What foods should i avoid to stay healthy: குளிர்காலம் வந்துவிட்டாலே நாம் பலதரப்பட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, இந்த காலகட்டத்திலேயே உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து காணப்படுகிறது. இந்த குறைந்த நோயெதிர்ப்புச் சக்தியின் காரணமாக உடல் எளிதில் பல்வேறு வைரஸ் தொற்றுக்களால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படலாம். இதனைத் தவிர்க்க உடலில் இயற்கையாகவே நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். இந்நிலையில், உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த குளிர்ந்த காலநிலையின் போது சில ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
அதே சமயம், உடல் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சில உணவுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், சில ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வது வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதாகவும், சில சமயங்களில் ஒவ்வாமைகளை ஏற்படுத்துவதாகவும் அமையலாம். எனவே இது போன்ற உணவுகளிலிருந்து நாம் விலகி இருப்பது நல்லது. இல்லையெனில், இவை நோயெதிர்ப்பு சக்தியை பாதிப்பதுடன், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதிக்கலாம். இதில், குளிர்காலத்தில் நாம் தவிர்க்க வேண்டிய சில ஆரோக்கியமற்ற உணவுகளைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Diet: குளிர் காலத்தில் தினமும் நட்ஸ் சாப்பிடுவதால் உடலுக்கு இத்தனை நன்மைகளா?
குளிர்காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
மோர்
மோர் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் எனினும், இதை தவறான நேரத்தில் அருந்துவது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அவ்வாறே, குளிர்ந்த காலநிலையின் போது மோரைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் குளிர்ந்த பால் பொருட்கள் அருந்துவது சளி வெளியீட்டை அதிகரிக்கலாம். இது பருவகால சளி மற்றும் காய்ச்சல் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனினும், குடல் ஆரோக்கியத்திற்கு புரோபயாடிக்குகள் தேவைப்படுவதால், தயிர் ஒரு நல்ல தேர்வாக இருக்கும். எனினும், அதை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இது குளிர்ச்சியாக இருக்காது. மேலும், மதிய உணவுக்கு முன் தயிர் சாப்பிடலாம்.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை
எந்த பருவகாலமாக இருப்பினும், சர்க்கரை நிறைந்த இனிப்பின் மீதான விருப்பம் எப்போதும் குறைந்தபாடில்லை. எனினும், இந்த குளிர்ச்சியான காலநிலையில் சுவையான இனிப்பை சாப்பிட விரும்புபவர்கள் ஒருமுறைக்கு பல முறை சிந்திப்பது நல்லது. குறிப்பாக, இந்த காலகட்டத்தில் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையால் செய்யப்பட்ட இனிப்புகள் ஒரு நல்ல தேர்வாக இருக்காது. ஏனெனில், இந்த சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரிய சேர்க்கப்பட்ட இனிப்புகளை உட்கொள்வது வீக்கத்தை ஏற்படுத்தி, நோயெதிர்ப்புச் சக்தியைக் குறைக்கலாம். இனிப்பு பசியைத் தீர்க்க, பருவகால பழங்கள் போன்ற இயற்கையான மற்றும் ஆரோக்கியமான விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
குளிர்ந்த பால் பானங்கள்
குளிர்ந்த பால் பொருட்கள் அதீத சுவையைக் கொண்டிருப்பினும், இதை குளிர்காலத்தில் தவிர்ப்பது மிகவும் நல்லது. ஏனெனில், சுவையூட்டப்பட்ட பால் அல்லது மில்க் ஷேக்குகள் போன்ற பால் சார்ந்த பானங்கள் சளி, தொண்டை புண் மற்றும் கடுமையான இருமலுக்கு வழிவகுக்கலாம். இதற்கு மாற்றாக பருவகாலம் முழுவதும் வெதுவெதுப்பான பால் அல்லது மஞ்சள் தூவப்பட்ட பாலை அருந்துவதன் மூலம் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Winter Foods: குளிர் காலத்தில் எடையை குறைக்க வேண்டுமா? உங்களுக்கான உணவுகள் இங்கே!
குளிர்பானங்கள், பழச்சாறுகள்
சோடா போன்ற குளிர்பானங்களை அருந்துவது உடலின் பாதுகாப்பு அமைப்பைக் குறைக்கிறது. ஏனெனில், இந்த குளிர் பானத்தின் வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்குக் குறைக்க உடலுக்கு அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. இவை உடலை வலுவிழக்கச் செய்து, நோய்களை ஏற்படுத்தலாம். இது பழச்சாறுகளுக்கும் பொருந்துகிறது. இவை ஆரோக்கியமாக இருப்பினும், குளிர்காலத்தில் இவை நல்ல தேர்வாக இருக்காது.
பாதுகாக்கப்பட்ட உணவுகள்
பதிவு செய்யப்பட்ட உணவுகள் அல்லது ஊறுகாய்கள் போன்றவற்றிற்கு உப்பு மற்றும் எண்ணெய் சேர்ப்பதன் மூலமே அவை நீண்ட காலத்திற்கு பாதுகாக்கப்படுகிறது. ஆனால், உணவுப் பொருட்களை சேமித்து வைக்கும் செயல்முறையானது உடலுக்குத் தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கச் செய்யாமல் வழிவகுக்கிறது. இது சில நபர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். இதற்கு மாற்றாக, ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது வளர்ச்சிதை மாற்ற விகிதத்தை நிர்வகிக்கலாம். மேலும், ஒவ்வாமை அல்லது பருவகால நோய்களைத் தடுக்க உதவுகிறது.
இந்த வகை உணவுகளை குளிர்காலத்தில் தவிர்ப்பதன் மூலம் குளிர்காலத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை பாதுகாப்பதன் மூலம் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Diabetes Foods in Winter: குளிர்காலத்தில் சர்க்கரை அளவைக் குறைக்க இந்த உணவுகளைச் சாப்பிடுங்க.
Image Source: Freepik