
$
Is steam good for breathing difficulty: குளிர் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போதெல்லாம் நீராவி பிடிக்குமாறு சிறு வயதில் இருந்தே வீட்டில் உள்ளவர்கள் கூறி கேள்விப்பட்டிருப்போம். அதே போல மார்பு சளி மற்றும் கொரோன தொற்றின் போது மருத்துவர்களும் நீராடி பிடிக்க பறித்துரைத்தார்கள். நீராவி பிடிக்கும் தண்ணீரில், தைல இலை, மஞ்சள், வேப்பிலை துளசி போன்ற மூலிகை பொருட்களை சேர்த்து ஆவி பிடிப்போம்.
ஆவி பிடிப்பதால் சளி மற்றும் சுவாச பிரச்சினையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும் என்பது உண்மை தான். நீராவி பிடிப்பதால் சளி, இருமல் மட்டும் அல்ல, உங்கள் முழு சுவாச அமைப்புக்கும் நல்லது. இது உங்கள் சுவாச பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், உங்களை அறியாமலேயே பல நன்மைகளையும் பெறலாம். அந்தவகையில், நீராவி எடுத்துக்கொள்வதால் ஏற்படும் சில நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Bronchiolitis Home Remedies: மூச்சுக்குழாய் அழற்சியால் அவதியா? வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம்?
நீராவி பிடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
சளியை குறைக்கும்
நீராவி பிடிப்பதால் சளி பிரச்சினை குறையும். நீராவி நாசிப் பாதைகள், தொண்டை மற்றும் நுரையீரலில் உள்ள சளியைத் உருக்கும். இதனால் சளி எளிதாக வெளியேற்றும். உங்களுக்கு மூச்சுக்குழாய் அழற்சி, சைனசிடிஸ் அல்லது ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் இருந்தால் தினமும் நீராவி பிடிப்பது நல்லது.
மூச்சடைப்பு
மார்பு சளி அதிகமாக இருந்தால், நெஞ்சில் கனமாக உணர்வோம். இதற்கு ஆவி பிடிப்பது மிகவும் நல்லது. மருந்து சளி பிரச்சினையை சரி செய்ய சிறிது நேரம் எடுக்கும். ஆனால், ஆவி பிடிப்பதன் மூலம் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
நீராவி பிடிக்கும் போது, சூடான மற்றும் ஈரப்பதமான காற்று சுவாசக் குழாயில் உள்ள சளி மற்றும் அடைப்பை தளர்த்த உதவுகிறது. எனவே, உங்களுக்கு சளி, சைனசிடிஸ் அல்லது ஒவ்வாமை இருந்தால் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது நீங்கள் சுவாசிப்பதை எளிதாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Anal Itching Remedies: ஆசனவாய் அரிப்பை போக்கும் சூப்பர் வீட்டு வைத்தியம்!
காற்றுப்பாதையை ஈரப்பதமாக்கும்
நீராவி பிடிக்கும் போது, காற்றுப்பாதைகளின் ஈரப்பதத்தை பராமரிக்கவும் உதவுகிறது. பொதுவாக குளிர் நாட்களில், மக்கள் நீண்ட நேரம் ஹீட்டர் போன்றவற்றை இயக்குகிறார்கள், இதனால் காற்று மிகவும் வறண்டு போகும்.
இதனால் சுவாச பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். நிம்மதியாக சுவாசிப்பதற்கு கூட மிகவும் கடினமாகிவிடும். இந்நிலையில் ஆவி பிடிப்பது, ஈரமான காற்று உங்கள் சுவாசக்குழாய்க்குள் நுழைகிறது. இது சுவாசப்பாதையை குளிர்விக்கிறது மற்றும் வீக்கத்தையும் குறைக்கிறது.
தொண்டை புண்களை ஆற்றும்
ஒரு நபர் சளி அல்லது இருமல் பற்றி புகார் செய்தால், அவர் சுவாச பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இதனால், அவர் பல பிரச்சனைகளை சந்திக்கிறார். ஆனால், நீராவி பிடிக்கும் போது, அது தொண்டை புண்களை ஆற்றவும் உதவுகிறது. நீங்கள் நீராவியை உள்ளிழுக்கும்போது, அது தொண்டையை ஈரப்பதமாக்குகிறது மற்றும் மென்மையாக்குகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Honey For Face Wrinkles: முகச்சுருக்கத்தால் பிரச்சனையா? தேனுடன் இந்த பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க
இந்நிலையில், இது அசௌகரியம் மற்றும் எரியும் உணர்வைக் குறைக்க உதவுகிறது. கொதிக்க வைத்த வெந்நீரில் ஒரு சிட்டிகை உப்பைச் சேர்ப்பதும் தொண்டை வலிக்கு கூடுதல் நிவாரணம் அளிக்கும்.
Pic Courtesy: Freepik
Read Next
Honey For Face Wrinkles: முகச்சுருக்கத்தால் பிரச்சனையா? தேனுடன் இந்த பொருள் மட்டும் சேர்த்துக்கோங்க
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version