Fri Sep 11, 2026 | 10:46 PM IST

Beetroot for digestion: செரிமான ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் சாப்பிடுவது எந்த அளவுக்கு நல்லது தெரியுமா?

Is beet juice good for your digestive system: குடல் ஆரோக்கியம் நல்ல செரிமானத்திற்கு அவசியமாகும். உணவில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இதில் நல்ல செரிமானத்திற்கும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பீட்ரூட் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் செரிமான ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் தரும் நன்மைகளைக் காணலாம்.

Beetroot juice benefits for digestion: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை போன்றவற்றால் பல்வேறு உடல் உபாயங்களைச் சந்திக்க நேரிடலாம். குறிப்பாக செரிமான ஆரோக்கியம் நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இந்நிலையில் அன்றாட உணவில் ஆரோக்கியமான வேர் காய்கறிகளை உங்கள் உணவில் தவறாமல் சேர்த்துக்கொள்வது செரிமானத்தைக் கணிசமாக மேம்படுத்த உதவுகிறது. இது ஆற்றல் அளவை மேம்படுத்தவும் உதவுகிறது.

அவ்வாறு செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறிப்பாக குறிப்பிடத்தக்க வேர் காய்கறி ஆகும். செரிமான பிரச்சனைகளைக் கையாளும் நபர்கள், ஒரு கப் பீட்ரூட்டை உட்கொள்வது சிறந்த தேர்வாகும். நார்ச்சத்து நிரம்பிய இந்த வேர் காய்கறி வழக்கமான குடல் இயக்கத்தை ஊக்குவிக்கவும், மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவுகிறது. மேலும் இதன் அதிக நீர் உள்ளடக்கம் மலத்தை மென்மையாக்குகிறது. இதனால் அவை எளிதாக வெளியேறலாம். அன்றாட உணவில் பீட்ரூட் சேர்ப்பது செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானம் தொடர்பான பிரச்சனைகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Amla beetroot carrot juice benefits: இந்த 7 பிரச்சனைகளைத் தள்ளி வைக்க தினமும் காலையில் ஆம்லா, கேரட், பீட்ரூட் ஜூஸ் குடிங்க!

செரிமான ஆரோக்கியத்திற்கு பீட்ரூட் எவ்வாறு உதவுகிறது?

அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்த

பீட்ரூட்டின் மிகப்பெரிய நன்மைகளில் ஒன்றாக அதில் உள்ள அதிகளவிலான நார்ச்சத்துக்கள் ஆகும். இது பல்வேறு வழிகளில் செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. ஆய்வு ஒன்றில், பீட்ரூட் உணவு நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். மேலும் இது ஆரோக்கியமான செரிமானப் பாதைக்கு உதவுகிறது. இது செரிமானப் பாதையில் சீராகப் பாய்ந்து மலச்சிக்கலைத் தடுக்கிறது. இந்த அதிகரித்த நார்ச்சத்துக்கள் வழக்கமான குடல் இயக்கங்களை ஊக்குவிக்கிறது. இந்த ஒருங்கிணைந்த நன்மைகள் ஆரோக்கியமான மற்றும் அதிக செயல்திறன் கொண்ட செரிமான பாதைக்கு வழிவகுக்கலாம்.

செரிமான நொதிகளைத் தூண்டுவதற்கு

செரிமான ஆரோக்கியத்திற்கு பீட்ரூட்டின் மிக முக்கியமான நன்மைகளில் ஒன்றாக, அது ஆரோக்கியமான வயிற்று அமில உற்பத்தியை ஆதரிக்கும் திறனைக் குறிக்கிறது. இது வயிற்று அமில உற்பத்திக்கு உதவக் கூடிய ஒரு கலவையான பீடைனைக் கொண்டுள்ளது. இது உணவை மிகவும் திறமையாக உடைக்க உதவுகிறது. இதன் மூலம் புரதங்கள் மற்றும் கொழுப்புகளின் செரிமானத்தை மேம்படுத்துவதாகக் கூறப்படுகிறது. மேலும், வயிற்றில் போதுமான அமில உற்பத்தியை உறுதிசெய்வது, அஜீரணம் மற்றும் வயிற்று அமிலம் போதுமானதாக இல்லாததால் ஏற்படக்கூடிய வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.

ப்ரீபயாடிக் ஆக செயல்படுவது

பீட்ரூட்டின் நன்மைகளாக மலச்சிக்கல்லைத் தடுப்பது அமைகிறது. இது ஒரு ஃப்ரீபயாடிக்காக செயல்பட்டு ஊட்டமளிக்கும் முக்கியமான குடல் பாக்டீரியாவாக செயல்படுகிறது. ஆய்வில் இது ஆரோக்கியமான குடல் தாவரங்களை வளர்க்கிறது. இது சரியான ஊட்டச்சத்து உறிஞ்சுதல் மற்றும் செரிமானத்திற்கு அவசியமாகும். இது சீரான நுண்ணுயிர் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தவும் வயிற்றில் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இவை ஆரோக்கியமான நுண்ணுயிரிகளை வளர்ப்பதன் மூலம் ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Beetroot chia seeds water: பீட்ரூட் சியா விதை தண்ணீர் குடிப்பதால் உடலுக்கு என்னாகும் தெரியுமா?

செரிமான உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை மேம்படுத்த

பீட்ரூட்டை உட்கொள்வது செரிமான உறுப்புகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. பீட்ரூட்டின் மிகவும் பயனுள்ள நன்மைகளில் ஒன்றாக அதன் இயற்கை நைட்ரேட்டுகள் அமைகிறது. இது உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட இரத்த ஓட்டத்தின் மூலம் செரிமான உறுப்புகளுக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இருப்பதை உறுதி செய்கிறது. இது அவற்றின் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த சரியான செயல்திறனை மேம்படுத்துகிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த

பீட்ரூட்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. ஆய்வின் படி, பீட்ரூட்டில் அதிகளவு பீட்டாலைன்கள் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்ட சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகளாகும். பீட்டாலைன்கள் செரிமான மண்டலத்தில் ஏற்படும் வீக்கம் மற்றும் எரிச்சலைக் குறைக்க உதவுகிறது. எரிச்சல் கொண்ட குடல் நோய்க்குறி மற்றும் இரைப்பை அழற்சி போன்ற நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. ஏனெனில் இது செரிமான அமைப்பை ஆற்றவும், அசௌகரியத்தை நீக்கவும் உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: புளித்த உணவுகளை சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு ஏன் நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

நிற்காத வயிற்றுப்போக்கைக் குணப்படுத்த தேன் உதவுமா? அப்படினா எப்படி சாப்பிடலாம்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content