உங்க குழந்தையின் குடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவர் சொன்ன இந்த 5 உணவுகளைக் கொடுங்க

What foods are good for kids gut health: குடல் ஆரோக்கியம் பெரியவர்கள் மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் மிகவும் முக்கியமாகும். ஆரோக்கியமான குடல் ஆரோக்கியம் சரியான செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு அவசியமாகும். இதில் குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்க வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
உங்க குழந்தையின் குடல் ஆரோக்கியத்திற்கு மருத்துவர் சொன்ன இந்த 5 உணவுகளைக் கொடுங்க

Tips to Maintain a Healthy Gut in Kids: பொதுவாக குடல் ஆரோக்கியம் என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாகும். ஆம். உண்மையில், குடல் ஆரோக்கியம் செரிமான மேம்பாடு, சரும ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம் உள்ளிட்ட பல்வேறு அச்சுகளுடன் தொடர்புடையதாகும். எனவே தான், இது பெரியவர்களுக்கு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் மோசமான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர்.

இதில் பெரும்பாலும் குழந்தைகள் சிறுவயதிலேயே பல பிரச்சனைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குழந்தைகள் செரிமான அசௌகரியங்களைச் சந்திக்கின்றனர். இது அவர்களின் குடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதைக் குறிக்கிறது. பொதுவாக, ஆரோக்கியமான இரைப்பை குடல் பாதை உணவை உடைக்க உதவுகின்றன. இவை ஆற்றலை மேம்படுத்தவும், ஊட்டச்சத்து உறிஞ்சுதலை ஆதரிக்கவும் உதவுகிறது. எனவே, குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வது அவர்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஹெல்த்தியா எந்தப் பிரச்சனையும் இல்லாம இருக்கணுமா? இந்த 5 மூலிகைகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

குழந்தைகளின் குடல் ஆரோக்கியம்

வளரும் ஆண்டுகளில், குழந்தைகளுக்கு அடிப்படையான சரியான செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு ஆரோக்கியமான குடல் இருப்பதை ஊக்குவிப்பது அவசியமாகும். உணவிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகின்றன. மேலும் இவை எலும்புகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சீரான குடல் நுண்ணியிரியின் உதவியுடன் ஒரு வலுவான நோயெதிர்ப்புச் சக்தியை ஆதரிக்க முடியும். இவை குழந்தைகள் பல்வேறு நோய்த்தொற்றுக்கள் மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், குடல் ஆரோக்கியத்தின் உதவியுடன் ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்ற நிலைமைகளின் அபாயங்களைக் குறைக்கலாம்.

குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்திற்கு உணவுமுறை

குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் ஆரோக்கியமான உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. இன்ஸ்டாகிராம் பதிவில், எய்ம்ஸ், ஹார்வர்ட் மற்றும் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற இரைப்பை குடல் நிபுணரான குடல் மருத்துவர் டாக்டர் சௌரப் சேத்தி, அவர்கள் குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் 5 சிறந்த உணவுகளைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து இதில் விரிவாகக் காண்போம்.

இன்ஸ்டாகிராம் பதிவில் அவர் கூறியதாவது, “பெற்றோர்களே, குழந்தைகளின் ஆரோக்கியமான குடலுக்கு பரிந்துரைக்கும் உணவுகள் இவை தான்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்க்கரைவள்ளிக்கிழங்கு

இது இனிமையானது, சத்தானது மற்றும் குடலுக்கு உகந்த உணவாகும். இவை குழந்தைகளின் குடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழைப்பழம்

நிபுணரின் கூற்றுப்படி, “சற்று பச்சை வாழைப்பழங்களில் ப்ரீபயாடிக் நார்ச்சத்து நிறைந்துள்ளது”. இந்த நார்ச்சத்துக்கள் ஆரோக்கியமான குடலுக்கு வழிவகுக்கிறது.

பெர்ரி

பெர்ரி பழங்கள் நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை குடலை நல்ல நிலையில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: குடல் ஆரோக்கியம் வளர்ச்சிதை மாற்றத்தை பாதிக்குமா? எப்படினு தெரிஞ்சிக்கோங்க

வெற்று தயிர்

தயிர் ஒரு சிறந்த புரோபயாடிக் நிறைந்த உணவாகும். எனினும், இனிப்பு மற்றும் சுவையூட்டப்பட்ட தயிர் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

ஓட்ஸ்

இது நார்ச்சத்துக்கள் நிறைந்த சிறந்த உணவாகும். இவை குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை வளர்க்க உதவுகிறது. இதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க வேறு சில குறிப்புகள்

குடலில் நன்மை பயக்கும் குடல் பாக்டீரியாக்களை வளர்ப்பதற்கு பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகள் உட்பட நார்ச்சத்துக்கள் நிறைந்த பல்வேறு உணவுகளை குழந்தைகளுக்குத் தருவதை உறுதி செய்ய வேண்டும். மேலும், புரோபயாடிக்குகள் மற்றும் ப்ரீபயாடிக்குகள் நிறைந்த உணவுகளைத் தொடர்ந்து தருவதில் கவனம் செலுத்த வேண்டும்.

  • நல்ல செரிமானத்திற்கு நீரேற்றம் அவசியமாகும். எனவே குழந்தைகளில் போதுமான அளவு தண்ணீர் உட்கொள்ளலை ஊக்குவிக்க வேண்டும்.
  • தொடர்ச்சியான உடற்பயிற்சி குடல் இயக்கத்தை ஊக்குவிக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான செரிமானத்திற்கு முக்கியமானதாகும்.
  • சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் உட்கொள்வதைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் குடலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் அதிகப்படியான வளர்ச்சியைத் தடுக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வீக்கம், வயிறு உப்புசத்தைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகரை எப்படி எடுத்துக்கணும் தெரியுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

Image Source: Freepik

Read Next

பிஸ்தா பருப்பு தசைக்கு மட்டும் அல்ல.. பாலியல் ஆரோக்கியத்திற்கும் நல்லதாம்... எப்படி சாப்பிடணும் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்