Expert

Joint Pain Yoga: மூட்டு வலி சீக்கிரம் குறையணுமா? இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
Joint Pain Yoga: மூட்டு வலி சீக்கிரம் குறையணுமா? இந்த 3 யோகாசனங்களை செய்யுங்க


Joint Pain Yoga Asanas: ஆரோக்கியமற்ற உணவுமுறை மற்றும் மோசமான வாழ்க்கை முறை சிறுவயது முதலே பலரும் பாதிக்கப்படுகின்றனர். இதில் எலும்புகள் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படுவதும் அமையும். ஆனால், மக்கள் பெரும்பாலும் மூட்டு வலியை புறக்கணிக்கின்றனர் அல்லது வலியை உணரும் போது வலி நிவாரணிகளை எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், இந்த மருந்துகள் பல்வேறு பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது.

எலும்பு மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற முதலில் வாழ்க்கை முறையை மேம்படுத்த வேண்டும். அந்த வகையில் தினமும் யோகாசனங்களை மேற்கொள்ளலாம். இதில் யோகா பயிற்சி செய்வது மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தருவதுடன், பல பிரச்சனைகளைக் குணப்படுத்த உதவுகிறது. இதில் எலும்பு மற்றும் மூட்டு வலி குணமாக யோகாசிரியர் ரஜ்னீஷ் ஷர்மா அவர்கள் சில யோகாசனங்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Dry Eyes: கண்கள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த யோகாவை தினமும் செய்யுங்க

எலும்பு மற்றும் மூட்டு வலி குணமாக யோகா

திரிகோணாசனம்

இது முக்கோணம் அல்லது திரிகோனி ஆசனம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆசனத்தைத் தொடர்ந்து செய்வது எலும்புகள் வலுவடையச் செய்வதுடன், மூட்டு வலியிலிருந்து நிவாரணம் தருகிறது. இது தவிர, திரிகோனாசனா முது கு மற்றும் வயிற்று தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இது செரிமான அமைப்பை பராமரிக்க உதவுகிறது. திரிகோணாசனத்தின் வழக்கமான பயிற்சி உடலை நிலையானதாக வைத்திருப்பதுடன், தொடை தசைகளை வலுப்படுத்துகிறது.

உஸ்ட்ராசனம்

இது ஒட்டக ஆசனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது எலும்பு மற்றும் மூட்டு வலியைக் குறைக்க உதவும் சிறந்த ஆசனமாகும். இது கழுத்து, இடுப்பு மற்றும் முதுகு தசைகளை உறுதிப்படுத்த உதவுகிறது. மேலும் இந்த பயிற்சி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், நுரையீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. தொடர்ந்து சக்ராசனம் செய்வது சோம்பலை நீக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அடிக்கடி முதுகு மற்றும் மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தைத் தவறாமல் செய்யலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Healthy Heart: இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க

சக்ராசனம்

எலும்பு மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற தினமும் சக்ராசனத்தை செய்யலாம். இது வீல் போஸ் என அழைக்கப்படுகிறது. சக்ராசனம் செய்வது மூட்டு மற்றும் எலும்பு வலியைக் குறைக்க உதவுகிறது. இது இதயத்தை ஆரோக்கியமாக்க வைக்கிறது. சக்ராசனம் செய்வது வயிறு, கழுத்து மற்றும் இடுப்பு தசைகள் போன்ற உள் உறுப்புகளை வலுப்படுத்துகிறது. சக்ராசனம் தொடைகள், தோள்கள், முதுகு மற்றும் முழங்கால்களின் தசைகளை சமநிலைப்படுத்த உதவுகிறது.

இந்த யோகாசனங்களை தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம் எலும்பு மற்றும் மூட்டு வலியைக் குணமாக்கலாம். தினமும் இந்த யோகாசனங்கள் செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Yoga For Acidity: அசிடிட்டியில் இருந்து விரைவில் விடுபட இந்த யோகா செய்யுங்க.

Image Source: Freepik

Read Next

Foods Before Yoga: யோகா செய்றதுக்கு முன்னாடி நீங்க சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன தெரியுமா?

Disclaimer