குளிர்காலம் நோய்களின் காலமும் கூட, அதனால்தான் உணவில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். சில உணவுப் பொருட்களை குளிர்காலத்தில் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
முக்கிய கட்டுரைகள்
குளிர்காலம் வந்துவிட்டாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சளி, ஜலதோஷம், காய்ச்சல், அலர்ஜி உள்ளிட்ட தொற்றுகள் ஏற்படும். எனவே நோய்கள் வராமல் பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதனால்தான் குளிர்காலத்தில் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.
சில உணவுப் பொருட்களை குளிர்காலத்தில் சாப்பிடுவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நட்ஸ் அவற்றில் ஒன்று. குளிர்கால உணவில் நட்ஸை சேர்த்துக்கொள்வதால், என்னென்ன மாதிரியான நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்…
நட்ஸ்:
நட்ஸ் உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதன் சத்துக்கள் இதய மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. இவை உடலுக்கு ஆற்றலை வழங்க உதவுகின்றன. கால்சியம் மற்றும் வைட்டமின் டி எலும்பு வலி மற்றும் வாத பிரச்சனைகளை போக்க உதவுகிறது.
பொதுவாக, மழைக்காலம் மற்றும் குளிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனைத்துவிதமான உடல் நலப்பிரச்சனைகளையும் சரி செய்ய நட்ஸ் மிகவும் முக்கியமானது.
நோய் எதிர்ப்பு சக்தி:
குளிர் காலத்தில் நோய்கள் வராமல் இருக்க உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பது மிகவும் அவசியம். நட்ஸ்கள் இதற்கு மிகவும் பயனுள்ளதாகும். துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற அதன் கூறுகள் இதற்கு உதவுகின்றன.
பல இடங்களில் வெப்பம் மிகவும் குளிராக உள்ளது. இந்த நேரத்தில் நமக்கு பசி எடுப்பது சகஜம். உடல் கலோரிகளை சேமித்து வைப்பதால் இது நிகழ்கிறது. இது ஆரோக்கியமற்ற உணவு மற்றும் அதிகப்படியான உணவுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனை சரி செய்யக்கூடிய சிறந்த மருந்து, நட்ஸ் ஆகும்.
புரதம் நிறைந்த உணவுகள் பசியைக் குறைக்க உதவும். திடீரென்று வயிறு நிரம்பியதாகத் தோன்றும். கொட்டைகளில் புரதம் நிறைந்துள்ளது. இது விரைவாக கலோரிகளை ஆற்றலாக மாற்றுகிறது. இதனால் உடலில் கொழுப்பு சேராது.இதனால் வெயிட் போட்டுவிடுமோ? என்ற அச்சமும் தேவையில்லை.
முடி, சருமத்திற்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
குளிர்காலத்தில் நமது தலைமுடி மற்றும் சருமத்திற்கு பிரச்சனைகள் ஏற்படுவது சகஜம்.வறட்சியை தடுக்கக்கூடிய வைட்டமின் ஈ பாதாம் மற்றும் அக்ரூட் பருப்பில் காணப்படுகிறது. வைட்டமின் ஈ சருமத்திற்கு இயற்கையான ஈரப்பதத்தை வழங்க உதவுகிறது. இதன் காரணமாக, சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் சருமத்தை இறுக்கமாக்கிறது.
Image Source: Freepik