How to get rid of crunching sound in knee: அன்றாட வாழ்வில் பலரும் பல்வேறு செயல்பாடுகளைச் செய்கின்றனர். அதே சமயம், நம் உடலிலிருந்து சில அறிகுறிகளைக் கவனிக்கின்றனர். அவ்வாறே, பல நேரங்களில் நம் கைகளிலோ அல்லது நடக்கும் போது முழங்கால்களிருந்தோ விரிசல் சத்தம் வருவதை உணர்ந்திருப்போம். ஆனால், பலரும் சாதாரணமாக எண்ணி, அப்படியே விட்டு விடுவர். ஆனால், நாளடைவில் இது போன்று சத்தம் வந்து கொண்டிருப்பது உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதாக இருக்கலாம்.
பொதுவாக முழங்கால்களில் இருந்து இது போன்று விரிசல் சத்தம் வரும் பிரச்சனை ஆனது குருத்தெலும்பு தேய்மானம் அடைவதாலோ அல்லது சரியாக செயல்படாததாலோ ஏற்படக் கூடியதாக இருக்கலாம். சில நேரங்களில் இந்த பிரச்சனை வயதான காரணத்தினாலும் ஏற்படுகிறது. அதே சமயம், சில சமயங்களில் இவ்வாறு சத்தங்கள் உண்டாக உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததும் இருக்கலாம். எனினும், உணவை மாற்றுவதன் மூலம், இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெற முடியும்.
இதில் உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ரா அவர்கள் முழங்கால்களில் விரிசல் சத்தம் இருக்கும்போது எந்த ஊட்டச்சத்துக்களை உணவில் சேர்க்க வேண்டும் என்பது குறித்து பகிர்ந்துள்ளார். அது குறித்து இதில் விரிவாகக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தாங்காத முட்டுவலியில் இருந்தும் தப்பிக்க வீட்டில் இருக்கும் இந்த ஒரே ஒரு பொருள் போதும்!
கால்சியம்
பொதுவாக எலும்புகளின் ஆரோக்கியத்தில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கும் ஊட்டச்சத்துக்களில் கால்சியம் முதன்மையானதாகும். அன்றாட உணவில் கால்சியத்தை சேர்ப்பதன் மூலம் எலும்பு அடர்த்தியை மேம்படுத்தலாம். மேலும் இது முழங்கால் வலியைக் குறைக்கவும் உதவுகிறது. எனவே அன்றாட உணவில் கால்சியம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எள், ராகி, பால் மற்றும் தயிர் போன்ற உணவுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
முக்கிய கட்டுரைகள்
குளுக்கோசமைன்
நடக்கும் போது முழங்கால்களில் இருந்து விரிசல் சத்தம் கேட்டால், குளுக்கோசமைன் என்ற ஊட்டச்சத்தை சேர்ப்பது நன்மை பயக்கும். ஏனெனில், இது குருத்தெலும்பு சேதமடைவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது குருத்தெலும்பு செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. அது மட்டுமல்லாமல், குளுக்கோசமைனை எடுத்துக் கொள்வதன் மூலம் முழங்கால் வலி, வீக்கம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான அபாயத்தையும் குறைக்கலாம்.
வைட்டமின் கே2
எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின் கே2 ஊட்டச்சத்துக்களும் மிகவும் உதவி புரிகிறது. எனவே இதை அன்றாட உணவில் சேர்ப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைட்டமின் கே2 நிறைந்த உணவை உட்கொள்வதன் மூலம் எலும்புகளில் கால்சியம் படிவை மேம்படுத்தலாம். மேலும் இது எலும்பு வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துவதிலும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: மூட்டு வலியைக் காணாமல் போகச் செய்யும் 3 ஆயுர்வேதிக் ரெமிடிஸ் இங்கே.. நிபுணர் சொன்னது
வைட்டமின் டி
முழங்கால்களில் வெடிக்கும் சத்தத்தை கேட்கும் நபர்கள், கட்டாயம் தங்கள் உணவில் வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களை சேர்க்க வேண்டும். இது குருத்தெலும்புகளைப் பாதுகாப்பாக வைப்பதுடன், மூட்டுகளின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது. வைட்டமின் டி ஊட்டச்சத்துக்களை, சூரிய ஒளியின் மூலம் பெறலாம். இதற்காக தினமும் 10 முதல் 15 நிமிடங்கள் வெயிலில் அமரலாம். இது தவிர, சீஸ், முட்டையின் வெள்ளைக்கரு, கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் காளான்கள் போன்ற வைட்டமின் டி நிறைந்த உணவுகளைத் தங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம்.
பொட்டாசியம்
பொட்டாசியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது எலும்புகளுக்கு பல வழிகளில் நன்மை தருகிறது என்பதை நிரூபிக்கிறது. இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் முழங்கால்களில் ஏற்படும் வலி மற்றும் விறைப்பைக் குறைக்கிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Banana for joint pain: அடடே! மூட்டு வலி காணாம போக இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதுமா?
Image Source: Freepik