Doctor Verified

Brown Sugar Weight Loss: உடல் எடை குறைய நாட்டுச் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க

  • SHARE
  • FOLLOW
Brown Sugar Weight Loss: உடல் எடை குறைய நாட்டுச் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க

இது குறித்து ரேபரேலி மாவட்ட மருத்துவமனை டாக்டர் ராகேஷ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இவரின் கருத்துப்படி, நாட்டுச் சர்க்கரை என்பது வெல்லத்தின் தூய வடிவமே எனக் கூறியுள்ளார். வெள்ளைச் சர்க்கரையைத் தயாரிக்க பல்வேறு செயல்முறைகள் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் நாட்டுச் சர்க்கரை தயாரிப்புக்கு மிகக் குறைந்த அளவிலான செயல்முறையே தேவைப்படுகிறது. குறிப்பாக, இதில் இரசாயனங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

எடை இழப்புக்கு நாட்டுச் சர்க்கரை உதவுமா?

உடல் எடை இழப்புக்கு நாட்டுச் சர்க்கரை சில வழிகளில் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Double Chin Reduce Tips: இரட்டைத் தாடை பிரச்சனை இருக்கா.? அப்ப நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!

குறைந்த கலோரி

வெள்ளைச் சர்க்கரையுடன் ஒப்பிடுகையில் நாட்டுச் சர்க்கரை குறைந்த அளவிலான கலோரிகளையே கொண்டுள்ளது. மேலும் இதில் இரும்பு, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் பி, தாமிரம், துத்தநாகம், பாஸ்பரஸ் மற்றும் புரதம் ஆகியவற்றின் நல்ல மூலமாகும். எனவே, இவற்றை எடுத்துக் கொள்வது முற்றிலும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. இந்த குறைந்த அளவிலான கலோரிகள் கொண்ட நாட்டுச் சர்க்கரை எடை இழப்பிற்கு உதவும்.

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க

நாட்டுச் சர்க்கரையைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம். இது நீண்ட நேரம் பசியைக் கட்டுப்படுத்துவதுடன் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதை எளிதாக்குகிறது.

ஆல்கஹால் அல்லாத கொழுப்பு

வெள்ளைச் சர்க்கையை விட பிரவுன் சர்க்கரையில் ஆல்கஹால் அல்லாத கொழுப்பு திரட்சி குறைவாக இருப்பது உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Weightloss Without Exercise: உடற்பயிற்சியே செய்யாமல் உடல் எடையை குறைக்கலாம்!

உடல் எடை குறைய நாட்டுச் சர்க்கரையை எப்படி பயன்படுத்துவது?

  • வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரையை எந்த சந்தேகமும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
  • உடல் எடை இழப்புக்கு உதவும் பானங்கள், உணவுகளில் சேர்க்கப்படும் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதில் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.
  • குக்கீகளில் நாட்டுச் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.
  • உடல் எடை குறைய டீ அல்லது காபி குடிப்பவர்கள் பிரவுன் சர்க்கரையைப் பயன்படுத்தலாம்.

நாட்டுச் சர்க்கரையின் பக்க விளைவுகள்

அதிகப்படியான வெள்ளைச் சர்க்கரை பயன்பாடு உடலுக்குத் தீங்கு விளைவிப்பதைப் போலவே, நாட்டுச் சர்க்கரையை அதிகமாகப் பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே அதிக அளவிலான நாட்டுச் சர்க்கரை உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தோல் ஒவ்வாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். கர்ப்பிணி பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் உடல் எடை குறைக்கும் திட்டத்தில் நாட்டுச் சர்க்கரை பயன்படுத்த நினைத்தால், கண்டிப்பாக உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரிடன் ஆலோசனை பெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Honey for Weight Loss: உடல் எடையை வேகமாகக் குறைக்க தேனை இப்படி சாப்பிடுங்க.

Image Source: Freepik

Read Next

Weight Loss Exercise For Women: உடல் எடை சீக்கிரம் குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க!

Disclaimer

குறிச்சொற்கள்