மெட்டபாலிசத்தை இயற்கையாகவே அதிகரிக்க உதவும் டாப் வழிகள் இதோ

How to increase metabolism so fast: உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது மிகவும் அவசியமாகும். இவை கலோரிகளை எரிக்கும் விகிதத்தை விரைவுபடுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது. இதில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கான சில குறிப்புகளைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மெட்டபாலிசத்தை இயற்கையாகவே அதிகரிக்க உதவும் டாப் வழிகள் இதோ


How do I boost my metabolism level: உடல் எடையைக் கண்காணிப்பவர்களின் முக்கிய குறிக்கோள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதே ஆகும். அதே சமயம், உடல் எவ்வளவு விரைவாக கலோரிகளை எரிக்கிறது என்பதைப் பொறுத்தும் அமைகிறது. சிலர் விரைவான வளர்சிதை மாற்றத்தைப் பெறுகின்றனர். Webmd-ல் குறிப்பிட்ட படி, ஆண்கள் ஓய்வெடுக்கும்போது கூட பெண்களை விட அதிக கலோரிகளை எரிக்க முனைகின்றனர். மேலும், பெரும்பாலானவர்களுக்கு, 40 வயதிற்குப் பிறகு வளர்சிதை மாற்றம் படிப்படியாகக் குறையத் தொடங்குகிறது. வயது, மரபியல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த வேறு சில வழிகள் உள்ளது. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவும் வழிகள்

அதிக உடற்பயிற்சி செய்வது

ஏரோபிக் உடற்பயிற்சி பெரிய தசைகளை உருவாக்காது. ஆனால், இந்த பயிற்சி செய்த பிறகு சில மணிநேரங்களில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கக்கூடும். குறைந்த அல்லது மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை விட அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சி செய்யலாம். இவை ஓய்வெடுக்கும் வளர்சிதை மாற்ற விகிதத்தில் பெரிய, நீண்ட அதிகரிப்பைத் தருகிறது. இதன் நன்மைகளைப் பெற ஜிம்மில் மிகவும் தீவிரமான வகுப்பை முயற்சிக்கலாம் அல்லது வழக்கமான நடைப்பயணத்தின் போது குறுகிய இடைவெளிகளில் ஜாகிங் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வெயிட் லாஸ் மட்டுமல்ல! சருமத்தைப்  பளபளப்பாக வைக்க இந்த டிடாக்ஸ் ட்ரிங்ஸ் குடிங்க

தசையை உருவாக்குவது

நாம் எதுவும் செய்யாவிட்டாலும் கூட, உடல் தானாகவே தொடர்ந்து கலோரிகளை எரிக்கிறது. பொதுவாக அதிக தசை உள்ளவர்களுக்கு இந்த ஓய்வு வளர்சிதை மாற்ற விகிதம் அதிகமாக இருக்கும். தசை தன்னைத்தானே பராமரிக்க ஒரு குறிப்பிட்ட அளவு கலோரிகளைப் பயன்படுத்துகிறது. அதே சமயத்தில், உடலில் உள்ள கொழுப்பும் சில குறிப்பிட்ட அளவு கலோரிகளை எரிக்கிறது. இவை காலப்போக்கில் வித்தியாசத்தை அதிகரிக்கும். வலிமை பயிற்சிகள் செய்த பின், உடல் முழுவதும் தசைகள் செயல்படுத்தப்பட்டு, தினசரி வளர்சிதை மாற்ற விகிதத்தை உயர்த்துகிறது.

எனர்ஜி பானங்கள் குடிக்க வேண்டுமா?

ஆற்றல் பானங்களில் உள்ள சில பொருட்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதாகக் கூறப்படுகிறது. இந்த பானங்களில் காஃபினும் ஒன்றாகும். இவை உடல் பயன்படுத்தும் ஆற்றலின் அளவை அதிகரிக்கிறது. இதில் சில நேரங்களில் டாரைன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இந்த அமினோ அமிலம் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்துகிறது மற்றும் கொழுப்பை எரிக்க உதவுகிறது. ஆனால், இந்த பானங்களைப் பயன்படுத்துவது சிலருக்கு பதட்டம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் தூக்கப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் படி, இது குழந்தைகள் மற்றும் டீனேஜர்களுக்கு பரிந்துரைக்கப்படுவதில்லை.

கலோரிகளை எரிக்க நீரேற்றமாக இருப்பது

உடலுக்கு கலோரிகளைச் செயலாக்க தண்ணீர் தேவைப்படுகிறது. சற்று நீரிழப்புடன் காணப்பட்டாலும் மெதுவான வளர்சிதை மாற்றத்தையே சந்திப்பர். ஆய்வு ஒன்றில், ஒரு நாளைக்கு எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிளாஸ் தண்ணீர் குடித்த பெரியவர்கள், நான்கு கிளாஸ் தண்ணீர் குடித்தவர்களை விட அதிக கலோரிகளை எரித்ததாகக் கூறப்படுகிறது. நீரேற்றமாக இருக்க, ஒவ்வொரு உணவு அல்லது சிற்றுண்டிக்கு முன்பாக ஒரு கிளாஸ் தண்ணீர் அல்லது பிற இனிப்பு சேர்க்காத பானங்களைக் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Metabolism Increasing Tips: மெட்டபாலிசத்தை இப்படி அதிகரிச்சா, எடையை ஈஸியா குறைக்கலாம்

புரத உணவுகளைச் சேர்ப்பது

உடல் கொழுப்பு அல்லது கார்போஹைட்ரேட்டுகளை விட, புரதத்தை ஜீரணிக்க அதிக கலோரிகளை எரிக்கிறது. ஒரு சீரான உணவின் ஒரு பகுதியாக, சில கார்போஹைட்ரேட்டுகளை மெலிந்த, புரதம் நிறைந்த உணவுகளுடன் மாற்றுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. மெலிந்த மாட்டிறைச்சி, டோஃபு, நட்ஸ், பீன்ஸ், முட்டை மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் போன்றவை புரதத்தின் நல்ல ஆதாரங்களாகும்.

கிரீன் டீ குடிப்பது

கிரீன் டீயில் உள்ள காஃபின் மற்றும் கேட்டசின்கள் போன்ற பொருள்கள் வளர்சிதை மாற்றத்தை சில மணி நேரம் அதிகரிக்க உதவுகின்றன. 2 முதல் 4 கப் தேநீர் குடிப்பதால், சிறிது நேரம் மிதமான தீவிர உடற்பயிற்சியின் போது உடல் 17% அதிக கலோரிகளை எரிக்கத் தூண்டுவதாக ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இத சாப்பிடுங்க… மெட்டபாலிசம் அதிகமாகும்.! வெயிட் குறையும்.!

Image Source: Freepik

Read Next

தினசரி 15 நிமிடம் ஒதுக்கினால் தொங்கும் தொப்பை, பெருத்த தொடை அளவை வேகமாக குறைக்கலாம்!

Disclaimer

குறிச்சொற்கள்