Jicama health benefits: எடையிழப்பு முதல் எலும்பு ஆரோக்கியம் வரை! பல நன்மைகளை அள்ளித் தரும் ஜிகாமா

Is it good to eat jicama: ஜிகாமா பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வேர் காய்கறி ஆகும். இது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் வகையில் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. இதில் ஜிகாமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும், அதன் சில பக்க விளைவுகளையும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Jicama health benefits: எடையிழப்பு முதல் எலும்பு ஆரோக்கியம் வரை! பல நன்மைகளை அள்ளித் தரும் ஜிகாமா


Health benefits of jicama: பொதுவாக வேர் காய்கறிகள் என்றாலே உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் முள்ளங்கி போன்றவையே நம் நினைவுக்கு வரும். இவை அனைத்தும் ஆரோக்கியமான உணவு வகையைச் சார்ந்ததாகும். அதன்படி, பெரிதும் யாருக்கும் தெரியாத இந்த வகை வேர் காய்கறியைச் சார்ந்த கிழங்குகளில் ஜிகாமாவும் ஒன்று. இது மெக்சிகன் டர்னிப் என்றும் அழைக்கப்படுகிறது. ஜிகாமா என்பது பழுப்பு நிற தோல் மற்றும் வெள்ளை சதையுடன் கூடிய மிருதுவான அமைப்பைக் கொண்ட காய்கறி ஆகும்.

இது இனிப்பு மற்றும் மாவுச்சத்து சுவை கொண்டதாகும். ஜிகாமாவில் கால்சியம், வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது தவிர, ஜிகாமா நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகவும், குறைந்த கலோரிகளைக் கொண்டிருப்பதாகவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் எடையிழப்பு என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருவதாகவும் அமைகிறது. எனினும், இது சில பக்க விளைவுகளையும் கொண்டதாகும்.

ஜிகாமாவின் ஊட்டச்சத்துக்கள்

ஜிகாமா அதிகளவு நீர்ச்சத்துக்கள் நிறைந்த வேர் காய்கறி ஆகும். இதில் கலோரிகள், புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், கால்சியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது மிகவும் ஈர்க்கக்கூடிய ஊட்டச்சத்து பண்புகளைக் கொண்டிருப்பதால் பலதரப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது. இதில் ஜிகாமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் சில பக்க விளைவுகளையும் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Sweet Potato In Diabetes: நீரிழிவு நோயாளிகள் சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிடலாமா?

ஜிகாமா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

எடை நிர்வாகத்திற்கு

எடை இழப்பு அல்லது ஆரோக்கியமான எடையை பராமரிப்பதில் ஜிகாமா முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில், இதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. மேலும் இது பசியைக் குறைக்க உதவுகிறது. கூடுதலாக, இதில் குறைந்த கலோரிகள் இருப்பதால், எடையைக் கண்காணிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக அமைகிறது.

நீரிழிவு நோய் நிர்வாகத்திற்கு

டைப் 2 நீரிழிவு நோய் ஆனது உயர் இரத்த சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அளவுகளுடன் தொடர்புடையதாகும். ஜிகாமா உட்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும், இதில் கரையக்கூடிய நார்ச்சத்துள்ள இன்யூலின் நிறைந்துள்ளது. இவை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கலாம் என ஆய்வில் கூறப்படுகிறது. எனவே நீரிழிவு நோயை நிர்வகிப்பதில் ஜிகாமா உதவுகிறது.

இதய ஆரோக்கியத்திற்கு

ஜிகாமா அதிக நைட்ரேட் அளவுகள் கொண்ட வேர் காய்கறியாகும். எனவே இது இதய ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். மேலும், இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. இதன் மூலம் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயத்தைக் குறைக்கிறது. கூடுதலாக, ஆய்வு ஒன்றில் புதிய ஜிகாமா சாறு அருந்துவது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஆக்ஸிஜனேற்ற விளைவுகள்

ஜிகாமா வேர் காய்கறியில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறத். உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு, உறுப்புகள் மற்றும் திசுக்களை சேதப்படுத்தலாம். ஜிகாமாவில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்கவும், கிருமிகளை எதிர்த்துப் போராடவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Red Radish Benefits: குளிர்காலத்தில் சிவப்பு முள்ளங்கி சாப்பிடுவதால் நிகழும் அற்புதங்கள்.!

குடல் ஆரோக்கியத்திற்கு

ஜிகாமாவின் சிறந்த நன்மைகளில் ஒன்றாக குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பது அமைகிறது. இந்த வேர் காய்கறியானது நார்ச்சத்துக்கள் நிறைந்த மூலமாகும். இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும், இந்த காய்கறியானது ப்ரீபயாடிக் சேர்மங்களைக் கொண்டுள்ளது. எனவே இது குடலில் ஆரோக்கியமான பாக்டீரியா சூழலுக்கு பங்களிக்கிறது. இதன் மூலம் செரிமான ஆரோக்கியத்தை மேலும் ஆதரிக்கிறது.

நீரேற்றமிக்க ஜிகாமா

உடலில் நீரிழப்பு காரணமாக பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுடன் சருமம், முடி வறட்சி பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் இது சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் போன்றவை ஏற்படவும் வழிவகுக்கிறது. இந்நிலையில், ஜிகாமாவில் நல்ல அளவு தண்ணீர் நிறைந்துள்ளதால், இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதன் மூலம் நீரிழப்பு பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

ஜிகாமா சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

ஜிகாமா பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தந்தாலும், இதை அதிகம் உட்கொள்வதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படலாம். அதில் சிலவற்றை இங்குக் காண்போம்.

  • ஜிகாமாவை உட்கொண்ட பிறகு சிலருக்கு வாய்வழி ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புண்டு. இதனால், வாயைச் சுற்றி அரிப்பு ஏற்படலாம்.
  • ஜிகாமாவில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலைப் போக்கக் கூடும். ஆனால், இது வாயு, வயிற்றுப் பிடிப்புகள் மற்றும் வீக்கம் போன்ற செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
  • மேலும், இதன் விதைகள், தண்டுகளில் பூச்சிக்கொல்லி பண்புகள் நிறைந்துள்ளதாகவும், இதை உட்கொள்வது வாந்திக்கு வழிவகுக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram 

இந்த பதிவும் உதவலாம்: Carrot beetroot juice benefits: தினமும் கேரட் பீட்ரூட் சாறு அருந்துவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Image Source: Freepik

Read Next

இவர்கள் மறந்தும் மஞ்சள் நீரை குடிக்கக்கூடாது.?

Disclaimer