Metabolism Increasing Tips: மெட்டபாலிசத்தை இப்படி அதிகரிச்சா, எடையை ஈஸியா குறைக்கலாம்

  • SHARE
  • FOLLOW
Metabolism Increasing Tips: மெட்டபாலிசத்தை இப்படி அதிகரிச்சா, எடையை ஈஸியா குறைக்கலாம்

வளர்சிதை மாற்றம் என்றால் என்ன?

வளர்சிதை மாற்றம் என்பது உணவை செரிமானம் அடையச் செய்வது, செயல்பட, வளர மற்றும் பல்வேறு சூழ்நிலைகளை உள்ளடக்கியதாகும். இந்நிலையில் உடலின் திறனில் உள்ள நொதிகளின் செயல்பாட்டைக் குறிக்கிறது. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு நம் உடலுக்குப் பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றப்படுகிறது. எனவே, வளர்சிதை மாற்றம் மெதுவாக இருப்பின், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எடை குறைப்புத் திறன் பாதிக்கப்படலாம். இந்த மெட்டபாலிசத்தை விரைவுபடுத்துவதற்கு சில வழிகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Summer Weight Loss Drinks: வெயில் காலத்தில் உடல் எடையை சட்டுனு குறைக்க நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

மெட்டபாலிசத்தை எப்படி அதிகரிக்கலாம்?

உடல் அதன் அனைத்து செயல்பாடுகளையும் எவ்வாறு திறம்பட செய்கிறது என்பதே வளர்ச்சிதை மாற்றத்தைக் குறிக்கிறது. இதற்கு செரிமானம் விரைவில் அடைய உணவுகளை உட்கொள்வதன் மூலம் விரைவாக வளர்ச்சிதை மாற்றம் மேம்படாது. இதற்கு நிலையான மற்றும் முழுமையான அணுகுமுறை தேவைப்படுகிறது.

உணவைத் தவிர்க்கக் கூடாது

உணவைத் தவிர்ப்பது அல்லது மிகக் குறைவாக சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க சரியான வழி கிடையாது. எனவே, சரியான இடைவெளியில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். முக்கிய உணவுகளுக்கு இடையில் 1 முதல் 2 முறை சிறிய உணவு அல்லது சிற்றுண்டியை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு சிற்றுண்டி எடுத்துக் கொள்வது உணவின் போது குறைவாக சாப்பிட வழிவகுக்கும். மேலும் கொழுப்பைச் சேமிக்கும் உடலின் திறனை அதிகரிக்கும்.

புரதம் நிறைந்த உணவுகள்

கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புகளுடன் ஒப்பிடுகையில், புரதங்களை உடைக்க அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இது வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இது உணவின் வெப்ப விளைவு என்றும் கூறப்படுகிறது. இவ்வாறு அதிகளவு புரத உட்கொள்ளல் வளர்ச்சிதை மாற்றத்தை கணிசமாக அதிகரிக்கிறது. இதன் மூலம் பசியின்மை மற்றும் அடுத்தடுத்த உணவுகளில் அதிகம் சாப்பிடுவதைத் தடுக்க முடியும்.

ஊட்டச்சத்து உட்கொள்ளல்

வழக்கமாக எடுத்துக் கொள்ளும் உணவு, உடல் கொழுப்பை எரியும் உணவாக இருப்பது அவசியமாகும். இது வளர்சிதை மாற்ற விகிதத்தை விரைவுபடுத்துகிறது. அதன் படி மீன், முட்டை, பருப்பு, எலுமிச்சை, இஞ்சி, பால் பொருள்கள், திராட்சைப்பழம் போன்றவற்றுடன் ஆரோக்கியமான உடற்பயிற்சி மேற்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Cloves For Weight Loss: எடையை வேகமாகக் குறைக்கும் கிராம்புவை இப்படி எடுத்துக்கோங்க

போதுமான தண்ணீர் குடிப்பது

உடல் எடை குறைய போதுமான தண்ணீர் குடிப்பது அவசியமாகும். இது உடலில் உள்ள கழிவுகளை நீக்கவும், பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நீர் உட்கொள்ளலை அதிகரிப்பது, எடை இழப்பை ஊக்குவிக்கிறது. எனினும், நீரிழப்புடன் இருந்தால் வளர்ச்சிதை மாற்றம் குறையும். எனவே போதுமான அளவு தண்ணீர் குடிப்பது நல்லது.

நன்றாக தூங்குவது

தூக்கம் குறைவாக இருப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்காது. இது பசி, தூக்கமின்மை தொடர்புடைய ஹார்மோன் சமநிலையின்மையை உண்டாக்கலாம். போதிய தூக்கமின்மை பசியை உண்டாக்கலாம். இதனால், கலோரி உட்கொள்ளலை அதிகமாக்கலாம். இந்த ஆற்றல் மிகுதியானது வளர்ச்சிதை மாற்றத்தை பாதித்து எடை அதிகரிப்பை ஏற்படுத்தலாம்.

கிரீன் டீ அருந்துதல்

கிரீன் டீ அருந்துவது உடலில் ஆற்றல் செலவை அதிகரிக்கிறது அல்லது ஒவ்வொரு நாளும் எரிக்கும் கொழுப்பு மற்றும் கலோரி எண்ணிக்கையை அதிகரிக்கிறது. நாள்தோறும் 2-3 கப் அளவு கிரீன் டீயை உட்கொள்வது உடல் விரைவாக கலோரியை எரிப்பதை ஊக்குவிக்கிறது.

உடற்பயிற்சி செய்வது

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், கொழுப்பை வேகமாக எரிக்கவும் அதிக தீவிரம் கொண்ட உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். நீச்சல், ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் ஆகியவை உடற்பயிற்சிகளாகும். இவை வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பை எரிக்க உதவுகிறது.

இந்த வழிகளில் உடலில் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்தி உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Protein Powder: உடல் எடை அதிகரிக்க புரோட்டீன் பவுடரை வீட்டிலேயே இப்படி செய்யுங்க

Image Source: Freepik

Read Next

Post Workout Food: வொர்க்அவுட்டிற்குப் பிறகு மறந்தும் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க!!

Disclaimer