Reasons for urine leakage while coughing: நம்மில் பெரும்பாலானோர் பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அன்றாட வாழ்க்கையில் பல முறை மனதார சிரித்துக்கொண்டே சில துளிகள் சிறுநீர் வெளியேறுவது நடக்கும். இது கேட்பதற்கு விசித்திரமாக தோன்றினாலும், அனைவருக்கும் எப்போதாவது, எதாவதொரு நேரத்தில் நடக்கக்கூடியதாகும். எனினும், இந்த நிலை எப்போதாவது வந்தால், அதைப் புறக்கணிக்கலாம். ஆனால் இருமல் மற்றும் சிறுநீர் வெளியேறும் பிரச்சனை மீண்டும் மீண்டும் நடந்தால், அதைப் புறக்கணிக்கும் தவறை செய்யக்கூடாது.
இவ்வாறு இருமலின் போது சிறுநீர் வெளியேறும் நிகழ்வானது உடலில் உருவாகக் கூடிய பல பிரச்சனைகளால் நிகழக் கூடியதாகும். இதில் இருமலின் போது சிறுநீர் வெளியேறுவதற்கான காரணங்கள் குறித்து டாக்டர் ஹரிஷ் பாட்டியா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி விரிவாகக் காண்போம்.
இந்த பதிவும் உதவலாம்: நீங்க சிறுநீர் கழிக்கும் போது இந்த அறிகுறிகள் தென்பட்டால்... இந்த தவற மட்டும் செஞ்சிடாதீங்க...!
இருமல் வரும் போது சிறுநீர் வர காரணங்கள்
அதிக உடல் எடை காரணமாக
அதிக உடல் எடையை கொண்டிருப்பவர்களுக்கு சிறுநீர் அடங்காமை ஏற்படுவது பொதுவானதாகும். அதாவது அதிக எடை காரணமாக, சிறுநீர்ப்பை பலவீனமடையத் தொடங்குகிறது என்று மருத்துவர் கூறுகிறார். மேலும் இத்தகைய சூழ்நிலையில் சிறுநீரை அடக்குவதில் சிக்கல் உண்டாகலாம். எனவே அதிக உடல் எடையுடன் இருந்தால் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் சிறுநீரை அடக்குவதில் சிரமம் ஏற்பட்டு உடனே வெளியேற்றும் நிலை ஏற்படலாம்.
முக்கிய கட்டுரைகள்
இடுப்பு தசைகள் பலவீனமடைவது
ஒருவரின் இடுப்பு தசைகள் பலவீனமாக இருப்பின், அவர்களுக்கு சிறுநீரை அடக்குவதில் சிக்கல் ஏற்படலாம். பொதுவாக இடுப்புத் தள தசைகள் சிறுநீர்ப்பை மற்றும் கருப்பையை ஆதரிப்பதாக மருத்துவர் குறிப்பிடுகிறார். இந்நிலையில், தசைகள் பலவீனமாக இருப்பின், அவற்றால் சிறுநீர்ப்பையை ஆதரிக்க முடியாது. இத்தகைய சூழ்நிலையில், சிறுநீர் கசிவு பிரச்சனை உண்டாகலாம்.
நாள்பட்ட சுவாசக் கோளாறுகள்
டாக்டர் பாட்டியா அவர்களின் கூற்றுப்படி, நாள்பட்ட சுவாசக் கோளாறு காரணமாக, ஒரு நபர் இருமல் மூலம் சிறுநீரை வெளியேற்றும் நிலை உண்டாகிறது. உண்மையில், நாள்பட்ட இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் காரணமாக சிறுநீர் கசிவு ஏற்படலாம். அதாவது இவர்கள் சிறுநீர் அடங்காமை பிரச்சனையைக் கொண்டிருப்பர். இது போன்ற சூழ்நிலையில், ஒருவர் இருமும் போதெல்லாம், அவரது சிறுநீர்ப்பை சிறுநீரை அடக்க முடியாமல் போகும் நிலை உண்டாகும். இதன் காரணமாகவே, அவர்கள் இருமும் போது சில துளிகள் சிறுநீரை வெளியேற்றுகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்: அதிக நேரம் சிறுநீரை அடக்கி வைத்திருப்பது இவ்வளவு ஆபத்தானதா? - இதை கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
சிறுநீர் கசிவு பிரச்சனையை தவிர்ப்பது எப்படி?
சிறுநீர் கசிவு பிரச்சனையைத் தவிர்க்க, திரவ உட்கொள்ளலை அதிகரிக்க வேண்டும். இந்த சூழ்நிலையில், அதிக தண்ணீர் குடிக்கவும். அதே சமயம், மணிக்கணக்கில் சிறுநீரை அடக்கி வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் உணவில் ஆரோக்கியமான மற்றும் சத்தான விஷயங்களைச் சேர்க்க வேண்டும்.
நீண்ட காலமாக சிறுநீர் கசிவு பிரச்சனையை எதிர்கொள்பவர்களாக இருப்பின், அவர்கள் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில், இந்நிலை கடுமையான வடிவத்தையும் எடுக்கலாம். மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதன் மூலம் எதிர்காலத்தில் பல பிரச்சனைகளில் இருந்து நம்மைப் பாதுகாக்கலாம்.
சிறுநீர் அடங்காமை பிரச்சனையை சமாளிக்கக்கூடிய சில பயிற்சிகளைச் செய்யலாம். இந்த சூழ்நிலையில், இடுப்புத் தள தசைகளை வலுப்படுத்தக்கூடிய பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இந்நிலையில் கெகல் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும்.
எனவே இருமலின் போது அல்லது தும்மலின் போது சிறுநீர் கசிவு பிரச்சனையை சந்தித்தால், அதைப் புறக்கணிக்கக் கூடாது. இந்நிலை உடலில் வளரக்கூடிய பல நோய்களைக் கண்டறிய வழிவகுக்கிறது. இந்த சூழ்நிலையில், நீங்கள் கட்டாயம் உடனடியாக ஒரு மருத்துவரை அணுக வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: நீங்கள் அடிக்கடி சிறுநீரை அடக்கி வைப்பவரா? இதுக்கு ரெடியா இருங்க!
Image Source: Freepik