Thu Oct 29, 2026 | 12:52 PM IST

Expert

Weight Loss Tips: சட்டுனு உடல் எடையை குறைக்க பசு நெய்யை இப்படி சாப்பிடுங்க!!

Weight Loss Tips: சட்டுனு உடல் எடையை குறைக்க பசு நெய்யை இப்படி சாப்பிடுங்க!!Weight Loss Tips: சட்டுனு உடல் எடையை குறைக்க பசு நெய்யை இப்படி சாப்பிடுங்க!!

How To Consume Ghee For Weight Loss: பசும் நெய் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்று சிறுவயதில் இருந்தே கேள்விப்பட்டு வருகிறோம். ஆனால், இது ஒரு வகையான கட்டுக்கதை தான். நிபுணர்களின் கூற்றுப்படி, பசு நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் காணப்படுகின்றன, இது உடலில் ஆற்றலைப் பராமரிக்க உதவுகிறது. ஆனால், எல்லாவற்றையும் போலவே, அதை அதிகமாக உட்கொண்டால், ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

நெய் சாப்பிட்டால் உடல் எடையும் குறையும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், உணவில் நெய்யை சரியான அளவில் சேர்த்துக்கொண்டால், அதுவும் எடையைக் குறைக்க உதவும் என்கின்றனர் நிபுணர்கள். எனவே உடல் எடையை குறைக்க தேசி நெய்யை எவ்வாறு உட்கொள்வது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். இது குறித்து பூனம் டயட் மற்றும் வெல்னஸ் கிளினிக் மற்றும் அகாடமியின் நியூட்ரிஃபை இயக்குனர் பூனம் துனேஜாவிடம் பேசினோம். அவர் கூறியதாவது-

இந்த பதிவும் உதவலாம் : முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

எடை குறைப்பதில் நெய் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும்?

ஆரோக்கியமான கொழுப்புகள் நெய்யில் காணப்படுகின்றன. இது செரிமானத்தை துரிதப்படுத்த உதவுகிறது. அத்துடன், வைட்டமின் டி இதில் உள்ளது, இதன் நுகர்வு எடை குறைக்க உதவுகிறது. நெய்யில் அமினோ அமிலங்கள் உள்ளன, இது உறைந்த கொழுப்பைக் கரைத்து கேட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க நெய்யை எப்படி சாப்பிடுவது?

நெய் மற்றும் பால்

செரிமான பிரச்சனைகளால் உடல் எடை அதிகரிக்கலாம். இந்நிலையில், பாலில் நெய் சேர்த்து அதை உட்கொள்வது உங்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இது மலச்சிக்கல் மற்றும் அமிலத்தன்மையில் இருந்து விரைவான நிவாரணம் அளிக்கிறது. இதனுடன், உடலில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பைக் குறைக்கவும் இது உதவும்.

இந்த பதிவும் உதவலாம் : ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்

உணவு செய்ய

உணவைத் தயாரிக்க நீங்கள் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைப் பயன்படுத்துவதற்கு பத்தி, பசு நெய்யை தேர்வு செய்யலாம். நெய்யில் அதிக ஸ்மோக்கிங் பாயிண்ட் உள்ளது. அதில் உணவை சமைப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

எனர்ஜி பானமாக செயல்படும்

நீங்கள் காலையில் எழுந்தவுடன் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்ந்தால், இதற்குக் காரணம் உங்கள் கூடுதல் கலோரிகளாகவும் இருக்கலாம். இந்நிலையில், ஒரு ஸ்பூன் தேசி நெய்யை வெந்நீரில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், கொழுப்பைக் குறைக்கலாம். இதை உட்கொள்வதால் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும், பலவீனம் மற்றும் சோர்வு பிரச்சனை இருக்காது.

இந்த பதிவும் உதவலாம் : க்ரீன் டீயில் என்ன கலந்து குடிக்கலாம்? ஆரோக்கியமான க்ரீன் டீயை இனி சுவையாக மாற்றலாம்.

தேநீர் அல்லது காபியுடன்

இது தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தேநீர் மற்றும் காபியுடன் பசு நெய்யை உட்கொள்வதும் நன்மை பயக்கும். காஃபினுடன் நெய்யை உட்கொள்வது நீண்ட காலத்திற்கு பசியை அடக்குகிறது, இதனால் உங்கள் அடுத்த உணவில் குறைவான கலோரிகளை உட்கொள்ளலாம். இது தவிர ரொட்டி, கிச்சடி, பருப்பு, சாதம் போன்றவற்றிலும் நெய் சேர்த்துக்கொள்ளலாம். இது எடையை பராமரிக்க உதவும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Weight Loss Drinks: இந்த கோடையில் ஈஸியா வெயிட்ட குறைக்க இதை குடிக்கவும்…

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.