Expert

Jamun For Kidney Patients: சிறுநீரக நோயாளிகளுக்கு உதவும் அற்புத பழம். எந்த அளவு சாப்பிடலாம்?

  • SHARE
  • FOLLOW
Jamun For Kidney Patients: சிறுநீரக நோயாளிகளுக்கு உதவும் அற்புத பழம். எந்த அளவு சாப்பிடலாம்?


நாவல்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள்

சுவை மிக்க நாவல்பழமானது பல்வேறு ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. அதன் படி, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நல்ல அளவில் நிறைந்துள்ளன. எனினும், சிறுநீர பாதிப்பு, சிறுநீரக வீக்கம் மற்றும் சிறுநீரக கற்கள் போன்ற சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளைக் கொன்டிருப்பவர்கள் கோடையில் பிளாக்பெர்ரி உட்கொள்வதில் குழப்பம் அடைகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: Anti-Aging Foods List: முதுமை எதிர்ப்புக்கு என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.?

இந்த நாவல்பழத்தை எடுத்துக் கொள்வது தொடர்பாக மக்களிடையே சில தவறான கருத்துக்கள் உள்ளது. இதில் பொதுவானதாக பிளேக்பெர்ரியானது சிறுநீரக நோய் பிரச்சனைகளை அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால், இது உண்மையா என்ற கேள்வி அனைவருக்கும் எழுகிறது. இது குறித்து, உடற்பயிற்சி பயிற்சியாளர், ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் சப்ளிமென்ட் ஸ்பெஷலிஸ்ட் வினீத் குமார் அவர்கள் கூறுகையில், “சிறுநீரக நோயாளிகள் பிளேக்பெர்ரி சாப்பிடுவது பாதுகாப்பானது. இது அவர்களுக்கு பல்வேறு வழிகளில் நன்மை தரும்” எனக் கூறியுள்ளார்.

சிறுநீரக நோயாளிகள் நாவல்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

ஊட்டச்சத்து நிபுணர் வினீத் அவர்களின் கூற்றுப்படி,“நாவல்பழம் அதிக நீர்ச்சத்து உள்ள பழமாகும். மேலும் டையூரிடிக் விளைவுகளும் உள்ளது. எனவே நாவல்பழத்தை உட்கொள்வது சிறுநீரை அதிகமாக வெளியேற்றும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது. மேலும் இது சிறுநீரகக் கற்களைத் தடுக்கவும் உதவுகிறது” எனக் கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Kal Uppu Benefits: கல் உப்பில் உள்ள அற்புத நன்மைகள் இத்தனையா.? கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்.!

சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பின், நீங்கள் தயக்கமின்றி பிளேக்பெர்ரியை உட்கொள்ளலாம். ஏனெனில் இதில் உள்ள நல்ல அளவிலான பொட்டாசியம் சிறுநீரகங்களுக்கு தீங்கு விளைவிக்காது. மேலும் இது உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளைத் தருகிறது. அவற்றில் சிலவற்றைக் காணலாம்.

  • இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.
  • செரிமானத்தை வலுவடையச் செய்கிறது
  • நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்துகிறது
  • பல தீவிரமான நோய்களைத் தடுக்க உதவுகிறது
  • இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது

சிறுநீரக நோயாளி எவ்வளவு நாவல்பழத்தை சாப்பிடலாம்?

சிறுநீரக நோய் இருக்கிறதா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், எதையும் அதிகமாக உட்கொள்ளக் கூடாது. ஏனெனில், பெர்ரி ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தரும் ஒன்றாகும். ஆனால், இதை அதிகளவில் உட்கொள்வது தீங்கு விளைவிக்கலாம். மேலும் ஒரு நாளைக்கு ஒரு கப் நாவல்பழத்திற்கு மேல் சாப்பிட வேண்டாம் என பொதுவாக அறிவுறுத்தப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Dates With Milk Benefits: இரவில் பாலுடன் பேரீச்சம்பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் பல்வேறு நன்மைகள்!

Image Source: Freepik

Read Next

Peerkangai Benefits: பீர்க்கங்காய்ல இவ்வளவு நல்லது இருக்கா?

Disclaimer