Sat Sep 12, 2026 | 12:22 AM IST

Thuthuvalai Health Benefits: ஒன்றா, இரண்டா? ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் தூதுவளை!

Health Benefits Of Thuthuvalai: தூதுவளைக் கீரை அல்லது தூதுவளை என்பது ஒரு வகையான மூலிகையாகும். குறிப்பாக, சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் தூதுவளை மிகுந்த நன்மைகளை அளிக்கிறது. இது சளி, இருமல் மற்றும் சுவாசக் கோளாறுகள் போன்றவற்றைச் சரி செய்ய உதவுகிறது. சளியை குணப்படுத்த தூதுவளையைக் கொண்டு வீட்டிலேயே கஷாயம் தயார் செய்து அருந்தலாம். இது தவிர, சூப், சட்னி, ரசம், துவையல் போன்ற பல்வேறு ரெசிபி வகைகளில் தூதுவளையைப் பயன்படுத்தலாம். இந்த மருத்துவ பண்புகள் நிறைந்த தூதுவளைச்செடி முட்கள் நிறைந்ததாக காணப்படும். இலைகளிலும் முட்கள் காணப்படலாம்.

எனவே இதனை பறிக்கும் போது கவனம் தேவைப்படும். இதை வீட்டில் வளர்த்தாலும் கவனமுடன் கையாள வேண்டும். தூதுவளைச் செடியின் பூக்கள் வாடாமல்லி நிறத்தில் காணப்படும். தூதுவளையில் அமினோ அமிலங்கள், சாப்போனின்கள், ஃபினோலிக், ஸ்டீராய்டுகள், டிரிட்டர்பினாய்ட்கள் போன்ற உட்பொருள்கள் நிறைந்துள்ளது. இது தவிர, இதில் சோலைன், சோலாசோடின், டியோசோஜெனின் போன்ற வேதிப்பொருட்களும் காணப்படுகிறது. காய்ந்த தூதுவளைப்பொடியில் டானின்கள், கார்போஹைட்ரேட்கள் காணப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Moong Dal Masala Puri: குழந்தைகளுக்கு பிடித்த பாசிப்பருப்பு மசாலா பூரி செய்முறை!

மருத்துவ குணங்கள் நிறைந்த தூதுவளை

சளி மற்றும் இருமலைப் போக்க உதவும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாக தூதுவளை பயன்படுத்தப்படுகிறது. ஆரம்ப நிலையிலேயே சளி, இருமல் நோய்களைப் போக்க உதவக்கூடிய சிறந்த தேர்வாக தூதுவளை அமைகிறது. இதனை ரசம் வைக்கப் பயன்படுத்தலாம். வழக்கமான ரசத்தில் இந்த தூதுவளை இலையை அரைத்து கலந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சளி, இருமலைப் போக்கலாம். இதன் மூலம் நெஞ்சு சளி, இருமல், மூக்கடைப்பு, சைனஸ் தொற்று போன்றவை கட்டுப்படுத்தப்படுகிறது.

தூதுவளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

வீக்கத்தைக் குறைக்க

தூதுவளைச் சாறு வீக்கத்திற்கு எதிரான குணங்களைக் கொண்டுள்ளது. எனவே உடலில் வீக்கம் ஏற்படும் போது தூதுவளையில் சூப் அல்லது ரசம் வைத்து அடிக்கடி சாப்பிடலாம். இவ்வாறு தூதுவளையை உட்கொள்ளும் போது, அது அந்த வீக்கத்தைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.

ஆஸ்துமா குணமாக

ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை மிகவும் முக்கிய மூலிகையாகக் கருதப்படுகிறது. தூதுவளையைக் கொண்டு சூப் வைத்து அருந்துவது ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்ததாக அமைகிறது. மேலும், இருமல் மற்றும் மூச்சுத்திணறல் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டதாகும்.

கொசுக்களை விரட்ட

கொசுக்களை இயற்கையான முறையில் விரட்டுவதற்கு தூதுவளைச் சாறு உதவியாக அமையும். அதன் படி, தூதுவளைச் சாற்றை நம் உடலில் தடவிக் கொள்வதன் மூலம் மலேரியாவை ஏற்படுத்தும் அனோஃபெலிஸ் கொசுக்களை விரட்டலாம். இது தவிர, கொசுக்கள் அதிகம் உள்ள இடத்தில் தூதுவளையின் சாறை தெளிப்பதன் மூலம் கொசு முட்டையிடுவதைத் தடுக்கலாம். மேலும் அதன் அடர்த்தியைப் பொறுத்து கொசுக்களை அழிக்கலாம்.

ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்த

தூதுவளையில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது. இவ்வாறு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ள உணவை உட்கொள்வது நம் உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் வயோதிகத்தை ஏற்படுத்தக்கூடிய ஃப்ரீரேடிக்கல்களைத் தடுக்கிறது. தூதுவளையை எப்படி உட்கொண்டாலும் அது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Gut Health Drinks: குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் சூப்பர் பானங்கள்

புற்றுநோயைத் தடுக்க

தூதுவளை புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் கொண்ட மூலிகையாகும். இதில் உள்ள வேதிப்பொருள்கள் புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. மேலும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் தூதுவளையை உட்கொள்வதன் மூலம், புற்றுநோய் செல்களின வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். இந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்தை நீக்கி, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களை தடுக்க உதவுகிறது.

நீரிழிவு நோய்க்கு எதிராக

இரத்த சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பண்புகளை தூதுவளை கொண்டுள்ளது. நீரிழிவு நோய்க்கு எதிரான குணங்கள் கொண்ட இந்த தூதுவளை ரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. மேலும் சிறுநீரக ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கவும் தூதுவளை முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அன்றாட உணவில் நீரிழிவு நோயாளிகள் தூதுவளையைச் சேர்த்துக் கொள்ளலாம்.

இவ்வாறு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அளிக்கும் தூதுவளையை நம் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பலதரப்பட்ட உடல்நல பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: அருமையான சுவையில் மணக்க மணக்க கொளுக்கட்டை ரெசிபி! இப்படி செஞ்சி அசத்துங்க

Image Source: Freepik

Read Next

மட்டன் குழம்பையே ஓரம் கட்டும் பாலக் பன்னீர்… எப்படி செய்யணும் தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content