Prebiotic potential of herbal medicines used in digestive health: இன்றைய வேகமான வாழ்க்கையின் நடுவில், சில சமயங்களில் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பதில் சிரமத்தை எதிர்கொள்கிறோம். ஆரோக்கியம் என்பது செல்வத்தைக் குறிக்கிறது. உணவைத் தவிர்ப்பது, நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவது உள்ளிட்ட விஷயங்கள் நம் உடலை மோசமாக பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இதன் இறுதி விளைவாக மோசமான செரிமான அமைப்பு வாழ்க்கை, முறை மாற்றங்கள் அல்லது பாட்டியின் வீட்டு வைத்தியம் என எதுவாக இருந்தாலும் குடலைக் குணப்படுத்துவதற்கான தந்திரங்களை முயற்சி செய்கிறோம்.
மேலும் இந்த நிலைமையைச் சமாளிக்க முயற்சிப்பவராக இருந்தால், அவர்களுக்கு உதவும் வகையில் ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் குடலைக் குணப்படுத்த உதவும் ஐந்து மூலிகைகளைப் பகிர்ந்துள்ளார். இதில் எந்தெந்த மூலிகைகள் குடலைக் குணப்படுத்துகிறது என்பது குறித்து காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: கோடை வெப்பத்தால் எரிச்சலை உணர்கிறீர்களா? எரிச்சலைத் தணித்து ஜில்லுனு வைக்க உதவும் ஆயுர்வேத மூலிகைகள் இதோ
குடலைக் குணப்படுத்த உதவும் ஐந்து மூலிகைகள்
புதினா
நம் அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் புதினாவைச் சேர்க்கலாம். அதன்படி, புத்துணர்ச்சியூட்டும் புதினாவை புதினா தேநீர் முதல் சாலட்கள் வரை பல வழிகளில் புதினாவைச் சேர்க்க முடியும். புதினாவில் மெந்தோல் என்ற கலவை உள்ளது. புதினா உட்கொள்வது செரிமான மண்டலத்தின் தசைகளில் அதன் தளர்வு விளைவுகளின் மூலம் IBS அறிகுறிகளைப் போக்க உதவுகிறது.
முக்கிய கட்டுரைகள்
கற்றாழை
இயற்கை தாவரமாக விளங்கும் மூலிகையான கற்றாழையானது ஒரு இயற்கை மலமிளக்கியாக செயல்படுகிறது. கற்றாழையின் உட்புறத்தில் காணப்படக்கூடிய ஜெல் போன்ற அமைப்பை எடுத்துக் கொள்வது செரிமான மண்டலத்தின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. கற்றாழை ஜெல்லை உட்கொள்ளும் போது அதை நன்கு கழுவி சாப்பிடுவது நல்லது.
அதிமதுரம் வேர்
ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் கூறுகையில், அதிமதுரம் ஆனது செரிமானத்தை ஆதரிப்பது மட்டுமல்லாமல், வயிற்றை ஆற்றக்கூடிய ஒரு பிரபலமான உணவு மூலிகையாகும். இது கிளைசிரைசின் என்ற ஒரு சேர்மத்தைக் கொண்டுள்ளது. இது வயிற்றில் சீரான அமிலத்தன்மையை பராமரிக்கவும், ஆரோக்கியமான அழற்சி எதிர்வினையை உருவாக்கவும் உதவுகிறது. மேலும் இது ஆறுதல் மற்றும் நிவாரணத்திற்காக உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Healthy Gut In Summer: கோடையில் செரிமான பிரச்னை வராமல் இருக்க.. இந்த உணவுகளை சாப்பிடவும்..
இஞ்சி
சமையலுக்குப் பயன்படுத்தக்கூடிய இஞ்சியானது பொதுவாக இருமல் மற்றும் காய்ச்சலுக்கு ஒரு சக்திவாய்ந்த மருந்தாக அமைகிறது. மேலும், இந்த ஆரோக்கியமான உணவுப் பொருள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும், வலுவாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும் இஞ்சியில் இஞ்சிரோல்கள் மற்றும் ஷோகோல்கள் போன்றவை உள்ளன. இவை வயிற்று சுருக்கங்களைத் தூண்டவும், காலியாக்கவும் உதவுவதாக நிபுணர் கூறியுள்ளார். மேலும் இந்த மசாலா வாயு, வீக்கம், குமட்டல், தசைப்பிடிப்பு, அஜீரணம் போன்றவற்றிற்கு உதவுகிறது.
திரிபலா
ஊட்டச்சத்து நிபுணரின் கூற்றுப்படி, திரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய் மற்றும் தான்றிக்காய் உள்ளிட்ட மூன்று மூலிகைகளின் கலவையைக் குறிக்கிறது. இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக, வெறும் வயிற்றில் திரிபலா சப்ளிமெண்ட்களைத் தேர்ந்தெடுப்பதை பலரும் பார்த்திருப்போம். இவை செரிமான செயல்முறைக்கும், மலச்சிக்கலை நீக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் திரிபலாவில் உள்ள கடுக்காய் ஆனது ஆரோக்கியமான குடல் இயக்கம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதாக நிபுணர் கூறியுள்ளார். இதில் உள்ள பிபிதகி என்பது நோயைப் பற்றிய பயமின்மை என்றழைக்கப்படுகிறது. இவை மென்மையான மலமிளக்கிய விளைவைக் கொண்டுள்ளது. மேலும் நெல்லிக்காய் ஆனது அமில அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் குடலை காரமாக்க ஏதுவாக அமைகிறது.
இந்த உணவுப்பொருள்கள் குடல் ஆரோக்கியம் மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனவே இதை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: அதிகபட்ச குடல் ஆரோக்கிய நன்மைகளைப் பெற புரோபயாடிக்குகளை எந்த நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்?
Image Source: Freepik