Turmeric With Chia Seeds: செரிமானம் முதல் சர்க்கரை வியாதி வரை. மஞ்சளுடன் சியா விதை தரும் சூப்பர் நன்மைகள்

  • SHARE
  • FOLLOW
Turmeric With Chia Seeds: செரிமானம் முதல் சர்க்கரை வியாதி வரை. மஞ்சளுடன் சியா விதை தரும் சூப்பர் நன்மைகள்

அந்த வகையில் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்ட மஞ்சள் உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. தினமும் ஒரு துண்டு பச்சை மஞ்சளை மென்று சாப்பிடுவது சிறந்த நன்மைகளைத் தருகிறது. ஆனால், பெரும்பாலானோர் காலையில் சிறிது கசப்பான பச்சை மஞ்சள் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள். இதற்கு சிறந்த தீர்வாக மஞ்சள் கலந்த நீராக எடுத்துக் கொள்ளலாம். அதில் சுவைக்காக சியா விதைகள் சாப்பிடுவது உடலுக்கு நன்மையைத் தருகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Ghee In Summer: இந்த காரணத்துக்காக கோடையில் நீங்க கண்டிப்பா நெய் எடுத்துக்கணும்

மஞ்சள் நீருடன் சியா விதைகள் தரும் நன்மைகள்

தினசரி உணவில் பச்சை மஞ்சள் நீருடன் சியா விதைகள் சேர்த்து அருந்துவது உடலுக்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

செரிமான மேம்பாட்டிற்கு

மஞ்சள் மற்றும் சியா விதைகள் இரண்டும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை இரண்டிலும் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கிறது. மேலும் மஞ்சள் உட்கொள்வது பித்த உற்பத்தியைத் தூண்டவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

சியா விதைகள் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த தாவர அடிப்படையிலான ஆதாரமாகும். இந்த ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், உடல் வீக்கத்தைக் குறைக்கவும், உடல் எடை இழப்புக்கும் உதவுகிறது. அதன் படி, சியா விதைகளை துருவிய மஞ்சளுடன் சேர்ப்பது வீக்கத்தைக் குறைக்கவும், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

அழற்சி எதிர்ப்புப் பண்புகள்

மஞ்சளில் குர்குமின் நிறைந்துள்ளது. இதனுடன் சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. இதன் மருத்துவ குணங்கள் நாள்பட்ட வீக்கம், உடல் பருமன், வளர்ச்சிதை மாற்றக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகளுக்குத் தீர்வு தருகிறது. இவை உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதுடன், எடை குறைப்பிற்கு மறைமுகமாக ஆதரிக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Black Ginger Benefits: கருப்பு இஞ்சியின் நம்ப முடியாத ஆரோக்கிய நன்மைகள்!

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க

உடலில் கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் மஞ்சள் சிறந்த தேர்வாக அமைகிறது. இதனுடன் மற்ற ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை இணைப்பது உடல் எடை இழப்பிற்கு கூடுதல் நன்மையைத் தருகிறது.

இரத்த சர்க்கரை கட்டுப்பாட்டிற்கு

இயற்கையாகவே சிறந்த இன்சுலின் நிர்வாகத்திற்கு சியா விதை மஞ்சள் பானம் பெரிதும் உதவுகிறது. இவை இரத்த சர்க்கரை அளவை நிலைநிறுத்தவும், பசியைக் குறைக்கவும் உதவுகிறது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதால், அதிகம் உணவு உட்கொள்வதைத் தவிர்க்கவும், சிறந்த எடை மேலாண்மைக்கும் உதவுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோயைத் தவிர்க்கலாம்.

சியா விதை மஞ்சள் நீர் தயார் செய்யும் முறை

முதலில் சியா விதைகளை ஊறவைக்க வேண்டும். இதில் ஒரு சிட்டிகை அளவிலான மஞ்சள் தூள் சேர்க்கலாம். இதை சில நிமிடங்கள் அப்படியே வைக்கும் போது, சியா விதைகள் தண்ணீரை உறிஞ்சி ஜெல் போன்ற நிலையை அடைவதைக் காணலாம். அதன் பிறகு, இதை புத்துணர்ச்சியூட்டும், சத்தான பானமாக அருந்தலாம்.

தேவையானவை

  • சியா விதைகள் - 2 தேக்கரண்டி
  • பச்சை மஞ்சள் நறுக்கியது - 1 சிறிய துண்டு
  • தண்ணீர் - 3 கப்
  • தேன் அல்லது எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு

செய்முறை

  • இந்த பானம் தயாரிக்க, 2 டீஸ்பூன் அளவு சியா விதைகளை பாத்திரம் ஒன்றில் 4 டீஸ்பூன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். இதற்கிடையில் பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்க வேண்டும்.
  • விதைகள் ஜெல் போன்ற நிலைத்தன்மையை அடையும் வரை சுமார் 10-15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும். பின் மஞ்சளை நன்கு கழுவி தோலை உரித்து மஞ்சளை சிறு துண்டுகளாக நறுக்கி, சிறிது சிறிதாக நறுக்கி வைக்க வேண்டும்.
  • பின் பாத்திரம் ஒன்றில் வெதுவெதுப்பான நீர், மஞ்சள், மற்றும் சியா விதைகளைச் சேர்க்கவும். இதை நன்கு கிளறி தேன் அல்லது எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Okra Water Benefits: இதய ஆரோக்கியம் முதல் நோயெதிர்ப்புச் சக்தி வரை. வெண்டைகாய் நீர் தரும் அற்புத நன்மைகள்

Image Source: Freepik

Read Next

Sesame Seeds Laddu: எள்ளு லட்டு இப்படி செஞ்சி பாருங்க… ரொம்ப நல்லது.!

Disclaimer