Is It Good To Drink Karela Jamun Juice: உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்த வரையில் ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்றாகும். சில ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகளை எடுத்துக் கொள்வது உடலின் முக்கிய செயல்பாடுகளில் பங்கு வகிப்பதாக அமைகிறது. அந்த வகையில் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் வகையில் கரேலா ஜாமுன் சாறு அமைகிறது.
கரேலா ஜாமுன் சாறு என்பது இரண்டு சிறந்த உணவுகளின் சக்திவாய்ந்த கலவையாகும். இவை இரண்டிலுமே உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது. இவை உடலை சுத்தப்படுத்துவதாகவும், குடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதாகவும் கருதப்படுகிறது. இதில் கரேலா ஜாமுன் சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காண்போம்.
முக்கிய கட்டுரைகள்
இந்த பதிவும் உதவலாம்: Elaichi Milk Benefits: பச்சை ஏலக்காயை பாலில் கொதிக்க வைத்து குடிப்பது எவ்வளவு நல்லது தெரியுமா?
கரேலா ஜாமுன் சாறு ஊட்டச்சத்துக்கள்
கரேலா ஒரு ஆரோக்கியமான கசப்பு காய்கறி வகையைச் சார்ந்ததாகும். இதில் உள்ள மோமோர்டிசின் தனித்துவமான கசப்பு சுவை கொண்டதாகும். இந்த காய்கறியில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பயோட்டின் மற்றும் ஜிங்க் போன்றவை நிறைந்துள்ளன. மேலும் இதில் சரான்டின், பாலிபெப்டைட்-பி மற்றும் வைசின் போன்றவை உள்ளது.
ஜாமும் மிகுந்த ஆரோக்கியமிக்க பழமாகும். ஜாமுன் பழத்தில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்து காணப்படுகிறது. இதில் ஜாமுனின் முக்கிய பகுதியாக அமைவது அதன் விதைகள் ஆகும். ஜாமுனில் உள்ள ஜம்போலின் மற்றும் ஜாம்போசின் போன்ற தாவர இரசாயனங்கள் குணப்படுத்தும் விளைவுகளை அதிகரிக்கிறது.
கரேலா ஜாமுன் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
கரேலா ஜாமுன் சாறு குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளைத் தருகிறது.
உடல் எடை பராமரிப்பில்
உடல் எடை மேலாண்மைக்கு உதவும் சாறு வகைகளில் கரேலா ஜாமுன் சாறு வகைகளும் அடங்கும். இந்த சாற்றில் குறைந்தளவு கலோரிகள் மற்றும் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. கூடுதலாக, இது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும், இந்த சாறு அருந்துவது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன் உடல் எடையைப் பராமரிக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: Almond Oil Benefits: பாதாம் எண்ணெய் குடித்தால் நிகழும் அற்புதங்கள் இங்கே..
ஆரோக்கியமான செரிமானத்திற்கு
இந்த சாற்றில் என்சைம்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது செரிமான அமைப்பை செரிமான அமைப்பு சீராக செயல்பட உதவுகிறது. இதனுடன் மலச்சிக்கல், வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற குடல் சார்ந்த பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.
கண் பார்வை மேம்பாட்டிற்கு
கரோலா ஜாமுன் சாற்றில் கண் பார்வை ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் பீட்டா கரோட்டின் ஆகியவை உள்ளது. இந்த சாற்றை அருந்துவது கண் பார்வையை அதிகரிக்கவும், கண் தசைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. மேலும் கிட்டப்பார்வை, கண்புரை போன்ற கண் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
நோயெதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்க
இந்த சாறு அருந்துவது உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டவையாகும். இதன் வைட்டமின்கள் உடலை நல்ல நிலையில் வைத்து, நோய்த்தொற்றுக்கள் மற்றும் நோய்களைத் தடுக்க உதவுகிறது.
ஆற்றல் நிலையை மேம்படுத்த
கரேலா ஜாமுன் சாறு உடலில் உள்ள சோர்வை நீக்கி, உடலின் ஒட்டுமொத்த செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. இதன் வைட்டமின்கள், தாதுக்கள் போன்ற வளமான மூலங்கள் உடலில் ஆற்றலை அதிகரிக்கச் செய்வதுடன், ஆற்றலை மீட்டெடுக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Watermelon Side Effects: அதிகமா தர்பூசணி சாப்பிடுபவர்களா நீங்க? இந்த பிரச்சனை எல்லாம் வரலாம்
இரத்தத்தை சுத்தப்படுத்த
கரேலா மற்றும் ஜாமுனில் உள்ள சுத்தப்படுத்தும் குணங்கள், நல்ல இரத்த சுத்திகரிப்பாளராக மாற்றுகிறது. இது தமனிகளிலிருந்து நச்சுக்களை அகற்றுகிறது. மேலும் இரத்த சோகை மற்றும் உறைதல் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கிறது.
நீரிழிவு நோய்க்கு
இவை இரண்டுமே இரத்த சர்க்கரையை நிர்வகிக்க உதவுகிறது. கரேலாவில் உள்ள சரண்டைன் மற்றும் பாலிபெப்டைட்-பி போன்றவை நீரிழிவு நோயில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜாமுன் விதைகளில் உள்ள ஜாம்போலின் மற்றும் ஜாம்போசின் போன்றவை இரத்தக் குளுக்கோஸ் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எனவே, நீரிழிவு நோயாளிகள் கரேலா ஜாமுன் சாறு அருந்தலாம்.
தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு
கரேலா ஜாமுன் சாற்றில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. இவை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். இது சருமத்தை பளபளப்பாக்க வைக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் கொலாஜன் தயாரிப்பை அதிகரிக்கிறது. இந்த சாற்றின் அதிக ஊட்டச்சத்துகள் முடி உதிர்தல் மற்றும் முன்கூட்டியே முடி நரைப்பதைக் குறைக்கிறது.
இவ்வாறு கரேலா ஜாமுன் சாறு நேர்மறையான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள் சாப்பிடுவது சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்துமா?
Image Source: Freepik