நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு நிபுணர் தரும் சிம்பிள் அலோவேரா ரெசிபி! இப்படி செஞ்சி பாருங்க

Aloe vera benefits for gut health: நல்ல ஆரோக்கியமான உணவுகளின் உதவியுடன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். நல்ல செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை ஆதரிப்பதில் கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் குடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதற்கு நிபுணர் பகிர்ந்துரைத்த எளிய கற்றாழை ரெசிபியைத் தயார் செய்யும் முறை குறித்து காணலாம்.
  • SHARE
  • FOLLOW
நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு நிபுணர் தரும் சிம்பிள் அலோவேரா ரெசிபி! இப்படி செஞ்சி பாருங்க

How to drink aloe vera juice for gut health: மெனோபாஸ் நிலையானது பெண்ணின் மாதவிடாய் சுழற்சி முடிவுக்கு வரும் நிலையாகும். ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்தால், அது மெனோபாஸ் என அழைக்கப்படுகிறது. இந்த நிலையானது இனப்பெருக்கம் இனி சாத்தியமில்லாத ஒரு கட்டமாகும். இந்த காலகட்டத்தில், பெண் கர்ப்பம் தரிக்கும் திறனை இழக்கின்றனர். பொதுவாக இந்த மெனோபாஸ் ஆனது 45 முதல் 50 வயது வரை ஏற்படக்கூடியதாகும். ஆனால், சில பெண்கள் சீக்கிரமாகவே அதாவது 40 முதல் 45 வயதிற்குள்ளேயே மெனோபாஸ் நிலையை அடைகின்றனர்.

இந்த ஆரம்ப கால மாதவிடாய் நிறுத்தத்திற்கு பல காரணங்கள் உள்ளன. மேலும், இந்த மெனோபாஸ் நிலையின் போது பல பெண்கள் வீக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை அனுபவிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இது போன்ற கவலைகளை எதிர்கொள்ள எளிய வீட்டு வைத்தியங்களை முயற்சிக்கலாம். அவ்வாறு இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வாக பாலக் நாக்பால் அவர்கள் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவும் ஒரு எளிய குடல்-குணப்படுத்தும் ரெசிபி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: நிறைய சாப்பிட்டு செரிமான பிரச்சனையா? டக்குனு சரியாக பெருங்காய தண்ணீரில் இந்த இரண்டு பொருள்களைச் சேர்த்து குடிங்க

குடல் ஆரோக்கியத்திற்கு கற்றாழை ஜூஸ்

ஊட்டச்சத்து நிபுணர் பாலக் நாக்பால் அவர்கள் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “மெனோபாஸ் நிலையானது குடலை சமநிலையிலிருந்து நீக்கிவிடும். இதனால் வீக்கம், மலச்சிக்கல் மற்றும் பசி தினசரி போராட்டங்களாக மாறும். ஆனால், இந்த எளிய ஐஸ் கட்டி உங்கள் குடலை இயற்கையாகவே மீட்டெடுக்க உதவும்” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் அவர் பகிர்ந்த ஐஸ்கட்டி ரெசிபி குறித்து காணலாம்.

தேவையான பொருள்கள்

  • கற்றாழை சாறு - 1 கப்
  • பச்சை மஞ்சள் - 1 சிறிய துண்டு (தண்ணீரில் கலந்து 1/4 கப் அளவில் சாறு)
  • இலவங்கப்பட்டை பவுடர் - 1/2 தேக்கரண்டி
  • அஸ்வகந்தா பொடி - 1 தேக்கரண்டி
  • எலுமிச்சை - 1 (எலுமிச்சைச் சாறு)

கற்றாழை ஐஸ்கட்டி ரெசிபி செய்முறை

முதலில் பச்சை மஞ்சளை 1 சிறிய துண்டு எடுத்து, அதை தண்ணீரில் கலந்து 1/4 கப் அளவிலான சாறாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கொள்கலன் ஒன்றில் கற்றாழை சாறு மற்றும் தயார் செய்த மஞ்சள் சாறு போன்றவற்றைச் சேர்க்க வேண்டும்.

இதனைத் தொடர்ந்து ஒரு எலுமிச்சையைப் பிழிந்து வைத்துக் கொள்ளலாம். பின், அஸ்வகந்தா பொடி மற்றும் இலவங்கப்பட்டை பவுடரைச் சேர்க்க வேண்டும்.

இவை அனைத்தையும் நன்கு கலந்து ஐஸ் கியூப் தட்டில் ஊற்றி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உறைய வைத்துக் கொள்ளலாம்.

தினமும் காலையில் இதில் ஒரு கியூப் எடுத்து, அதை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து நன்கு கறைந்த பிறகு அதைக் குடிக்கலாம்.

குடல் ஆரோக்கியத்திற்கு கற்றாழை கியூப் நன்மைகள்

இந்த ரெசிபி தயார் செய்ய உதவும் பொருள்கள் அனைத்தும் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதவை.

கற்றாழை

கற்றாழை குறிப்பாக அதன் ஜெல்லானது மெனோபாஸ் நிலையில் குடல் ஆரோக்கியத்திற்கு சில நன்மைகளை வழங்குகிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. இது குடல் ஒழுங்கை ஊக்குவிக்கிறது. எனினும், இதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Gut health foods: குடல் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த உணவு சேர்க்கைகள் நல்லது தெரியுமா?

பச்சை மஞ்சள்

பச்சை மஞ்சள் குர்குமின் நிறைந்ததாகும். இது குடல் நுண்ணுயிரியலைப் பன்முகப்படுத்துவதன் மூலமும், செரிமானத்தை மேம்படுத்துவதன் மூலமும், வீக்கத்தைக் குறைப்பதன் மூலமும் மெனோபாஸ் அறிகுறிகளைக் கட்டுப்படுத்துகிறது. இது மெனோபாஸ் நிலையில் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்க உதவுகிறது.

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டையின் ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது மெனோபாஸ் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இது குடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், இதற்கு கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.

அஸ்வகந்தா

பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் அஸ்வகந்தா மூலிகையானது மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை மேம்படுத்துவதன் மூலம் மாதவிடாய் நிறுத்தம் தொடர்பான குடல் ஆரோக்கியத்திற்கு நன்மைகளை வழங்குகிறது. இது மறைமுகமாக ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரியை வழங்குவதுடன், ஒட்டுமொத்த நல்வாழ்வையும் ஆதரிக்கிறது.

எலுமிச்சை

எலுமிச்சை நீர் செரிமானத்தை அதிகரிப்பதன் மூலமும், நீரேற்றத்தை தருவதன் மூலமும், நோயெதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துவதன் மூலமும் மெனோபாஸ் நிலையில் குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கவும், ஒட்டுமொத்த நல்வாழ்வை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: ஸ்ட்ராங்கான குடல் ஆரோக்கியத்திற்கு மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் தினசரி பழக்க வழக்கங்கள்

Image Source: Freepik

Read Next

Carrot Milkshake: அடிக்குற வெயிலுக்கு ஜில்லுன்னு கேரட் மில்க் ஷேக் குடிக்கலாமா!

Disclaimer