கொலஸ்ட்ராலை மடமடனு குறைக்க வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்ஸ் குடிங்க போதும்

What to drink first thing in the morning to reduce cholesterol: உடல் ஆரோக்கியத்திற்கு கொலஸ்ட்ரால் முக்கியமானதாக இருப்பினும், அது அதிகமாக இருக்கும் போது பிரச்சனைகள் தோன்றலாம். குறிப்பாக, கெட்ட கொழுப்பின் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவை விட உயர்ந்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். இதில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்களைக் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
கொலஸ்ட்ராலை மடமடனு குறைக்க வெறும் வயிற்றில் இந்த ட்ரிங்ஸ் குடிங்க போதும்

How do you lower cholesterol on an empty stomach: இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறையின் காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பும் அடங்கும். ஆம். உண்மையில் ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக் கொள்வது, நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கைமுறை அல்லது போதுமான உடல் செயல்பாடு இல்லாதது உள்ளிட்டவை உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்புக்கு வழிவகுக்கிறது.

இதற்குப் பதிலாக, நமது உணவில் நார்ச்சத்து, பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை அதிகமாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளிலிருந்து நாம் விலகி இருந்தால், இரத்தத்தில் நல்ல கொழுப்பு அதிகரித்து கெட்ட கொழுப்பு கட்டுப்படுத்தப்படுகிறது. இதில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணங்களையும், அதைக் குறைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்களைக் குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: இரவில் தூங்கும் போது இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப உங்களுக்கு இரத்த அழுத்தம் அதிகமா இருக்குனு அர்த்தம்

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள்

நம் உடலில் இருக்கக்கூடிய இரத்த நாளங்களில் கெட்ட கொழுப்பு உருவாவதற்கு முக்கிய காரணம், அது உட்கொள்ளும் உணவு மற்றும் அதில் காணப்படும் கொழுப்பு உள்ளடக்கம் எனக் கூறப்படுகிறது. இவை மிகவும் ஆபத்தானவையாகும். இவை இதயத்துடன் இணைக்கும் அனைத்து நரம்புகளிலும், அதாவது இரத்த நாளங்களிலும் குவிந்து, இதயத்திற்கு வழங்கப்படக்கூடிய இரத்த ஓட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தலாம். இதயத்தின் தமனிகளும் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.

கொழுப்பு என்றால் என்ன?

இது மெழுகு போன்ற ஒட்டக்கூடிய ஒரு வகையான கொழுப்பு ஆகும். எனினும், உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளது. ஒன்று நல்ல கொழுப்பு ஆகும். இவை உடலில் புதிய செல்கள் மற்றும் ஹார்மோன்களை உருவாக்க வழிவகுக்கிறது.

மறுபுறம், கெட்ட கொழுப்பு உடலில் பக்கவாதம், மாரடைப்பு மற்றும் இதய நோய்கள் போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கலாம். எனவே, இந்த நோயைக் கட்டுப்படுத்த இயற்கையாகவே கிடைக்கக்கூடிய சில பொருள்களைப் பயன்படுத்தி தயாரிக்கக்கூடிய சில பானங்களை குடிக்கலாம். இவை நமது இரத்த நாளங்களில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

கெட்ட கொழுப்பைக் குறைக்க காலையில் குடிக்க வேண்டிய பானங்கள்

வெந்தய விதைகள் ஊறவைத்த தண்ணீர்

உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்த உதவும் பல பொருள்கள் வெந்தய விதைகளில் உள்ளது. முக்கியமாக, இதில் அதிகளவிலான நார்ச்சத்துக்கள் உள்ளது. இவை குடலில் உள்ள கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் குறைக்கலாம். மேலும், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பாக இரவு முழுவதும் வெந்தய விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்த பிரச்சனைக்கு முற்று புள்ளி வைக்க இதை சாப்பிடவும்..

எலுமிச்சைச் சாறு மற்றும் ஆளி விதை பானம்

எலுமிச்சையில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும் ஆளி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிகளவிலான லிக்னான்கள் உள்ளது. இவை எல்டிஎல் கொழுப்பைக் குறைக்க மிகவும் நன்மை பயக்கும். ஆளி விதைகளை விதைகள், பவுடர், மாத்திரைகள், காப்ஸ்யூல்கள், மாவு மற்றும் எண்ணெய்கள் போன்ற வடிவில் கிடைக்கிறது. இதற்கு காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு கலந்த ஆளி விதைகளை எடுத்துக் கொள்லலாம்.

கேரட் சாறு

இது ஊட்டச்சத்துக்களின் சிறந்த இயற்கை மூலமாகும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின் கே1 போன்றவை நிறைந்துள்ளது.

பீட்ரூட்-கேரட் சாறு

பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் உள்ளது. இவை இரத்தத்துடன் வினைபுரிந்து நைட்ரிக் ஆக்சைடாக மாறுகிறது. எனவே அதிக கொழுப்பால் பாதிக்கப்பட்டவர்கள் கேரட் மற்றும் பீட்ரூட் சாற்றைத் தயார் செய்து குடிக்கலாம்.

அது மட்டுமல்லாமல், இந்த சாறு நரம்புகளில் இரத்தக் கட்டிகளை குணப்படுத்த உதவுகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இவை உயர் இரத்த அழுத்த பிரச்சனையை கட்டுக்குள் வைத்திருக்க வழிவகுக்கிறது. இது தவிர, கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பனீர் சாப்பிடலாமா.? நிபுணரிடம் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்..

Image Source: Freepik

Read Next

ஒரு சிட்டிகை கருப்பு மிளகு பவுடருடன் 1 ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

Disclaimer