Top ayurvedic benefits of brahmi powder for health and wellness: இன்றைய பிஸியான காலகட்டத்தில் நாம் பெரும்பாலான விஷயங்களை நினைவில் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. அன்றைய நாளில் நடந்த விஷயங்களைக் கூட நாளின் முடிவிலேயே நம்மால் நினைவு கூற முடியாமல் போகிறோம். அதற்கும் மேலாக, இந்த டிஜிட்டல் யுகத்தில் அதிகளவு திரை பயன்பாடு நம் மூளையை அதிகம் பாதிப்பதாகவே அமைகிறது. எனவே தான் மறதியை சந்திக்கிறோம். இதனால் வேலை செய்ய அல்லது படிக்க உட்கார்ந்தவுடன் கவனம் சிதறி கவனத்தை இழக்கிறோம். அவ்வாறெனில், மறதியை நிர்வகிக்க விரும்புபவர்களுக்கு பிராமி ஒரு சிறந்த ஆயுர்வேத சிகிச்சையாகக் கருதப்படுகிறது.
ஆம். ஆயுர்வேதத்தில், பிராமி 'மேத்ய ரசாயனம்' என்று கருதப்படுகிறது. அதாவது இது மூளை மற்றும் நினைவாற்றலை ஆதரிக்கும் ஒரு மூலிகை ஆகும். இதன் அறிவியல் பெயர் பகோபா மோன்னீரி ஆகும். ஆயுர்வேதத்துடன், நவீன அறிவியலும் பல ஆராய்ச்சிகளுக்குப் பிறகு இதை மிகவும் பயனுள்ளதாகவும் நன்மை பயக்கும் என்றும் கூறப்படுகிறது. சந்தையில், பிராமி என்ற சொல் சில நேரங்களில் கோட்டு கோலாவிற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் பிராமி பொடியைப் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: Brahmi tea benefits: ஒன்றா, இரண்டா பல நன்மைகளை அள்ளித்தரும் பிராமி டீ! இப்படி குடிச்சி பாருங்க
பிராமி பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்
நினைவாற்றல் மற்றும் செறிவு அதிகரிப்பதற்கு
பிராமியை உட்கொள்வதில் பல்வேறு நன்மைகள் இருப்பினும், அது பெரும்பாலும் நினைவாற்றலுக்கு உதவுவது முதன்மையாகக் கருதப்படுகிறது. ஆனால், பெரும்பாலான மக்கள் பிராமியை நினைவாற்றலை மேம்படுத்த மட்டுமே அறிவார்கள். பிராமி பவுடரின் பண்புகள் மூளை செயல்பாடு செறிவை மேம்படுத்துகிறது. மேலும் படிக்கும் குழந்தைகள், தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் அல்லது மன வேலை செய்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நரம்பு மண்டலத்தை பலப்படுத்தவும், கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்தவும் உதவுகிறது.
மன நோய்களிலிருந்து பாதுகாப்பு
ஆய்வுகளின்படி, பிராமி நரம்பு செல்களின் வளர்ச்சியை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இவை மூளையை சேதத்திலிருந்து பாதுகாப்பாக வைக்கிறது. பிராமி நரம்பு தூண்டுதல் பரிமாற்றத்தை மேம்படுத்துவதுடன், சேதமடைந்த நரம்பு செல்களை சரிசெய்யவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. எனவே, அல்சைமர் மற்றும் பார்கின்சன் போன்ற நோய்களைத் தடுப்பதற்கு இது மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. குடும்பத்தில் இந்த நோய்களின் வரலாற்றைக் கொண்டவர்களுக்கு பிராமியை உட்கொள்வது நன்மை பயக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
பிராமியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலை ஃப்ரீ ரேடிக்கல்களிலிருந்து பாதுகாக்கின்றன. மேலும் இது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை பலப்படுத்தவும், பல வகையான தொற்றுகளை எதிர்த்துப் போராட உடலுக்கு வலிமை அளிக்கவும் உதவுகிறது. எனவே, அடிக்கடி நோய்வாய்ப்பட்டவர்கள் பிராமியை உட்கொண்டால், அவர்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தைக் காணலாம்.
மன அழுத்தம் மற்றும் பதட்டத்தைக் குறைப்பது
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் மன அழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. அலுவலகம் முதல் வீடு வரை, எல்லா இடங்களிலும் ஒருவர் ஏதோ ஒரு மன அழுத்த சூழ்நிலையில் சிக்கிக் கொள்ளும் நிலை உண்டாகிறது. இந்நிலையில், அவர்கள் பிராமி பொடியை தொடர்ந்து உட்கொள்வது கார்டிசோலை (மன அழுத்த ஹார்மோன்) சமநிலைப்படுத்த உதவுகிறது. இது மனதை அமைதியாக வைத்திருக்கவும், நல்ல தூக்கத்திற்கும் வழிவகுக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: மறதியை அடியோடு மறக்க வைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் இதோ...!
சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்திற்கு
பிராமி பொடி பயன்பாடு சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். தலையில் இதைப் பயன்படுத்துவது முடியை வலுப்படுத்தி பொடுகைப் போக்க உதவுகிறது. மேலும், இதை சருமத்தில் பயன்படுத்துவது தழும்புகள் மற்றும் முகப்பரு பிரச்சனையைக் குறைக்க வழிவகுக்கிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பிராமி பொடியை எடுத்துக் கொள்ளும் முன்பாக, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கையாள்வது மிகவும் அவசியமாகும். பொதுவாக, நகரங்களில் நல்ல தரமான தூய பிராமியைக் கண்டுபிடிப்பது கடினமாகும். எனவே, நம்பகமான தயாரிப்பை நன்கு சரிபார்த்து வாங்குவது நல்லது. அதே சமயம், பிராமி சிலருக்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே ஆயுர்வேத மருத்துவரை அணுகாமல் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இது தவிர, உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால் அல்லது நீங்கள் ஏதேனும் நோய்க்கு வழக்கமான மருந்து எடுத்துக் கொண்டிருந்தால், அதை உட்கொள்வதற்கு முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்ற பிறகே எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: ADHD உள்ள குழந்தைகளுக்கு.. இந்த உணவுகளை கொடுக்கவும்.. நிபுணர் பரிந்துரை..
Image Source: Freepik