Monsoon Knee Pain: மழைக்காலத்தில் எப்பேற்பட்ட மூட்டுவலியையும் குறைச்சிடும் சூப்பரான ரெமிடிஸ்

  • SHARE
  • FOLLOW
Monsoon Knee Pain: மழைக்காலத்தில் எப்பேற்பட்ட மூட்டுவலியையும் குறைச்சிடும் சூப்பரான ரெமிடிஸ்

மழைக்காலத்தில் மூட்டு சம்பந்தமான வலிகள் ஏன் வருகிறது?

மழைக்காலத்தில் வளி மண்டல அழுத்தம், வெப்பநிலை மற்றும் ஈரப்பத அளவுகளில் ஏற்படும் மாற்றங்கள் மூட்டு ஆரோக்கியத்தைப் பாதிக்கலாம். பருவமழைக்காலத்தின் போது ஏற்படும் குறைந்த அழுத்தத்தால் மூட்டுகளைச் சுற்றியுள்ள திசுக்கள் விரிவடையச் செய்யலாம். இது அதிகரித்த அழுத்தம் மற்றும் வலியை ஏற்படுத்தலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Tan Removing Remedies: பாதத்தின் கருமையை நீக்க இந்த வீட்டு வைத்தியங்களை டிரை பண்ணுங்க

பொதுவாக, மழைக்காலங்களில் உடல் செயல்பாடு இயல்பாகவே குறைக்கலாம். இதனால், சிறிது சோம்பேறித்தனமும், முடிந்தவரை வெளியில் செல்வதைத் தவிர்ப்பதும் உடல் உழைப்பைத் தவிர்க்கும் நிலையாகும். உடற்பயிற்சி செய்பவர்கள் மழைக்காலங்களில் உடற்பயிற்சி நடைப்பயிற்சியை தவிர்ப்பதால் தசை பலவீனம் மற்றும் மூட்டு விறைப்பை ஏற்படுத்தலாம். எனினும் சில ஆரோக்கியமான நடைமுறைகளைக் கையாள்வதன் மூலம், மூட்டுவலியை சமாளிக்கலாம்.

மழைக்காலத்தில் மூட்டு வலி குணமாக என்ன செய்வது?

குளிர்ந்த காலநிலை தொடங்கும் போது, சில இயற்கை வைத்தியங்களைக் கையாள்வதன் மூலம் கூடுதல் மூட்டு வலி சவால்களைச் சமாளிக்கலாம்.

நீரேற்றமாக இருப்பது

பொதுவான வெளியில் சூடாக இருக்கும் போது, உடலை புத்துணர்ச்சியடைய வைக்க ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது இயல்பானதாகும். ஆனால், உடல் குளிர்ச்சியானவுடன், நம்மை அறியாமலேயே தண்ணீரை குறைவாக குடிக்க ஆரம்பிப்பர். எனவே, நன்கு நீரேற்றமாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், லேசான நீரிழப்பு கூட வலிக்கு அதிக உணர்திறனை ஏற்படுத்தலாம்.

உடற்பயிற்சி செய்வது

உடல் செயல்பாடு குறைவதால் மூட்டுவலி கணிசமாக அதிகரிக்கலாம். அதன் படி, எளிதான நீட்சி மற்றும் நெகிழ்வுத்தன்மை பயிற்சிகளை செய்யும் போது உடலில் இரத்த ஓட்டம், மூட்டு உயவு மற்றும் வலிமை போன்றவற்றை அதிகரித்து வலி அசெளகரியத்தைக் குறைக்கிறது. எனவே வீட்டிற்குள் மென்மையான நீட்சி பயிற்சிகள் செய்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதே நேரம் உடற்பயிற்சி செய்வது மூட்டுக்கு குறைவான அழுத்தம் கொடுக்கும் வகையில் செய்ய வேண்டும். இது தசை மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுவதைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணியாக யோகாவும் அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Digestive Health: மழைக்கால செரிமான பிரச்னைகளை போக்க சூப்பர் டிப்ஸ்.!

ஆரோக்கியமான உணவுமுறை

இயல்பகவே ஆரோக்கியமான மற்றும் சத்தான சரிவிகித உணவை உட்கொள்வது ஆரோக்கியமான மற்றும் வலியற்ற உணர்வை அளிக்கிறது. இதன் மூலம் எல்லாவிதமான நோய் தாக்கத்திலிருந்து விடுபடலாம். மேலும், இது கட்டுப்படுத்தவும் செய்ய உதவுகிறது. உணவில் மூட்டு வலி அசௌகரியத்தைக் குறைப்பதற்கான உணவுகள், விதைகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றைச் சேர்த்துக் கொள்ளலாம்.

எடைக்கட்டுப்பாடு

சில சமயங்களில் உடல் பருமன் மற்றும் அதிகளவிலான உடல் எடை போன்றவை மழைக்காலத்தில் மூட்டு வலியை அதிகரிக்கலாம். எனவே எடையைக் குறைக்க முயற்சிப்பதன் மூலம் வலி உபாதைகளைத் தடுக்கலாம். குறிப்பாக, மழைக்காலத்தில் பலரும் நொறுக்குத் தீனிகள், கொழுப்பு நிறைந்த உணவுகள், எண்ணெய் பலகாரங்கள், மசாலாக்கள் போன்றவற்றை அதிகம் எடுத்துக் கொள்வர். இவை அனைத்தும் உடல் எடையை அதிகரிக்கக் கூடிய காரணிகளாகும். இது வலியை மேலும் மோசமாக்கலாம். எனவே உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துகொள்வதன் மூலமும் மூட்டு வலியைத் தவிர்க்கலாம்.

இந்த ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கையாள்வதன் மூலம் மழைக்காலத்தில் ஏற்படும் மூட்டு வலியைக் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Monsoon Headaches: மழைக்கால ஒற்றைத் தலைவலியை நொடிப்பொழுதில் நீக்கும் வீட்டு வைத்தியம்!

Image Source: Freepik

Read Next

Monsoon Headaches: மழைக்கால ஒற்றைத் தலைவலியை நொடிப்பொழுதில் நீக்கும் வீட்டு வைத்தியம்!

Disclaimer