What does passion fruit do for your body: தாட்பூட் அல்லது கொடித்தோடை பழம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் பேஷன் ஃப்ரூட் ஒரு சிறிய, வட்ட வடிவ வெப்பமண்டல சிட்ரஸ் பழமாகும். இது இது பேஷன்ஃப்ளவரிலிருந்து முளைப்பதால் பேஷன் பழம் என்றழைக்கப்படுகிறது. இதில் பல்வேறு வகைகள் உள்ளது. ஆனால், இதில் மஞ்சள் மற்றும் ஊதா நிற பழங்கள் மிகவும் பொதுவானவையாகும். இதில் ஊதா நிற பேஷன் பழம் பெரும்பாலும் ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் காணப்படக்கூடியதாகும். அதே சமயம், மஞ்சள் நிற பேஷன் பழம் பிரேசில் மற்றும் ஈக்வடாரில் செழித்து வளரக்கூடியதாகும்.
இந்த இரண்டும் பழங்களும் அதன் அளவு, நிறம், சுவை, நறுமணம் மற்றும் அமிலத்தன்மை அளவில் வேறுபடுகின்றன. இந்த பேஷன் ஃப்ரூட் ஆனது உட்புறம் ஜூசியான மற்றும் கடினமான தோலைக் கொண்ட ஒரு சிறிய பழமாகும். இது ஒரு கொடியைப் போல வளரும் பழமாகும். இந்த பழம் மிகவும் பல்துறை திறன் கொண்டது மற்றும் இது சுவையை அதிகரிக்க உதவுகிறது. ஊதா நிற பேஷன் பழத்தின் மற்றொரு பெயர் பாசிஃப்ளோரா எடுலிஸ் என்றும், மஞ்சள் பாசிப் பழம் பாசிஃப்ளோரா ஃபிளாவிகார்பா என்றும் அழைக்கப்படுகிறது. இதில் பேஷன் பழத்தில் காணப்படக்கூடிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவை நம் உடலுக்கு தரும் ஆரோக்கிய நன்மைகளையும் காணலாம்.
பேஷன் பழத்தின் ஊட்டச்சத்துக்கள்
பேஷன் பழத்தில் வைட்டமின்கள் ஏ, பி, சி மற்றும் கே போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. இது தண்ணீர் நிறைந்த பழமாகும். மேலும் இதில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், செம்பு, செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: டிராகன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மை மற்றும் தீமைகள்
முக்கிய கட்டுரைகள்
பேஷன் பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்குத் தேவையான இன்றியமையாத பல ஊட்டச்சத்துக்கள் பேஷன் பழத்தில் உள்ளன. இந்த பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த
பேஷன் பழம் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் நிறைந்த பழமாகும். எனவே இது உடலில் சீரான இரத்த சர்க்கரை அளவை உறுதி செய்கிறது. மேலும், உடலில் மெதுவாக இரத்த ஓட்டத்தில் உறிஞ்சப்படுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் பேஷன் பழம் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.
இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்க
பேஷன் பழத்தில் குறைந்த அளவிலான சோடியம் மற்றும் அதிகளவிலான பொட்டாசியம் காணப்படுகிறது. மேலும் இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்களும் நிறைந்துள்ளன. எனவே இவை உடலில் கொழுப்பைக் குறைக்கவும், இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
பேஷன் பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இந்த பழத்தில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி உள்ளடக்கம் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் சேதத்தைத் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இரத்த அழுத்தத்தைக் கண்காணிக்க
உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, இரத்தத்தை பம்ப் செய்யும் போது, தமனிகள் இறுக்கமடைகிறது. இது பக்கவாதம் அல்லது மாரடைப்பு போன்ற கடுமையான இதயப் பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். பேஷன் பழத்தில் உள்ள அதிகளவிலான பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் அபாயத்தைத் தவிர்க்கலாம்.
ஆஸ்துமாவுக்கு சிகிச்சையளிக்க
ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஏற்படக்கூடிய இருமல், மூச்சுத்திறணல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்க பேஷன் பழச்சாறுகள் உதவுகின்றன. இதற்கு இந்த பழத்தில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகளே காரணமாகும்.
இந்த பதிவும் உதவலாம்: Yellow Dragon Fruit: அடேங்கப்பா.. சிவப்பு டிராகன் பழத்தை விட மஞ்சள் டிராகன் பழத்தில் இவ்வளவு சத்து இருக்கா?
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த
பேஷன் பழத்தில் ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை நரம்பியல் நன்மைகளை வழங்குகிறது. இதில் உள்ள ஃபோலேட் அறிவாற்றல் வீழ்ச்சியைக் குறைக்க உதவுகிறது. மேலும் பொட்டாசியம் மூளைக்கு இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இவை அறிவாற்றல் மற்றும் நரம்பியல் செயல்பாட்டை மேம்படுத்த வழிவகுக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த
பேஷன் பழத்தில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இந்த தாதுக்கள் எலும்பு அடர்த்தியை பராமரிக்க உதவுகிறது. மேலும், இவை தொடர்ச்சியான எலும்பு முறிவுகளைத் தடுக்கவும் வழிவகுக்கிறது.
புற்றுநோய் அபாயத்தைக் குறைக்க
புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக செல்களை சேதப்படுத்தக்கூடிய ஃப்ரீ ரேடிக்கல்கள் அமைகின்றன. பேஷன் பழத்தில் அதிக அளவிலான வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இவை செல் சேதம் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
சிறந்த தூக்கத்திற்கு
பேஷன் பழத்தில் தூக்கத்தைத் தூண்டக்கூடிய மயக்க மருந்துகளாகச் செயல்படும் ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதில் உள்ள ஆல்கலாய்டுகள் அமைதியின்மை, தூக்கமின்மை மற்றும் பதட்டத்தைக் குறைக்க உதவுகின்றன. இதன் மூலம் சிறந்த தூக்கத்தைப் பெறலாம்.
பேஷன் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
- பெரும்பாலானோர்க்கு இந்த பழம் ஆரோக்கியமானதாக மற்றும் பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், லேடெக்ஸூக்கு ஒவ்வாமை உள்ள நபர்களுக்கு பேஷன் பழம் ஏற்றதாக இருக்காது. பேஷன் பழத்தில் உள்ள புரதம், அமைப்பில் லேடெக்ஸ் புரதத்தை ஒத்திருக்கிறது.
- மேலும் பேஷன் பழத்தில் சயனைடை உருவாக்கும் திறன் கொண்ட ரசாயனங்களும் உள்ளது. எனவே இதை அதிகளவு உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் சயனைடு மரணத்தை ஏற்படுத்தக்கூடும்.
அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் உள்ளடக்கம் காரணமாக, இது ஆரோக்கியமான மற்றும் சீரான உணவுக்கு ஒரு சிறந்த கூடுதலாக அமைகிறது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: எடை இழப்பு முதல்.. சீரான செரிமானம் வரை.. மஞ்சள் டிராகன் பழத்தின் நன்மைகள் இங்கே..
Image Source: Freepik