$
Pumpkin Benefits During Summer: இன்று பலரும் விரும்பி உண்ணும் உணவுப்பொருள்களில் ஒன்று பூசணிக்காய் ஆகும். இதில் பலர் பூசணிக்காய் ஹல்வா, கீர் மற்றும் ரைதா போன்ற பல வகைகளில் எடுத்துக் கொள்வர். பூசணி சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதுடன், பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பூசணிக்காயில் வைட்டமின் ஏ, பி, டி மற்றும் இ, தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் பீட்டா கரோட்டீன் போன்ற சத்துக்கள் ஏராளமாக உள்ளது.
குறிப்பாக, கோடைக்காலத்தில் பூசணியின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாகக் கருதப்படுகிறது. இது ஒரு குளிர்ச்சியான விளைவைக் கொண்டிருப்பதால், கோடையில் உடலைக் குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. பூசணிக்காயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளதால், இவை ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்துவதுடன், பல கடுமையான நோய்களைத் தடுக்கிறது. பூசணிக்காயை உடலை நீரேற்றமாக வைப்பதுடன், கோடைக்காலத்தில் வேறு சில நன்மைகளைத் தருகிறது. அதில் சிலவற்றை இந்தப் பதிவில் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Biryani Leaf Benefits: இலை ஒன்று பலன் நூறு… சுகர் முதல் எடை இழப்பு வரை அனைத்தையும் சரி செய்யும் பிரியாணி இலை!
கோடையில் பூசணிக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உடல் எடை இழப்புக்கு
கோடை காலத்தில் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பூசணிக்காயை உட்கொள்ளலாம். பூசணிக்காயில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் இவை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. மேலும், இதில் குறைந்தளவு கலோரிகளைக் கொண்டுள்ளதால் உடல் எடையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.

நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்த
பூசணிக்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது. இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இதன் வலுவான நோயெதிர்ப்பு அமைப்பு பல்வேறு கடுமையான நோய்கள் மற்றும் தொற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் நிறைந்துள்ள பீட்டா கரோட்டீன் புரோஸ்டேட் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
செரிமானத்தை மேம்படுத்த
பூசணிக்காயை உட்கொள்வது செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது வயிறு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் இதில் நிறைந்துள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், வயிற்றைச் சுத்தப்படுத்தி மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: தர்பூசணி வாங்கப்போறீங்களா?… ரசாயன கலப்படத்தை கண்டறிய இப்படி பார்த்து வாங்குங்க!
நீரேற்றமாக வைக்க
கோடைக்காலத்தில் உடலில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை ஏற்படலாம். இந்த சூழ்நிலையில், பூசணிக்காயை உட்கொள்வது நீரிழப்பு பிரச்சனையைத் தவிர்க்க உதவுகிறது. பூசணிக்காயில் 90% அளவிலான தண்ணீர் நிறைந்துள்ளது. இதனை உட்கொள்வது உடலை நீரேற்றமாக வைப்பதுடன் புத்துணர்ச்சியுடன் வைக்க உதவுகிறது.

இதய நோய்களிலிருந்து பாதுகாக்க
பூசணிக்காயை உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்துக்கள் உடலில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இதன் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைப்பதுடன் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கிறது.
கோடைக்காலத்தில் பூசணிக்காயை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது. இருப்பினும் வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருப்பின் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகே பூசணிக்காயை உட்கொள்ள வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: Jamun Seed: நாவல் பழம் மட்டும் அல்ல, அதன் இலை மற்றும் கொட்டை கூட நல்லது தெரியுமா?
Image Source: Freepik