Best ayurvedic remedies for joint pain: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை பலருக்கும் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. அவ்வாறு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக மூட்டு வலி அமைகிறது. நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமை போன்றவை மூட்டு வலிக்கு வழிவகுக்கிறது. இது அன்றாட வாழ்க்கையை சவாலானதாக மாற்றக்கூடிய நிலையாகும். இதனால், படுக்கையில் இருந்து எழுந்திருப்பது அல்லது படிக்கட்டுகளில் ஏறுவது போன்ற எளிமையான செயல்கள் கூட கடினமானதாக தோன்றலாம்.
இந்த மூட்டு வலியைச் சாதாரணமாகக் கருதி, சிகிச்சையளிக்கப்படாவிட்டால் அது தசை பலவீனம் மற்றும் இயக்கம் குறைவதற்கு வழிவகுக்கலாம். எனவே, மூட்டு வலியை நிர்வகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. ஆயுர்வேதத்தில் மூட்டு வலியைக் குறைப்பதற்கு பல்வேறு தீர்வுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் மூட்டு வலியைக் குணப்படுத்துவதற்கான முறைகளை எடுத்துரைத்துள்ளார். அதில் அவர் மூட்டு வலிக்கு சிகிச்சையளிக்க 3 எளிய ஆயுர்வேத வைத்தியங்களைப் பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்: Joint pain causes: உஷார்! இந்த உணவுகளை சாப்பிட்டா உங்களுக்கு மூட்டுவலி அதிகரிக்குமாம்
நிபுணரின் கருத்து
ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் அவர்களின் கருத்துப்படி,”மூட்டு வலி எளிய இயக்கங்களை சவாலானதாக உணர வைக்கக் கூடியதாகும். ஆனால், நீண்டகால மூட்டு ஆரோக்கியத்தை ஆதரிக்கும் இயற்கை தீர்வுகளை ஆயுர்வேதம் வழங்குகிறது. இந்நிலையில், மூட்டு வலி, மூட்டு விறைப்பு மற்றும் வீக்கத்தைக் குறைப்பதற்கு உதவும் மூன்று பயனுள்ள தீர்வுகள் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். இதில் நமாமி குறிப்பிட்டுள்ள ஆயுர்வேத வைத்தியங்கள் குறித்து காணலாம்.
முக்கிய கட்டுரைகள்
மூட்டு வலியைக் குறைக்க உதவும் மூன்று ஆயுர்வேத வைத்தியங்கள்
மஞ்சள் பால்
இது இயற்கையாகவே அழற்சி எதிர்ப்புப் பண்புகள் கொண்டதாகும். மஞ்சளில் குர்குமின் என்ற கலவை நிறைந்துள்ளது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்ததாகும். மஞ்சள் பால் அருந்துவது மூட்டு வீக்கம், வலி மற்றும் மூட்டு விறைப்பைக் குறைக்க உதவுகிறது. இது குணப்படுத்துவதை ஊக்குவிக்கவும், காலப்போக்கில் இயக்கத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
மஞ்சள் பால் செய்யும் முறை
- மஞ்சள் பால் தயார் செய்வதற்கு 1 கப் சூடான பால் (பால் அல்லது தாவர அடிப்படையிலான) எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதன் உறிஞ்சுதலை அதிகரிக்க, ½ தேக்கரண்டி மஞ்சள் தூள் மற்றும் ஒரு சிட்டிகை கருப்பு மிளகு சேர்க்கலாம்.
- இது இரவு முழுவதும் குணமடைவதற்கும், காலை விறைப்பைக் குறைப்பதற்கும் படுக்கைக்குச் செல்லும் முன் குடிக்க வேண்டும்.
அஜ்வைன் (கேரம் விதை)
இது சூடான அமுக்க - விரைவான வலி நிவாரணமாக செயல்படுகிறது. அஜ்வைனில் அதாவது கேரம் விதைகளில் தைமால் உள்ளது. இது வலுவான வலி நிவாரணி மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளதாகும். ஓமத்துடன் வெப்பத்தைப் பயன்படுத்துவது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மூட்டுகளைச் சுற்றியுள்ள தசை விறைப்பைப் போக்கவும் உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Bone Health: உங்க எலும்பு இரும்பு போல ஆகணுமா? அத்திப்பழத்தை இப்படி சாப்பிடுங்க!
செய்யும் முறை
- ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி ஓம விதைகளை உலர்வாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதை ஒரு பருத்தித் துணியிலோ அல்லது மெல்லிய, லேசான துணியிலோ சுற்றி வைக்க வேண்டும்.
- அசௌகரியத்தைத் தணிக்க, பாதிக்கப்பட்ட மூட்டுகளில் 10-15 நிமிடங்கள் சூடான அமுக்கத்தைப் பயன்படுத்தலாம்.
- மூட்டு விறைப்பிலிருந்து நிவாரணம் பெற தினமும் ஒன்று அல்லது இரண்டு முறை செய்யலாம்.
அஸ்வகந்தா பொடி
இது மூட்டுகள் மற்றும் தசைகளை பலப்படுத்த உதவும் சிறந்த தேர்வாகும். அஸ்வகந்தா ஒரு சக்திவாய்ந்த அடாப்டோஜெனாக செயல்படுகிறது. இது வீக்கத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும், இது தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இது மன அழுத்தம் மற்றும் வயதானதால் ஏற்படும் மூட்டு சிதைவைக் குறைக்கவும், ஒட்டுமொத்த எலும்பு ஆரோக்கியத்தையும் இயக்கத்தையும் ஆதரிக்கவும் வழிவகுக்கிறது.
பயன்படுத்தும் முறை
- இதற்கு ½ தேக்கரண்டி அளவிலான அஸ்வகந்தா பவுடரை எடுத்துக் கொள்ள வேண்டும்.
- இதை வெதுவெதுப்பான பால் அல்லது தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு ஒரு முறை குடிக்கலாம்.
- சிறந்த முடிவுகளைப் பெறவும், மூட்டு வலிமையை மீட்டெடுக்கவும் காலையிலோ அல்லது படுக்கைக்கு முன்போ இதை எடுத்துக் கொள்ளலாம்.
இது போன்ற ஆயுர்வேத வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram
இந்த பதிவும் உதவலாம்: Banana for joint pain: அடடே! மூட்டு வலி காணாம போக இந்த ஒரு பழம் சாப்பிட்டா போதுமா?
Image Source: Freepik