ஸ்ட்ராங்கான குடல் ஆரோக்கியத்திற்கு மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் தினசரி பழக்க வழக்கங்கள்

How to improve your gut health and metabolism: ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்ற உதவியுடன் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இவை இரண்டுமே நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமாகும். இதில் குடல் ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவும் தினசரி பழக்கங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
ஸ்ட்ராங்கான குடல் ஆரோக்கியத்திற்கு மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும் தினசரி பழக்க வழக்கங்கள்

How to increase metabolism and improve gut health: உடலில் உள்ள பல்வேறு முக்கிய உறுப்புகளில் குடலுறுப்பும் அடங்கும். இது உணவை எளிதாக செரிமானம் அடையச் செய்யவும், உணவிலிருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது. மேலும், இது வளர்ச்சிதை மாற்றத்தை சீராக அதிகரிக்கவும் உதவுகிறது. ஆனால், இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, ஒழுங்கற்ற உணவுமுறை காரணமாக வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்படுவதுடன், குடல் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. இது செரிமான ஆரோக்கியத்தைப் பாதிக்கிறது.

உண்மையில், நல்ல குடல் ஆரோக்கியம் மற்றும் செரிமானத்தின் உதவியுடன் பலதரப்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கலாம். எனவே செரிமான ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், அதை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஈடுபடுவதும் அவசியமாகும். அவ்வாறு நாம் தினந்தோறும் செய்யும் சில அன்றாட பழக்க வழக்கங்களின் உதவியுடன் வளர்ச்சிதை மாற்ற ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், குடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். இதில் குடலை மகிழ்ச்சியாக வைத்திருக்கக் கூடிய மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவக்கூடிய சில பழக்க வழக்கங்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Gut Health: குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் காலை பழக்கங்கள்..

குடல் ஆரோக்கியத்திற்கு வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் பழக்கங்கள்

நடைபயிற்சி மேற்கொள்வது

உடல் ஆரோக்கியத்திற்கு மணிக்கணக்கில் ஜிம்மிற்குச் செல்ல வேண்டியதில்லை. நம் அன்றாட செயல்களில் நாம் செய்யும் சில வேலைகளும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அதன் படி, படிக்கட்டுகளில் ஏறுவது, வேலை நேரங்களுக்கு இடையில் நீட்டுவது அல்லது சமைக்கும் போது நடனமாடுவது உள்ளிட்ட பல்வேறு எளிய செயல்பாடுகள் உடலை சுறுசுறுப்பாக வைக்கவும், குடலியக்கத்தை மேம்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே ஒருவரின் ஒவ்வொரு சிறிய அசைவும் முக்கியமாகும்.

எலுமிச்சை நீர் அருந்துதல்

காலை எழுந்ததும் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான எலுமிச்சை தண்ணீருடன் நாளைத் தொடங்குவது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் ஒரு எளிய மற்றும் பயனுள்ள வழியாகும். இந்த எலுமிச்சை நீர் உடலிலிருந்து நச்சுகளை வெளியேற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும், உடல் எளிதில் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சவும் உதவுகிறது. கூடுதலாக, நீண்ட நேர இரவு உணவிற்குப் பிறகு, இது உடலை நீரேற்றமாக வைத்திருக்க வழிவகுக்கிறது.

மூலிகை தேநீர் அருந்துவது

சில ஆரோக்கியமான பானங்களை அருந்துவது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுவதுடன், குடல் ஆரோக்கியத்தையும் ஆதரிக்கிறது. அதன் படி, கிரீன் டீ, இஞ்சி டீ, அல்லது ஒரு கப் சூடான மஞ்சள் பால் போன்றவற்றை அருந்துவது வளர்சிதை மாற்றம் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இந்த பானங்களில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் உள்ளது. இது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், கொழுப்பு எரிப்பை ஊக்குவிக்கிறது.

உணவை மெதுவாக உண்பது

உணவை வேகவேகமாக உட்கொள்வது செரிமான ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கும். மிக வேகமாக சாப்பிடுவது வீக்கம் மற்றும் அஜீரணத்தை ஏற்படுத்தலாம். எனவே உணவை சரியாக மென்று சாப்பிடுவதன் மூலம் அதை எளிதில் சமாளிக்கலாம். இவ்வாறு உணவை முழுமையாக மென்று சாப்பிடுவது குடல் செரிமான நொதிகளை வெளியிட சமிக்ஞை செய்கிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரித்து, உணவை மிகவும் திறமையாக செயலாக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: புளித்த உணவுகளை சாப்பிடுவது குடல் ஆரோக்கியத்திற்கு ஏன் நல்லது தெரியுமா?

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

குடல் நட்பு உணவுகளில் நார்ச்சத்து நிறைந்த உணவுகள் முக்கிய பங்களிக்கிறது. இது செரிமானத்தை சீராக வைக்க உதவுவதுடன், வீக்கத்தைக் குறைக்கவும், இரத்த சர்க்கரையை சீராக்கவும் உதவுகிறது. அதன் படி, நார்ச்சத்துக்கள் நிறைந்த பீன்ஸ், பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை தினந்தோறும் குறிப்பிடத்தக்க அளவில் எடுத்துக் கொள்வது நன்மை பயக்கும்.

புரோபயாடிக் மற்றும் ப்ரீபயாடிக் உணவுகள்

குடல் நட்பு பாக்டீரியாக்களை உருவாக்குவதில் புரோபயாடிக்குகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே தயிர், ஊறுகாய் போன்ற புரோபயாடிக்குகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம், வாழைப்பழங்கள், பூண்டு மற்றும் ஓட்ஸ் போன்ற ப்ரீபயாடிக்குகள் உள்ள குடலை செழிப்பாக வைத்திருக்கக் கூடிய உணவுகளாகும். ஒரு சீரான குடல் நுண்ணுயிரி சிறந்த செரிமானத்திற்கும், தூக்கத்தை ஏற்படுத்தாத வளர்சிதை மாற்றத்திற்கும் வழிவகுக்கிறது.

நல்ல தூக்கம்

நல்ல மற்றும் போதுமான இரவு தூக்கம் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. ஏனெனில், மோசமான தூக்கம் பசி ஹார்மோன்களை குழப்புவதுடன், ஆரோக்கியமற்ற உணவு ஏக்கத்திற்கு வழிவகுக்கிறது. எனவே குடல் மற்றும் வளர்சிதை மாற்றம் சிறப்பாக செயல்பட 7–9 மணிநேர தரமான தூக்கத்தை இலக்காகக் கொள்ள வேண்டும். நல்ல தூக்க சுழற்சியைக் கையாள்வதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதுடன், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Gut health foods: குடல் ஆரோக்கியத்துக்கு எந்தெந்த உணவு சேர்க்கைகள் நல்லது தெரியுமா?

Image Source: Freepik

Read Next

சாப்பிட்ட பிறகு வயிறு உப்புசமா இருக்கா? இதைத் தவிர்க்க நீங்க என்ன செய்யணும் தெரியுமா?

Disclaimer