நீரிழிவு கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதய கோளாறுகள், சிறுநீரக நோய்கள், கண் பிரச்சனைகள், நரம்பு தளர்ச்சி போன்ற பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. எனவே தலைசுற்றுவதை விட சர்க்கரை நோய் வராமல் கவனமாக இருப்பது நல்லது.
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழிவு நோய் என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அது மிகையாக இல்லாமல் எல்லைக் கோட்டில் சிறிதளவு இருந்தாலோ, அல்லது கொஞ்சம் அதிகமாக இருந்தாலோ அது ப்ரீ-டயாபடீஸ் எனப்படும்.
முக்கிய கட்டுரைகள்

நீங்கள் இரத்த சர்க்கரை பரிசோதனையை எடுத்துக் கொண்டால், அளவு 80 முதல் 110 வரை இருக்க வேண்டும். ஆனால் 111ல் இருந்து 120க்கு வந்தால் அதை சர்க்கரை நோய் என்று சொல்வதில்லை. அதனை ப்ரீ டயபடிக் என அழைக்கிறார்கள். அதாவது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலை ஆகும். நீரிழிவு நோய் இல்லாத நிலைக்கும், நீரிழிவு நோய் ஏற்பட்ட நிலைக்கும் இடையில் உள்ள நிலையை குறிக்கிறது. சர்க்கரை வியாதி வந்தால், அதைக் கட்டுப்படுத்தினால் ஒழிய முழுமையாக குணப்படுத்த முடியாது.
சீன சுகாதார அமைப்பின் FHS அறிக்கையின்படி, சாப்பிடுவதற்கு முந்தைய குளுக்கோஸ் 5.6-6.9 mmol/L ஆகவும், சாப்பிட்ட இரண்டு மணி நேரம் கழித்து இரத்த குளுக்கோஸ் 7.8-11.0 mmol/L ஆகவும் இருந்தால், நீங்கள் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். இந்த நிலையில் நல்ல உணவுப் பழக்கமோ உடற்பயிற்சியோ இல்லாவிட்டாலும், அடுத்த பத்து ஆண்டுகளில் டைப் 2 நீரிழிவு நோய் உருவாகும் அபாயம் இருப்பதாக எச்சரித்துள்ளது.
ஆனால் ஆயுர்வேத மருத்துவம் முன் நீரிழிவு நோயை (Prediabetes) மாற்ற உதவும் என்று ஆயுர்வேத மருத்துவர் தீக்ஷா பவ்சர் தெரிவித்துள்ளார். மேலும் ஆயுர்வேதம் மூலம் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதோடு, ப்ரீ-டயாபடீஸ் நோயை போக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள சில முக்கியமான குறிப்புகள் இதோ…
வெந்தயம்:
வெந்தயத்தில் ஃபோலிக் அமிலம், ரிபோஃப்ளேவின், தாமிரம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் ஏ, பி6, சி, கே போன்ற பல சத்துக்கள் உள்ளன. வெந்தயம் குளுக்கோஸ் அளவைக் குறைக்க பயன்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கை கூறுகிறது. வெந்தயத்தில் நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளன
வெந்தயத்தில் உள்ள 4-ஹைட்ராக்ஸிலூசின், அமினோ அல்கானோயிக் அமிலம், இன்சுலின் உற்பத்தியை அதிகரிக்கிறது மற்றும் செல்கள் இன்சுலினை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கிறது. வெந்தயத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் கொலஸ்ட்ராலும் குறையும். ஒருவேளை உங்களுக்கு ப்ரீ-டயாபடீஸ் இருந்தால், வெந்தயத்தை இரவில் ஊறவைத்து, வடிகட்டி, தண்ணீர் குடிக்கலாம். இல்லையெனில் வெந்தயத்தை வெந்நீரில் 10 நிமிடம் போட்டு மூடி வைத்து வடிகட்டிக் குடிக்கலாம்.
மிளகு:
உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் முக்கியமான மசாலாப் பொருட்களில் மிளகு முக்கிய பங்கு வகிக்கிறது. மிளகு இன்சுலின் சகிப்புத்தன்மை மற்றும் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
இதையும் படிங்க: நீங்கள் இரவில் லேட்டாக தூங்குபவரா? - இது உங்களுக்கான எச்சரிக்கை!
மிளகில் உள்ள 'பைப்பரின்' ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.பைபரின் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. ஃப்ரீ ரேடிக்கல்களால் கூட நீரழிவு வர சாத்தியக்கூறுகள் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். ப்ரீ-டயாபடீஸ் இருந்தால், கருப்பு மிளகை ஒரு சிட்டிகை மஞ்சளுடன் கலந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. இந்தப் பொடியை பாலில் சேர்த்தும் உட்கொள்ளலாம்.
இலவங்கப்பட்டை:
இலவங்கப்பட்டை இறைச்சி உணவுகளில் சுவை மற்றும் வாசனைக்காக பயன்படுத்தப்படுகிறது. இது இன்சுலின் சகிப்புத்தன்மையைக் குறைக்கிறது, உணவுக்குப் பிந்தைய இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. லவங்கப்பட்டையில் உள்ள ஹைட்ராக்ஸிசின்னமால்டிஹைடு என்ற கலவை இரத்தத்தில் உள்ள கெட்டகொழுப்பை படிப்படியாக குறைத்து, நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும். கொதிக்கும் நீரில் இரண்டு சிறிய இலவங்கப்பட்டையைச் சேர்த்து மீண்டும் கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு இந்தக் கலவையை வடிகட்டவும். இந்தக் கலவையை தினமும் உட்கொள்வது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும்.
மஞ்சள், நெல்லிக்காய்:
மஞ்சள் மற்றும் நெல்லிக்காயின் கலவையானது ப்ரீ-டயாபடீஸ் நிலையை மாற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும் என ஆயுர்வேத மருத்துவரான தீக்ஷா பவ்சர் கூறுகிறார். இது சர்க்கரை அளவை சமன் செய்கிறது. மேலுமிந்த கலவையானது உடலில் உள்ள அதிகப்படியான சளியை குறைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (Prediabetes) இருந்தால்.. சம அளவு நெல்லிக்காய் பொடியை மஞ்சளுடன் கலந்து வெறும் வயிற்றில் 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.
Image Source: Freepik