Best Foods To Eat Before Doing Yoga: காலையில் வெறும் வயிற்றில் யோகா செய்வது பரிந்துரைக்கப்பட்டாலும், பலரும் காலை உடற்பயிற்சிக்கு முன் காலை உணவை சாப்பிட விரும்புவர். உடற்பயிற்சிக்கு முன்னதாக ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. எனினும், உணவைத் தவிர்ப்பது யோகா உட்பட உடல் செயல்பாடுகளின் போது சோர்வாக உணரலாம்.
எனவே யோகாசனங்களை மேற்கொள்ளும் முன் சில ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இது உடல் ஆற்றலைப் பெற உதவுவதுடன், அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. இதில், யோகா செய்வதற்கு முன் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் சிலவற்றைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Yoga For Dry Eyes: கண்கள் அடிக்கடி வறண்டு போகுதா? இந்த யோகாவை தினமும் செய்யுங்க
யோகாவுக்கு முன் சாப்பிட வேண்டிய உணவுகள்
யோகா செய்யும் முன் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவுகள் மூலம் உற்சாகமாக உணர முடியும்.
கிரேக்க தயிர்
இது யோகாவுக்கு முன்னதாக சாப்பிடக் கூடிய சிறந்த சிற்றுண்டியாகும். ஏனெனில், இது புரதங்கள் நிறைந்துள்ளது. கிரேக்க தயிரில் புரோபயாடிக்குகள் உள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இது வீக்கம் மற்றும் அசௌகரியத்தைத் தடுக்க உதவுகிறது. கூடுதல் நன்மைகளைப் பெற குறைந்த கொழுப்பு அல்லது கொழுப்பற்ற கிரேக்க தயிரைத் தேர்வு செய்யலாம்.
வாழைப்பழம்
இதில் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பொட்டாசியம் ஒரு அத்தியாவசிய தாது மற்றும் எலக்ட்ரோலைட் ஆகும். இது இதயத்தைத் தொடர்ந்து செயல்பட வைத்து, தசைகளைச் சுருக்கி, அதிக ஆற்றலைச் செலுத்த உதவுகிறது. மேலும், இதில் நிறைந்துள்ள கார்போஹைட்ரேட்டுகள் உடல் எடை அதிகரிக்கச் செய்யாமல் யோகாவை செய்வதற்கு விரைவான ஆற்றல் மூலத்தை வழங்குகிறது.
ஸ்மூத்திகள்
அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிரம்பிய ஸ்மூத்திகளை யோகா செய்யும் முன் எடுத்துக் கொள்ளலாம். இலை கீரைகள், புரோட்டீன் பவுடர் அல்லது கிரேக்க தயிர் போன்ற புரதம் நிறைந்த பொருள்கள், அவகேடோ போன்ற ஆரோக்கிய கொழுப்புகளுடன் ஸ்மூத்திகள் தயார் செய்யலாம். ஸ்மூத்தியில் உள்ள புரதம், கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட்டுகளின் கலவை உடனடி ஆற்றலை அளிப்பதுடன் தசைகளை மீட்டெடுக்க உதவுகிறது. ஸ்மூத்திகள் நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்க உதவுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Malasana During Periods: பீரியட்ஸ் டைம்ல மலாசனம் செய்வதில் என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா?
ஓட்ஸ்
யோகாசனங்கள் செய்வதற்கு சிறந்த மற்றும் சத்தான சிற்றுண்டியாக பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இது நார்ச்சத்துக்கள் மற்றும் புரதங்களைக் கொண்டுள்ளது. இது நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வைத் தருவதுடன் உடல் எடை இழப்புக்கு உதவுகிறது. இதிலுள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் படிப்படியாக ஆற்றலைத் தந்து போதுமான ஆற்ரலை வழங்குகிறது. எனினும், யோகா செய்யும் முன் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக ஓட்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பாதாம்
இதில் புரதம், நார்ச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் போன்றவற்றின் கலவையை பாதாம் கொண்டுள்ளது. இது உடலை உற்சாக மற்றும் திருப்தியாக வைக்க உதவுகிறது. இதில் மக்னீசியம் நிறைந்துள்ளது. இவை தசை தளர்வு மற்றும் செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகா செய்யும் முன்னதாக சில பாதாமை எடுத்துக் கொள்வது உடல் ஆற்றல் மட்டங்களைத் தக்க வைக்க உதவுகிறது.
யோகா செய்யும் முன் இந்த உணவுகளை எடுத்துக் கொள்வது உடலுக்கு புத்துணர்ச்சியைத் தருவதுடன் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: யோகா செய்வதற்கு முன்னும் பின்னும் நீங்க சாப்பிட வேண்டியது இது தான்!
Image Source: Freepik