Diabetes Ayurvedic Treatment: சர்க்கரை நோயை குறைக்க மருந்து தேவையில்லை - இந்த ஆயுர்வேத மூலிகைகள் போதும்!

  • SHARE
  • FOLLOW
Diabetes Ayurvedic Treatment: சர்க்கரை நோயை குறைக்க மருந்து தேவையில்லை - இந்த ஆயுர்வேத மூலிகைகள் போதும்!


நம் உடலில் ஏற்படும் சிறு காயங்கள் கூட ஆற நீண்ட நேரம் எடுப்பது, திடீரென பார்வை இழப்பு, உடலில் அரிப்பு, காரணமே இல்லாமல் சோர்வாக இருப்பது ஆகியவை சர்க்கரை நோயின் ஆரம்ப அறிகுறிகளாகக் கருதப்படுகிறது. இந்த அறிகுறிகளை நீங்கள் கண்டால் இரத்த பரிசோதனை செய்வதோடு, மருத்துவரின் ஆலோசனையையும் பெற வேண்டும்.

ஒருவேளை பரிசோதனையில் உங்களுக்கு சர்க்கரை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால், தங்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த வேண்டும். சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும் சில ஆயுர்வேத மருந்துகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வெந்தயம்:

ஒரு ஸ்பூன் வெந்தயம் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்பகால நீரிழிவு நோயாளிகளுக்கு வெந்தயம் பரிந்துரைக்கப்படுகிறது.

வெந்தயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கணையத்தின் செயல்பாட்டிற்கு உதவும். இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கவும் உதவுகிறது.

படிப்படியாக நீரிழிவு மற்றும் உடல் எடையை குறைக்க உதவும். உண்மையில், வெந்தயத்தில் 0% சர்க்கரை உள்ளது. வெந்தயத்தில் உள்ள கசப்பு சர்க்கரை நோய்க்கு மருந்தாகிறது.

பாகற்காய்:

சர்க்கரை நோயாளிகளுக்கு பாகற்காய் சிறந்த உணவு. இது கணையத்தைத் தூண்டி இன்சுலினை சுரக்க வைக்கும். பாகற்காய், இன்சுலின் சுரப்பை மேம்படுத்தி, உடலின் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. தினசரி காலையில் வெறும் வயிற்றில் பாகற்காய் சாறு அருந்திவர, சர்க்கரைநோய் கட்டுப்படும்.

நாவல் பழ இலை:

நாவல் பழ இலைகள் மற்றும் விதைகள் சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படுகின்றன. இதில் உள்ள ஜம்போலன் என்ற தனிமம் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

வேப்ப இலை:

வேப்ப இலைகள் மற்றும் விதைகளை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது. இதில் உள்ள நிம்பின் என்ற தனிமம் சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது.

இலவங்கப்பட்டை:

சர்க்கரை நோயை போக்க சிறந்த வழிகளில் ஒன்று இலவங்கப்பட்டை. அதாவது, இலவங்கப்பட்டை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும். இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது மற்றும் உணவுக்குப் பின் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

இலவங்கப்பட்டை உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கவும், கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Image source: Freepik

Read Next

Wrong Food Combinations: மறந்தும் இந்த 9 பொருட்களை பாலுடன் சேர்த்து சாப்பிடாதீங்க!!

Disclaimer