Jamun Seed: நாவல் பழம் மட்டும் அல்ல, அதன் இலை மற்றும் கொட்டை கூட நல்லது தெரியுமா?

  • SHARE
  • FOLLOW
Jamun Seed: நாவல் பழம் மட்டும் அல்ல, அதன் இலை மற்றும் கொட்டை கூட நல்லது தெரியுமா?


Benefits Of Eating Jamun Fruit Leaves And Seeds: நம்மில் பலர் இளந்தை பழம் சாப்பிட்டிருப்போம். இந்தியன் ப்ளாக்பெர்ரி என்றும் அழைக்கப்படும் நாவல் பழம் உங்களுக்கு நியாபகம் இருக்கிறதா? பள்ளி பருவத்தில் நாக்கில் வைலட் நிறம் தோன்றுவதற்காகவே இந்த பழத்தை நம்மில் பலர் சாப்பிட்டிருப்போம். இந்த பழம் ஒரு சீசன் பழம். இதில் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதுமட்டுமின்றி, பல நோய்களின் அபாயத்தைக் குறைப்பதிலும் இது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், நாவல் பழம் மட்டுமல்ல, அதன் விதைகளும் அதன் இலைகளும் கூட ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?

எனவே, இதை உங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக மாற்றலாம். இந்த கட்டுரையில், ஜாமுன் பழங்கள், விதைகள் மற்றும் இலைகளை சாப்பிடுவது எந்த வகையான நோய்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றி பார்க்கலாம். இது குறித்து, vedicure Healthcare & Wellness Centre-யின் மூத்த ஆயுர்வேத நிபுணரான மருத்துவர் வைஷாலி சாவந் கூறியவது பற்றி விரிவாக பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Spices For Diabetes: சர்க்கரை நோயை கட்டுப்படுத்த சமையலறையில் இருக்கும் இந்த ஒரு மசாலா போதும்!!

நாவல் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நாவல் பழம் கரு நீல நிறத்தில் காணப்படும் துவப்பான பழம். இந்த பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதில், கலோரிகள் மிகக் குறைந்த அளவிலேயே காணப்படுகின்றன. மேலும், இது வைட்டமின் சி, கார்போஹைட்ரேட்டுகள், புரதங்கள், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் பைட்டோ கெமிக்கல்களின் மிகச் சிறந்த மூலமாகும்.

இதன் ஜூஸ் குடிப்பதற்கு பதில், அதை மென்று சாப்பிடுவது அதிக பலன் தரும் என்பது நிபுணர்களின் ஆலோசனை. நாவல் பழத்தைப் பற்றி பேசுகையில், பல நிபுணர்கள் இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்க முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறுகிறார்கள். இது தவிர, இதய பிரச்சனைகள் மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களின் அபாயத்தை குறைக்க நாவல் பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Jamun For Kidney Patients: சிறுநீரக நோயாளிகளுக்கு உதவும் அற்புத பழம். எந்த அளவு சாப்பிடலாம்?

நாவல் பழ விதைகளின் நன்மைகள்

நாவல் பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயப்பது போலவே, நாவல் பழ விதைகளும் ஆரோக்கியத்திற்கு சிறந்த பலன்களைத் தருகின்றன. NCBI இல் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் படி, நாவல் விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் தூளை உட்கொள்வது நீரிழிவு நோயை நிர்வகிக்க உதவுகிறது.

நீரிழிவு நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மட்டுமின்றி, இருதய மற்றும் இரைப்பை குடல் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற நாவல் பழ விதை பொடியையும் பயன்படுத்தலாம். இருப்பினும், இந்த பொடியை எந்த அளவு பயன்படுத்த வேண்டும், எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து நிபுணரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம் : Diabetes Diet: சர்க்கரை நோயாளிகள் ஒரு நாளைக்கு எத்தனை முறை சாப்பிடனும்?

நாவல் பழ இலைகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ப்ளாக்பெர்ரிகள் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், புரதங்கள், ஃபிளாவனாய்டுகள், மாங்கனீசு, பொட்டாசியம், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஆகியவற்றின் சிறந்த மூலமாகும். நாவல் பழத்தைப் போலவே, அதன் இலைகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஜாமுன் இலைகளிலும் பல வகையான சத்துக்கள் நிறைந்துள்ளன.

இதன் இலைகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைரஸ் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் மற்றும் ஒவ்வாமைகளை நீக்கவும் உதவுகிறது. இது மட்டுமின்றி, நாவல் பழ இலைச்சாறு உட்கொண்டால், முடி உதிர்வதை குறைக்கலாம். இது உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Jamun Seed Powder Benefits: சர்க்கரை நோய்க்கு மட்டுமல்ல. இந்த பிரச்சனைகளுக்கும் நாவல் பழப் பொடி ஒன்னு போதும்

மொத்தத்தில், நீங்கள் நாவல் இலை மற்றும் விதைகளில் செய்யப்பட்ட பொடியை உட்கொள்ளலாம். நாவல் பழத்திற்கு ஒவ்வாமை இருந்தால், அதை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Pic Courtesy: Freepik

Read Next

Water after fruits: பழம் சாப்பிட்ட பின் தண்ணீர் குடிப்பது நல்லதா? டாக்டர் கூறுவது இங்கே!

Disclaimer

குறிச்சொற்கள்