமிடம் கொதிக்க விடலாம்.
- பின், கலவையை கப் ஒன்றில் வடிகட்டி, வெறும் வயிற்றில் வெதுவெதுப்பாக குடிக்கலாம். இந்த பானத்திற்கும் காலை உணவிற்கும் இடையே குறைந்தது அரை மணி நேர இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Warm jeera water: சீரக தண்ணீர் நல்லது தான்! ஆனா அத இப்படி குடிச்சா ரொம்ப நல்லது
Image Source: Freepik