Doctor Verified

Weight Loss Drink: எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

  • SHARE
  • FOLLOW
Weight Loss Drink: எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் நீங்க குடிக்க வேண்டிய பானங்கள்

எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய பானங்கள்

மருத்துவர் அஞ்சலியின் கூற்றுப்படி, வெறும் வயிற்றில் அருந்த வேண்டிய பானங்களில் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

வெந்தய தண்ணீர்

ஊறவைத்த வெந்தயம் அல்லது மேத்தி விதை தண்ணீர் எடை இழப்புக்கு பெரிதும் உதவக்கூடியதாகும். இதில் சபோனின்கள், நார்ச்சத்து போன்றவை அதிக அளவில் உள்ளன. இவையே எடை இழப்புக்கு காரணமாகின்றன. எனவே எடை இழப்ப்புக்கு வெந்தய விதை தண்ணீரை உட்கொள்ள, விரைவில் எடை குறைவதை உணரலாம். அதன் படி, முந்தைய நாள் இரவிலேயே வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, பின் காலையில் வெறும் வயிற்றில் வடிகட்டிய தண்ணீரைக் குடிக்கவும். இதனுடன் சுவைக்காக அரை தேக்கரண்டி தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆப்பிள் சைடர் வினிகர்

தேசிய மருத்துவ நூலகம் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின் படி, வினிகரை உட்கொள்வது உடல் கொழுப்பு நிறை மற்றும் சீரம் ட்ரைகிளிசரைடு, உடல் எடை போன்றவற்றைக் குறைக்கிறது. எனவே திறம்பட உடல் எடையைக் குறைக்க ஆப்பிள் சைடர் வினிகரைப் பயன்படுத்தலாம். அதே சமயம் சேர்க்கப்படும் ஆப்பிள் சைடர் வினிகர் அளவு முக்கியமானதாகும். 200 மில்லி தண்ணீரில், 5 மில்லி முதல் 10 மில்லி அளவிலான ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து தொப்பையைக் குறைக்க காலையில் அருந்தலாம். எனினும், இரைப்பை பிரச்சனை இருப்பவர்கள் இதனை வெறும் வயிற்றில் ஆப்பிள் சைடர் வினிகர் அமிலத்தை அருந்தும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க கேரட் ஜூஸ் எப்படி குடிக்கணும்? எவ்வளவு குடிக்கணும்?

பச்சைச் சாறு

கோஸ், செலரி, கீரை, வெள்ளரிக்காய் போன்ற பச்சை இலைக் காய்கறிகளை சேர்த்து தயாரிக்கப்படும் பச்சைச் சாறு உடல் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது. இதில் சுவைக்காக சிறிதளவு மிளகு, உப்பு மற்றும் எலுமிச்சைச் சாறு போன்றவற்றைச் சேர்க்கலாம். இந்த சாற்றை அருந்திய 30 முதல் 40 நிமிடங்களுக்குப் பிறகே வேறு உணவுகளை சாப்பிடுவது பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், பச்சைச் சாற்றில் உள்ள மேக்ரோ மற்றும் மைக்ரோ ஊட்டச்சத்துக்கள் உடலுறுப்புகளின் செயல்பாட்டுக்கு பெரிதும் உதவுகின்றன. இதனை வெறும் வயிற்றில் அருந்துவது, செரிமானத்திற்கு பெரிதும் உதவக்கூடியதாக அமைகிறது. எனவே அதிக ஊட்டச்சத்துக்கள் மற்றும் குறைந்த கலோரிகள் கொண்ட பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்ப்பது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

திரிபலா நீர்

திரிபலா என்பது மூன்று மருத்துவ பாரம்பரியம் கொண்ட ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்து விளங்கும் கடுக்காய், தான்றிக்காய், மற்றும் ஆம்லா போன்றவற்றால் உருவாக்கப்பட்ட சிறந்த மூலிகை ஆகும். இந்த மூன்றிலிருந்தும் பெறப்பட்ட சாறு மலச்சிக்கல், வீக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. மேலும் இந்த திரிபலாவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. உடல் பருமன் குறித்து சர்வதேச இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின் படி, ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கொழுப்பை எரிக்க உதவுகிறது. மேலும் இதன் மூலம் உடலில் உற்பத்தியாகும் நச்சு செல்கள் வெளியேற்றப்பட்டு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. எடை குறைய, இரண்டு தேக்கரண்டி திரிபலா பொடியை ஒரு கிளாஸ் நீரில் முந்தைய நாள் ஊற வைத்து, அடுத்த நாள் காலை வெறும் வயிற்றில் குடிக்கவும். இது எடை இழப்புக்குப் பெரிதும் வழிவகுக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

இலவங்கப்பட்டை நீர்

இலவங்கப்பட்டை ஆரோக்கியமான மசாலாப் பொருள்களில் ஒன்றாகும். இவை உள்ளுறுப்புக் கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் இது ஒட்டுண்ணி எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே உடல் எடை இழப்புக்கு இலவங்கப்பட்டை தண்ணீரை அருந்தலாம். இந்த நீரில் சுவைக்காக தேன் சேர்த்து பயன்படுத்தலாம். இவ்வாறு தேன் சேர்ப்பது கூடுதல் பயனைக் குறிக்கும். தூங்குவதற்கு முன் மற்றும் பின் தேனை உட்கொள்வது உடலில் உள்ள அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. மேலும்ம் தேனில் உள்ள ஹார்மோன்கள் உடல் எடை இழப்புக்கு உதவுகின்றன.

ஜீரா மற்றும் பெருஞ்சீரக தண்ணீர்

உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்படும் சீரகம் உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதில் பெரிதும் உதவுகிறது. இது செரிமானம் மற்றும் எடை இழப்புக்கு உதவும் நொதிகளை சுரக்கிறது. அதே போல பெருஞ்சீரக விதைகளும் உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை சிறப்பாக உறிஞ்சுவதற்கு உதவுகின்றன. இதனால் நீண்ட நேரம் பசி ஏற்படுவது கட்டுப்படுத்தப்படுவதன், எடை இழப்பை ஊக்குவிக்கிறது. இரவில் ஜீரா மற்றும் பெருஞ்சீரகம் இரண்டையும் தண்ணீரில் ஊறவைத்து, பின் அடுத்த நாள் காலை வெறும் வயிற்றில் இந்த விதைகளை வடிகட்டிய நீரைக் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Weight Loss Tips: ஆயுர்வேத முறையில் உடல் எடையை குறைப்பது எப்படி?

Image Source: Freepik

Read Next

Brown Sugar Weight Loss: உடல் எடை குறைய நாட்டுச் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க

Disclaimer