Brahmi tea benefits: ஒன்றா, இரண்டா பல நன்மைகளை அள்ளித்தரும் பிராமி டீ! இப்படி குடிச்சி பாருங்க

What are the benefits of Brahmi tea: பிராமி மூலிகை உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் சிறந்த மூலிகைகளில் ஒன்றாகும். பிராமி இலைகளை வைத்து தயாரிக்கப்படும் டீ மிகுந்த நன்மை பயக்கும். குறிப்பாக, குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த நபர்களுக்கு இந்த டீ பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது. இதில் பிராமி டீ அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
Brahmi tea benefits: ஒன்றா, இரண்டா பல நன்மைகளை அள்ளித்தரும் பிராமி டீ! இப்படி குடிச்சி பாருங்க


Can we consume Brahmi daily: இன்றைய மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறையால் பலரும் பல்வேறு பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக ஆரோக்கியமற்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது, உட்கார்ந்த வாழ்க்கை முறை போன்றவையே நாள்பட்ட நோய்களுக்குக் காரணமாகிறது. அந்த வகையில், நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சில ஆயுர்வேத வழிமுறைகள் கையாளப்படுகிறது.

அதன் படி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதற்கு ஆயுர்வேதத்தில் பிராமி என்ற மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இந்த மூலிகையை வைத்து தயார் செய்யப்படும் தேநீரை அருந்துவது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் மற்றும் 50 வயதுக்கும் மேற்பட்ட பெரியவர்கள் போன்றோர் மிகுந்த பயனடைகின்றனர். இதில் பிராமி டீ அருந்துவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்:  Lemon clove water benefits: காலையில் காபிக்குப் பதிலா இந்த லெமன் கிராம்பு வாட்டரை குடிங்க!

பிராமி என்றால் என்ன?

பிராமி என்பது சேற்று சதுப்பு நிலங்களில் காணப்படும் தரையில் வளரக்கூடிய ஒரு வகை மூலிகை செடியாகும். இதன் இலைகள் சற்று சதைப்பற்றுள்ளவையாகும். மேலும் இது வெளிர் நீலம், வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு பூக்களுடன் சற்று அடர்த்தியானதாகக் காணப்படும். பிராமியானது இந்திய பென்னிவார்ட், நீர் மருதாணி என்ற பெயர்களுடன் அழைக்கப்படுகிறது. இந்த பழங்கால மூலிகையானது மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கவும் உதவுகிறது. பல மூலிகைகள் பிராமி என்றழைக்கப்படுவதால், எது உண்மையான பிராமி என்ற குழப்பம் ஏற்படலாம். எனவே, இந்த பிராமி மூலிகைகள் சென்டெல்லா ஆசியாட்டிகா, பாகோபா மோனியேரி மற்றும் ஹைட்ரோகோடைல் போன்ற தாவர குடும்பங்களை உள்ளடக்கியதாகும்.

பிராமியின் ஆரோக்கிய நன்மைகள்

பழங்கால மூலிகையாகக் கருதப்படும் இந்த பிராமியை, பண்டைய முனிவர்கள் புத்துணர்ச்சியூட்டும் பொருளாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த காலத்திலும், பிராமியானது ஆழ்ந்த தியானத்தின் போது கவனத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இது உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் சிறந்த மூலிகையாகும். குறிப்பாக, பிராமியை தேநீராக உட்கொள்வது அதன் மருத்துவ குணங்கள் காரணமாக பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.

குழந்தைகள் பிராமி டீ அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்

மூளை வளர்ச்சிக்கு

பிராமி மூலிகையின் உதவியுடன் குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்குத் தேவையான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியும். இது நினைவாற்றல், கற்றல் மற்றும் மனநிலை மேம்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் மனக்கவலை, மன அழுத்தம் போன்றவற்றைக் குறைக்கிறது. இது தவிர, டிமென்ஷியா மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பியல் கடத்தி பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Water After Meals: அட உங்களுக்கு சாப்பிட்ட பின் ஜில்லுன்னு தண்ணீர் குடிக்கும் பழக்கம் இருக்கா?

பதட்டத்தைக் குறைக்க

குழந்தைகள் அடிக்கடி பள்ளி, சமூக தொடர்புகளின் சவால்களை எதிர்கொள்ளும் போது பதட்டத்தைச் சந்திக்கின்றனர். இந்நிலையில் பிராமி டீ உட்கொள்வது அவர்களின் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைக்கிறது.

மேம்பட்ட கவனம்

குழந்தைகளின் நினைவாற்றலை மேம்படுத்தவும், சிறந்த கவனம் செலுத்தவும் பிராமியைப் பயன்படுத்தலாம். இது அவர்களின் கற்றல் மற்றும் தகவல்களைத் தக்கவைத்துக்கொள்வதை எளிதாக்க உதவுகிறது.

வயதானவர்களுக்கு பிராமி தரும் நன்மைகள்

பொதுவாக வயதாகும் போது, கவனம், நினைவாற்றல், அறிவாற்றல் திறன் போன்றவை குறையலாம். குறிப்பாக, 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களில் மன அழுத்தம் மற்றும் கவலை அளவுகள் அதிகமாகக் காணப்படலாம். இந்நிலையில் பெரியவர்கள் பிராமி டீ அருந்துவது மன அழுத்தத்தின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைத்து அமைதியை ஊக்குவிக்கிறது. மேலும், பிராமி மனநிலையை மேம்படுத்தும் குணங்களைக் கொண்டுள்ளது.

இது தவிர, பிராமி இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. மேலும், செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும், குடல் செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதன் ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி நோய்த்தொற்றுகள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்கு உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Drinking hot Water: காலையில் வெறும் வயிற்றில் வெந்நீர் குடிப்பவரா நீங்க? இதை தெரிந்து கொள்ளுங்க!

Image Source: Freepik

Read Next

நுரையீரலில் உள்ள சளியை அகற்ற இந்த ஆயுர்வேத வைத்தியங்களை பின்பற்றுங்கள்

Disclaimer

குறிச்சொற்கள்