Double Chin Reduce Tips: இரட்டைத் தாடை பிரச்சனை இருக்கா.? அப்ப நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!

  • SHARE
  • FOLLOW
Double Chin Reduce Tips: இரட்டைத் தாடை பிரச்சனை இருக்கா.? அப்ப நீங்க செய்ய வேண்டியது இதுதான்.!

இரட்டைத் தாடை குறைப்பதற்கான உடற்பயிற்சிகள்

இரட்டைத் தாடை பிரச்சனை பொதுவாக எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்றாகும். தாடைக்கு அடியில் அதிக அளவிலான சதை குவிந்து இருப்பதுடன் முகத்தின் தோற்றம் மாறி விடுகிறது. இரட்டைத் தாடை குறைப்பதற்கான சில பயிற்சி முறைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வார இறுதியில் எடை அதிகரிப்பு? இதை தவிர்க்க 7 குறிப்புகள் இங்கே

நாக்கை நீட்டுதல்

கழுத்தை நேராக வைத்து, நாக்கை முழுமையாக நீட்ட வேண்டும்.

பின் நாக்கை மேல் உயர்த்தி, மூக்கை நோக்கிச் செல்லவும்.

இவ்வாறு செய்யும் போது தசை சிறியதாகி விடும்.

நேரான தாடை

தலையைப் பின்னோக்கி சாய்த்து மேலே பார்க்கவும்.
நன்றாக நீட்டும் போது, கீழ் தாடையை முன்னோக்கி தள்ள வேண்டும்.

இவ்வாறு 15 விநாடி வரை வைத்திருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஒரே நாளில் 500 கலோரிகளை குறைக்க வேண்டுமா? இந்த 6 உணவுகளை தேர்வு செய்யுங்கள்

XO உடற்பயிற்சி

தலையை அசைக்காமல் வைத்துக் கொள்ளவும்.
இவ்வாறு வைத்து XO-ஐ மீண்டும் மீண்டும் உச்சரிக்க வேண்டும்.

இவ்வாறு 15 வினாடிகள் இடைவிட்டு, குறைந்தது 5 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்யலாம்.

பந்து உடற்பயிற்சி

கன்னத்தின் கீழ், சிறிய அழுத்தமான பந்தை வைத்துக் கொள்ள வேண்டும்.

கழுத்திற்கும், கன்னத்திற்கும் இடையில் வைத்த பந்தை 1 நிமிடம் வரை வைத்திருக்கலாம். இதன் மூலம் இரட்டைத் தாடை பிரச்சனையைக் குணப்படுத்த முடியும்.

இரட்டை கன்னத்தை குறைக்கும் சில வீட்டு வைத்தியங்கள்

சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்தி தசையின் அளவைக் குறைக்க முடியும். அவற்றைப் பற்றி இங்குக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

ஆலிவ் எண்ணெய்

ஒரு டீஸ்பூன் அளவு ஆலிவ் எண்ணெயை சூடாக்கி, அவற்றைத் தாடை மற்றும் கழுத்தில் மசாஜ் செய்து வர கன்னத்தின் கீழ் கொழுப்பு குறைக்கிறது.

கிரீன் டீ

கிரீன் டீயில் கேடசின்கள் நிறைந்துள்ளதால், இது உடல் இழப்பை ஊக்குவிக்கிறது. இந்த கிரீன் டீ அருந்துவதுடன், சில தாடைப் பயிற்சிகளை செய்வதன் மூலம் உறுதியான முடிவுகளைப் பெறலாம்.

Image Source: Freepik

Read Next

முட்டையை இப்படி சாப்பிட்டால் உங்கள் உடல் எடை விரைவாகக் குறையும்

Disclaimer

குறிச்சொற்கள்