Health benefits of lemon and clove water: இன்றைய நவீன காலகட்டத்தில் காலை எழுந்ததும் பெரும்பாலானோர் காபி, டீ, பால் போன்ற பானங்களையே விரும்பி அருந்துகின்றனர். ஆனால், வெறும் வயிற்றில் காபி, டீ அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் வெறும் வயிற்றில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவுமுறைகளில் மிகவும் கவனமாக மற்றும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும். அவ்வாறே, தினமும் காலையில் கிராம்பு மற்றும் எலுமிச்சை கலந்த நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும்.
அதிலும் குளிர்காலம் வந்து விட்டாலே நாம் சூடான பானங்களையே விரும்புவோம். இது நம் உடலை சூடாக வைத்திருப்பதுடன், குளிர்காலத்தில் ஏற்படும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். மேலும் சளி, இருமலால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருப்பினும், அவர்கள் இந்த பானம் அருந்துவது சிறந்த தேர்வாகும். ஆயுர்வேதத்தின் படி, கிராம்பு செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. மேலும் எலுமிச்சைச் சாறு அஜீரணத்திற்கு மருந்தாகவும் பயன்படுகிறது. இந்த கிராம்பு எலுமிச்சைச் சாறு அருந்துவதன் மூலம் குளிர்கால சளி மற்றும் இருமலை நிர்வகிக்கலாம். இதில் கிராம்பு எலுமிச்சை நீர் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Warm Lemon Water Benefits: உடலில் தேங்கிய கொழுப்பை சீக்கிரமா கரைக்கும் லெமன் வாட்டர்!
எலுமிச்சை கிராம்பு நீரின் ஆரோக்கிய நன்மைகள்
தொண்டை வலிக்கு
தொண்டை அரிப்புடன் போராடுபவர்களுக்கு இந்த கிராம்பு எலுமிச்சை நீரின் வெப்பம் சிறந்த ஆறுதல் அளிக்கும். இதில் எலுமிச்சை அமிலமானது, குரல்வளையின் சளியை வெளியேற்றுகிறது. அதே சமயம், கிராம்புவில் யூஜெனால் என்ற மயக்க மருந்து நிறைந்துள்ளது. இவை தொண்டை வலியைக் குறைக்க உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
ஆற்றல் ஊக்கியாக
காஃபின் அருந்துவது சில சமயங்களில் சோர்வை குறைக்காமல் போகலாம். இதற்கு எலுமிச்சை மற்றும் கிராம்பு நீர் குடிக்கலாம். இது உடலுக்கு மென்மையான ஆற்றலை வழங்குகிறது. எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் உடல் சோர்வை எதிர்த்துப் போராடுகிறது. கிராம்புகள் உடல் உணர்வுகளைத் தூண்டி, இயற்கையான ஊக்கத்தைத் தருகிறது.
நாசி நெரிசலைக் குறைக்க
மூக்கு நெரிசலாக இருப்பதாக உணர்பவர்கள், கிராம்பு மற்றும் எலுமிச்சை நீரிலிருந்து நீராவியை உள்ளிழுக்க முயற்சிக்கலாம். மேலும் இந்த சிட்ரஸ் சளியை உடைத்து அதை தளர்த்த உதவுகிறது. கிராம்பு சுவாசிக்க உதவும் இயற்கையான தேக்க நீக்கியாக செயல்படுகிறது.
நோயெதிர்ப்பு அமைப்பை மேம்படுத்த
எலுமிச்சையில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகிறது. இவை சளியைக் குறைக்க உதவக்கூடிய மிகவும் நம்பகமான ஆக்ஸிஜனேற்றிகளில் ஒன்றாகும். மேலும், கிராம்புகளில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. எனவே குளிர்காலத்தில் பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபடவும், உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை மேம்படுத்தவும் கிராம்பு எலுமிச்சை நீர் அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Lemon for Weight Loss: உடல் எடை குறையனுமா? எலுமிச்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!
எலுமிச்சை மற்றும் கிராம்பு தண்ணீரை எப்படி செய்வது
கிராம்புகளை வேகவைப்பது
முதலில் கிராம்புகளை தண்ணீரில் சேர்த்து, அதன் ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் உட்செலுத்தப்படும் வரை கொதிக்க வேண்டும்.
சாதாரண வெப்பநிலைக்கு மாற்றுவது
பிறகு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்ப்பதற்கு முன் தண்ணீரை ஒரு சூடான, வசதியான வெப்பநிலையில் குளிர்விக்க விடலாம். சூடான நிலையில் எலுமிச்சைச் சாறு சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும். தண்ணீர் சாதாரண வெப்பநிலையில் இருக்கும் போது வைட்டமின் சி உள்ளடக்கத்தைப் பாதுகாக்கவும் மற்றும் கசப்பைத் தடுக்கவும் எலுமிச்சை சேர்க்கலாம்.
தேன் சேர்ப்பது
கூடுதல் இனிமையான விளைவுகள் மற்றும் சீரான சுவையைப் பெற, ஒரு தேக்கரண்டி தேன் சேர்க்கலாம்.
இவ்வாறு தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து கிராம்பு நீர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மைகளைத் தருகிறது. இந்த பானத்தை சளி, இருமல் அல்லது தொண்டை வலி இருந்தால், தினமும் ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை அருந்தலாம். இந்த பானம் பெரும்பாலானோர்க்கு பாதுகாப்பானதாக இருப்பினும், வயிற்றுப் புண்கள், உணவுக்குழாய் பிரச்சினைகள் மற்றும் எலுமிச்சைக்கு உணர்திறன் கொண்டவர்கள் போன்றோர் மருத்துவ ஆலோசனை பெற்ற பிறகு அருந்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தினமும் இஞ்சி எலுமிச்சை நீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா.?
Image Source: Freepik