Weight Loss Drinks: இந்த கோடையில் ஈஸியா வெயிட்ட குறைக்க இதை குடிக்கவும்…

  • SHARE
  • FOLLOW
Weight Loss Drinks: இந்த கோடையில் ஈஸியா வெயிட்ட குறைக்க இதை குடிக்கவும்…


Best Drinks For Weight Loss In Summer: உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் குறைந்த கலோரி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக சில பானங்களை முயற்சிப்பது, உங்களின் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும், உங்களை நீரேற்றமாக வைத்திருக்கவும் உதவும். இந்த கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய பானங்கள் இங்கே.

லெமன் ஜூஸ்

கோடை காலத்தில் லெமன் ஜூஸ் குடிப்பதால் செரிமானம் சரியாக நடக்கும். இதில் உள்ள பெக்டின் என்ற நார்ச்சத்து கொழுப்பைக் கரைக்கிறது. மேலும் இது பசியையும் கட்டுப்படுத்தும். லெமன் ஜூஸில் உள்ள எலக்ட்ரோலைட்டுகள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் காக்கும்.

மோர்

கோடையில் முடிந்தவரை மோர் எடுத்துக்கொள்வது நல்லது. இதில் கலோரிகள் குறைவு. மேலும், அதிக புரதச் சத்து இருப்பதால், நீண்ட நேரம் பசியை உணராமல் தடுக்கிறது. மேலும், மோரில் பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இவை வியர்வை மூலம் இழக்கப்படும் தாதுக்களை உடலுக்கு வழங்குகிறது.

இதையும் படிங்க: Weight Loss Drink: எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

சீரகத் தண்ணீர்

உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், இரவில் ஒரு கிளாஸில் ஒரு டேபிள் ஸ்பூன் சீரகத்தைப் போட்டு, அந்த நீரை அதிகாலையில் குடிக்கவும். சீரகத்தில் உள்ள கீட்டோன்கள் எனப்படும் சேர்மங்கள் கொழுப்பை எரிக்கும். இந்த பானத்தால் உணவும் எளிதில் ஜீரணமாகும். சீரக நீர் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.

வெள்ளரி தண்ணீர்

வெள்ளரியில் கலோரிகள் குறைவு. உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல உணவு. கோடை காலத்தில் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெள்ளரி தண்ணீரை குடித்து வந்தால் பலன் கிடைக்கும்.

தேங்காய் தண்ணீர்

கோடையில் பலர் வெப்பத்தில் இருந்து விடுபட தேங்காய் தண்ணீரை குடிப்பார்கள். இருப்பினும் இவற்றை தினமும் குடிப்பதன் மூலம் உடல் எடை குறைந்து ஆரோக்கியமாக இருக்க முடியும். தேங்காய் தண்ணீர் கொழுப்பை கரைக்கும் என்று சொல்கிறார்கள்.

பார்லி வாட்டர்

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு பார்லி வாட்டர் நல்ல பானம். இந்த பார்லி நீரை தினமும் குடித்து வந்தால் பசி குறையும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தும். முதலில் ஒரு கப் பார்லி விதையுடன் நான்கு கப் தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் கொதிக்க வைக்கவும். எலுமிச்சம் பழச்சாறுடன் பார்லி நீரை ஆறிய பிறகு குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. இந்த தண்ணீரை தினமும் குடிப்பதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

Image Source: Freepik

Read Next

Fruits for Weight Loss: பழம் உண்மையில் உடல் எடையை குறைக்க உதவுமா? எடையை குறைக்க சிறந்த பழம் எது?

Disclaimer

குறிச்சொற்கள்