Fri Sep 11, 2026 | 09:33 PM IST

Winter Tips: எச்சரிக்கை… இப்படி ஆவி பிடித்தால் சளி, ஜலதோஷம் குணமாகவே ஆகாது!

ஜலதோஷம் மற்றும் சளி போன்ற தொற்றுக்களை போக்க நீராவியை வைத்து ஆவி பிடிப்பது வழக்கமானது. ஆனால் ஆவி பிடிப்பதை சரியாக செய்யாவிட்டால் பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

பண்டைய காலம் தொட்டே சளி, ஜலதோஷம் போன்ற குளிர் கால தொற்றுகளுக்கு ஆவி பிடிக்கும் பழக்கம் வழக்கத்தில் உள்ளது. நவீன காலத்தில் நீரில் போட்டு ஆவி பிடிப்பதற்கு என்றே பல்வேறு வகையான மருந்துகளும் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. அதேபோல் பல்வேறு ஆயுர்வேத மூலிகைகளும் ஆவி பிடிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிலர் சரும பராமரிப்பிற்காகவும் ஆவி பிடிப்பது உண்டு.

இதையும் படிங்க: Diabetes Ayurvedic Treatment: சர்க்கரை நோயை குறைக்க மருந்து தேவையில்லை - இந்த ஆயுர்வேத மூலிகைகள் போதும்!

ஏனெனில் நீராவி உடல் நலக்கோளாறுகளை மட்டுமல்ல முகப்பரு, கரும்புள்ளி, முகத்தூவாரங்களில் சேரும் தூசு மற்றும் அழுக்குகளையும் நீக்கக்கூடியது. ஆனால் ஆவி பிடிக்கும் போது நாம் செய்யும் சில தவறுகள் பல்வேறு உடல் நலக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். முறையற்ற, அலட்சியமான போக்கில் ஆவி பிடிக்கும்போது காயங்கள், கொப்புளங்கள், அலர்ஜி போன்ற சில விபரீதங்கள…

நீண்ட நேரம் ஆவி பிடிப்பது:

சளி, தலைபாரம், ஜலதோஷம் போன்ற பிரச்சனைகள் நீங்க ஆவி பிடிப்போம். ஆனால் சிலர் எவ்வளவு நேரம் ஆவி பிடிக்க வேண்டும் என்று தெரியாமல், அதிக நேரம் பிடிப்பது மூக்கின் உள் பகுதியை புண்ணாக்கும். மேலும் முகத்தில் பருக்கள், கட்டிகள் இருப்பவர்களுக்கு அதிக எரிச்சலை உண்டாக்கிவிடக்கூடும்.

குறிப்பாக 10 நிமிடங்களுக்கு மேல் ஆவி பிடிப்பது, மூக்கின் உள்ளே இருக்கும் சிறிய முடிகளை பாதிக்கும். முக்கில் 1000-100000 வரை இருக்கும் முடிகள் தான், தூசி மற்றும் பிற ஒவ்வாமைகளை வெளியில் இருந்து வடிகட்டி மூச்சுக்காற்று வழியாக உள்ளே செல்வதை தடுக்கின்றன. ஆனால் அதிக நேரம் ஆவி பிடிக்கும்போது, அந்த முடிகள் எரிந்துவிடக்கூடும், இதனால் ஒவ்வாமை மற்றும் பல சுவாச பிரச்சனைகளை ஏற்படும்.

கண்களை பாதிக்கும்:

நீண்ட நேரம் ஆவி பிடிப்பது, அடிக்கடி ஆவி பிடிப்பது போன்றவை கண்களை பாதிக்கக்கூடும். இது கண்களில் வறட்சி, வீக்கம், வலி, அரிப்பு, கூச்சம் போன்ற அசெளகரியங்களை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க: Reverse Prediabetes: இதையெல்லாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டாலே போதும்… ப்ரீ டயாபெடிஸ் ரிவர்ஸ் ஆகும்!

எனவே நீராவி கண்களைத் தாக்காமல் இருக்க ஐ பேடுகள் உள்ளன. இல்லையெனில், உங்கள் கண்களில் நீராவி படாமல் இருக்க வேறு வழியை முயற்சிக்கவும். பியூட்டி பார்லர்கள் போன்றவற்றில் ஆவி பிடிக்கும் போது, கண்களின் மேல் காட்டன் பேட்கள் போடப்படுவதற்கு இதுவே காரணம். ஈரமான டவலை கண்களுக்கு மேல் போட்டால் போதும்.

விக்ஸ், அமிர்தாஞ்சன் வேண்டவே வேண்டாம்:

கடையில் வாங்கும் விக்ஸ் மற்றும் அமிர்தாஞ்சன் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து ஆவி பிடிப்பதும் தவறானது. அதற்கு பதிலாக இவற்றை மூக்கில் தடவிக்கொண்டு வெந்நீரில் ஆவி பிடிக்கலாம். ஆனால் அவற்றை தண்ணீரில் போடாதீர்கள். துளசி போன்றவற்றை சேர்ப்பதால் எந்த பாதிப்பும் இல்லை. அதேபோல் எந்த மூலிகையாக இருந்தாலும் அதனை வெந்நீரில் போட்டால் மட்டும் போதும், அதிக நேரம் கொதிக்க வேண்டிய அவசியமில்லை.

ஆவிபிடிக்கும் பாத்திரத்தில் கவனம் தேவை:

பலர் புட்டுக்குடம் முதலியவற்றை நீராவி பிடிக்க பயன்படுத்துகின்றனர். இவற்றில் நீராவி மற்றும் வெப்பத்தை கட்டுப்படுத்துவது கடினம். இதன் காரணமாக, தீக்காயங்கள் ஏற்படும் அபாயம் அதிகம். கண்களுக்கும் தோலுக்கும் தீங்கு விளைவிக்கும். குறிப்பாக குழந்தைகள் ஆவி பிடிக்கும்போது, புட்டுக்குடம் போன்ற பாத்திரங்களை அடுப்பில் வைத்து உபயோகிக்கும் போது தீக்காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீராவி பிடிக்கக்கூடிய ஸ்டீமரை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. இவை வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் திறனையும் கொண்டிருக்கும்.

Image Source: Freepik

Read Next

Winter Stomach Problems: இந்த குளிருல வர வயிற்று வலி நீங்க இந்த ஆயுர்வேத வைத்தியங்களை ஃபாலோப் பண்ணுங்க.

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content