Sat Sep 12, 2026 | 12:47 AM IST

Ghee In Summer: இந்த காரணத்துக்காக கோடையில் நீங்க கண்டிப்பா நெய் எடுத்துக்கணும்

Reasons To Eat Ghee In Summer: இந்திய உணவின் ஒரு பகுதியாக விளங்குவது நெய் ஆகும். இது உணவில் சுவையைச் சேர்ப்பதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. ஆயுர்வேதத்தின் படி, நெய் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. ஆனால், கோடைக்காலத்தில் நெய் உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருமா என்ற கேள்வி அனைவருக்கும் எழும். ஆம். உண்மையில் கோடையில் நெய் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

நெய்யின் ஊட்டச்சத்துக்கள்

நெய்யில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை நிறைந்துள்ளன. இவை உடலில் அனைத்து திசுக்களின் வளர்ச்சிக்கும், உறுப்பு அமைப்புகளின் மேம்பட்ட செயல்பாட்டை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதன் மருத்துவ குணங்கள் உடல் சூட்டைக் குறைக்க உதவுகிறது. எனவே இவை கோடை காலத்திற்கு ஏற்றதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Black Ginger Benefits: கருப்பு இஞ்சியின் நம்ப முடியாத ஆரோக்கிய நன்மைகள்!

நெய்யின் ஆரோக்கிய நன்மைகள்

நெய்யில் உள்ள ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவுகிறது. கோடையில் நெய் எடுத்துக் கொள்வதன் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

ஆரோக்கியமான வளர்ச்சிக்கு

நெய் சிறந்த ஆரோக்கியமான கொழுப்புகளின் மூலமாகும். இவை உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்குத் தேவையான கொழுப்பைத் தருவதாக நெய் அமைகிறது. இவை உடல் மற்ற ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.

நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த

உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை உட்கொள்ள வேண்டும். நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த நெய் சிறந்த தேர்வாக அமைகிறது. இவை பல்வேறு வகையான நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது. மேலும் நெய்யில் குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலமான பியூட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இவை நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த உதவுகிறது. இதனுடன் நெய்யில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி போன்றவை நோயெதிர்ப்புச் சக்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

உடலை குளிர்ச்சியாக வைக்க

உடல் மற்றும் மனதை குளிர்ச்சியாக வைத்திருக்க தேசி நெய் பெரிதும் உதவுகிறது. இது உடலில் வீக்கத்தைக் குறைத்து உடலில் அமைதிப்படுத்தும் விளைவைத் தருகிறது. நெய் சாப்பிடுவது இனிமைச் சுவையைத் தருவதுடன், இயற்கையில் குளிர்ச்சியான பண்பையும் தருகிறது. இது வெப்பமான கோடைக்காலத்திற்கு ஏற்றதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Green Grapes Benefits: உயர் இரத்த அழுத்தத்தால் அவதியா? பச்சை திராட்சை ஒன்னு போதும்.

செரிமான ஆரோக்கியத்திற்கு

காலையில் வெறும் வயிற்றில் நெய் சாப்பிட்டு வருவது உடலில் செரிமானத்தை மேம்படுத்தும். இவை பித்த தோஷத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் நெய்யில் சக்திவாய்ந்த பூஞ்சை காளான் மற்றும் வைரஸ் எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன. இவை நோய்களைத் தவிர்க்க உதவுகிறது. ஆயுர்வேதத்தில் நெய்யை உட்கொள்வது உடலின் செரிமானத்தை மேம்படுத்துவதற்கும், உடல் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதற்கும் சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது.

உடலில் ஈரப்பதத்தை சமப்படுத்த

நெய்யில் உள்ள ஈரப்பதமூட்டும் பண்புகள் உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இது இயற்கையில் மென்மையானது மற்றும் உயவூட்டுவதாகும். உடலின் உட்புறத்திலிருந்து ஊட்டமளிக்க உதவுகிறது. குறிப்பாக கோடையில் உடலில் ஏற்படும் நீரிழப்பைத் தவிர்க்க நெய்யைத் தொடர்ந்து உட்கொள்ளலாம். மேலும் கோடைக்காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை நீக்கவும் நெய் உதவுகிறது.

கோடைக்காலத்தில் உடலுக்குத் தேவையான இந்த நன்மைகளைப் பெறுவதற்கு நெய் சிறந்த மற்றும் சரியான தேர்வாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Pumpkin During Summer: எடை குறைப்பு முதல் இதய நோய் வரை. கோடையில் பூசணி தரும் அற்புத நன்மைகள்

Image Source: Freepik

Read Next

White Vs Red Onion: வெள்ளை Vs சிவப்பு வெங்காயம் - ஆரோக்கியத்தில் எது சிறந்தது.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content