Cloves For Weight Loss: எடையை வேகமாகக் குறைக்கும் கிராம்புவை இப்படி எடுத்துக்கோங்க

  • SHARE
  • FOLLOW
Cloves For Weight Loss: எடையை வேகமாகக் குறைக்கும் கிராம்புவை இப்படி எடுத்துக்கோங்க

ஏன் கிராம்பு?

கிராம்புவில் நார்ச்சத்து, வைட்டமின் கே மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது செரிமான பிரச்சனைகளைக் குறைத்தல், வீக்கத்தைக் குறைத்தல், வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மற்றும் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுதல் உள்ளிட்ட பல்வேறு பண்புகளைக் கொண்டுள்ளது. இது வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது. யூஜெனால் போன்ற சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.

இவை வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் கிராம்பு உதவுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தி கொழுப்பு எரிவதை ஊக்குவிக்கிறது. உணவில் கிராம்புகளை பல்வேறு வழிகளில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: சட்டுனு உடல் எடையை குறைக்க பசு நெய்யை இப்படி சாப்பிடுங்க!!

எடை குறைய கிராம்புவை எடுத்துக் கொள்ளும் வழிமுறைகள்

கிராம்பு நீர்

தண்ணீரில் சில முழு கிராம்புகளைச் சேர்த்து உட்கொள்ள வேண்டும். இது உடலில் நீரேற்றத்தை ஊக்குவிக்கவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. எனவே எடையிழப்புக்கு உதவக்கூடிய கிராம்பு கலந்த நீரை நாள் முழுவதும் குடிக்கலாம்.

மசாலா கலவைகள்

வீட்டில் தயாரிக்கப்பட்ட மசாலாக் கலவைகளில் கிராம்புகள் இருக்கும். இதை உணவு தயாரிப்பதில் பயன்படுத்துவதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம். அதன் படி, கிராம்பு சூப்கள் போன்ற உணவுகளுக்கு சூடான மற்றும் காரமான சுவையைச் சேர்க்கிறது. மேலும், இது கூடுதல் கலோரிகளைச் சேர்க்காமல் உடலை திருப்திகரமாக வைக்க உதவுகிறது.

வேகவைத்த பொருள்கள்

குக்கீகள், மஃபின்கள், மற்றும் கேக்குகள் போன்ற வேக வைத்த பொருள்களில் அரைத்த கிராம்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இனிப்பு விருந்தில் சூடு மற்றும் மசாலா பொருளாக கிராம்பு சேர்ப்பது நல்லது. அதே நேரத்தில் இதன் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் விளைவுகளால், இது எடை இழப்புக்கான சாத்தியமான நன்மைகளை வழங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Coconut Water Benefits: வெயிட் லாஸ்க்கு உதவும் தேங்காய் தண்ணீர். இப்படி குடிச்சி பாருங்க

கிராம்பு டீ

சில கிராம்புகளை வெந்நீரில் 5 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து தயாரிக்கப்படுவது கிராம்பு தேநீர் ஆகும். இது செரிமானத்தை மேம்படுத்தவும், பசியைக் கட்டுப்படுத்தவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த தேநீரை வடிகட்டி அருந்துவது உடல் எடை இழப்பு பயணத்தில் உதவுகிறது.

ஸ்மூத்திகள்

ஸ்மூத்தி ரெசிபிகளில் ஒரு சிட்டிகை அளவு கிராம்புகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இது சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. மேலும் இது செரிமானத்திற்கும் உதவுகிறது. இது அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க உதவுகிறது.

கிராம்பு எண்ணெய்

முழு கிராம்புகளை தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன், குறைந்தளவு வெப்பத்தில் ஊறவைத்து எண்ணெயைத் தயார் செய்ய வேண்டும். இந்த எண்ணெயை சமைப்பதற்கு, சாலட்கள் மற்றும் காய்கறிகளுடன் சேர்த்து எடுத்துக் கொள்வது எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

இவ்வாறு பல்வேறு வழிகளில் கிராம்புவை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Summer Weight Loss Drinks: வெயில் காலத்தில் உடல் எடையை சட்டுனு குறைக்க நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

Image Source: Freepik

Read Next

Weight Loss Mistakes: இரவு உணவுக்குப் பிறகு மறந்தும் இந்த தவறை செய்யாதீர்கள் எடை இன்ச் கூட குறையாது!

Disclaimer

குறிச்சொற்கள்