இன்றைய காலத்தில் பல குழந்தைகள் கவனக் குறைவு மற்றும் ஹைப்பர் ஆக்டிவிட்டி (ADHD - Attention Deficit Hyperactivity Disorder) போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இதை குறைக்க இயற்கையான உணவுப் பழக்கங்கள் பெரும் உதவியாக இருக்கும் என Ayurveda Nutrition & Gut Health Coach டிம்பிள் ஜாங்க்டா கூறியுள்ளார்.
ADHD உள்ள குழந்தைகளுக்கான உணவுகள்
பிராமி (Brahmi)
* பிராமி மூளைக்கான சிறந்த மூலிகை.
* குழந்தைகளுக்கு தேநீர் வடிவில் கொடுக்கலாம்.
இது நினைவாற்றலை அதிகரிக்கவும், புதிய மூளை செல்களை உருவாக்கவும் உதவும்.
காய்கறிகள்
*கீரை (Spinach): சத்துக்கள் நிறைந்தது. ADHD அறிகுறிகளை குறைத்து, மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
* சுரைக்காய் (Bottle Gourd): எளிதில் ஜீரணமாகும், உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொண்டு ஹைப்பர் ஆக்டிவிட்டியை குறைக்கும்.
* சர்க்கரை வள்ளிக்கிழங்கு (Sweet Potato): மெதுவாக சக்தி தரும், இரத்தத்தில் சர்க்கரை திடீர் உயர்வைத் தவிர்க்கும், குழந்தைகளை அமைதியாக வைத்துக்கொள்ளும்.
பழங்கள்
* ஆப்பிள் (Apple): நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்தது. குடல் மற்றும் மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
* வாழைப்பழம் (Banana): பொட்டாசியம், நார்ச்சத்து நிறைந்தது. உடலில் சோடியத்தை குறைத்து ஹைப்பர் ஆக்டிவிட்டியை கட்டுப்படுத்துகிறது.
* ப்ளூபெர்ரி (Blueberries): ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆந்தோசயனின்ஸ் நிறைந்தது. மூளை, நரம்பியல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
நட்ஸ் & விதைகள்
* பாதாம் (Almonds): தினமும் 7–11 பாதாம் ஊறவைத்து, தோல் நீக்கி காலை வெறும் வயிற்றில் கொடுக்க பரிந்துரைக்கப்படுகிறது. இதில் வைட்டமின் E, புரதம், பையோடின் உள்ளதால் மூளை மற்றும் நினைவாற்றலை மேம்படுத்தும்.
* ஆளி விதை (Flax Seeds): ஓமேகா–3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்தது. குடல் ஆரோக்கியத்தையும், மூளை வளர்ச்சியையும் மேம்படுத்துகிறது.
View this post on Instagram
Disclaimer: இந்த கட்டுரை பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது. இது மருத்துவ ஆலோசனை அல்ல. உங்கள் குழந்தைக்கு ADHD அல்லது பிற உடல் நலப் பிரச்சினைகள் இருந்தால், உணவு முறையில் மாற்றம் செய்யும் முன் தகுதியான மருத்துவர் அல்லது நிபுணரிடம் ஆலோசனை பெறவும்.